சூப்பர் மோடிஜி.. அசத்தும் பென்சன் திட்டங்கள்.. அதிரடியாக களத்தில்.. பலே பலே தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் தடாலடியாக பல முடிவுகளை தற்போது எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.

 

எப்பவும் சொல்ற திட்டம் தானா என்று நினைக்காதீங்க பாஸ்? இந்த புதிய பென்சன் திட்டத்தில் சிறிய கடைக்காரர்கள், மற்றும் சிறு வியாபாரிகள் அதோடு கிரானா ஸ்டோர் வைத்திருப்போருக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மோடிஜி.. அசத்தும் பென்சன் திட்டங்கள்.. அதிரடியாக களத்தில்.. பலே பலே தான்!

அது மட்டும் இல்லையாம் இந்த புதிய திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாம். அதோடு இந்த திட்டம் 60 வயதை தொட்டவர்களுக்கு தான் பொருந்துமாம். ஆக மொத்தம் இந்த புதிய பென்சன் திட்டத்தின் கீழ் 3 கோடி வர்த்தகர்கள் பயன் அடைவார்களாம்.

அதோடு சிறு கடைக்காரர்களும், சுயதொழில் முனைவோரும், 1.5 கோடி ரூபாய்க்கு கீழ் ஜி.எஸ்.டி வினியோகம் கொண்ட சில்லறை வணிகர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாமாம், ஆனால் அவர்கள் 18 - 40 வயதுடையோர்களாக இருக்க வேண்டும் என்பது தான் டிவிஸ்டே.

அதோடு இந்த பென்சன் திட்டத்தினை பெற குறைந்த பட்ச ஆவணங்கள் இருந்தால் போதுமாம். ஆமாப்பு இந்த திட்டத்தில் இணைபவரின் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரம் இருந்தாலே போதுமானாதாம்.

அதோடு இந்த திட்டத்தினை நாடு முழுவதிலும் உள்ள 3.25 லட்சங்கள் பொது சேவை மையங்கள் மூலம், இந்த பென்சன் திட்டத்திற்காக பதிவு செய்து கொள்ளலாமாம்.

இது பென்சன் திட்டம் குறித்து, அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் காந்தெல்வால் கூறுகையில், இந்த பென்சன் திட்டம் வர்த்தகர்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்து வந்தது. அது தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது, இது வர்த்தகர்களுக்கு மிக மகிழ்ச்சியை கொடுத்துள்ளது எனவும் கூறியுள்ளாராம்.

 

அதோடு தற்போது இன்னொரு புதிய தன்னார்வ பென்சன் திட்டத்தினை வகுத்திருப்பதாகவும், இத்திட்டத்தில் 50 : 50 என தன்னார்வா ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வயதுடைய குறிப்பிட்ட பங்களிப்பும் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பொருத்தமான பங்களிப்புகளும் உள்ளனவாம்.

சரி அது என்ன தன்னார்வ பெண்ட்சன் திட்டம்ன்னு சொல்றீங்களா? இப்ப நீங்கள் 50 : 50 தன்னார்வ திட்டத்தில் சேருகிறீர்கள் என்றால், உதாரணத்துக்கு மாதம் நீங்கள் 100 ரூபாய் செலுத்துகிறீர்கள் என்றால், அரசு அதன் தரப்பிலிருந்து 100 ரூபாய் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 5 கோடி வர்த்தகர்கள் இணைவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளாராம். நல்ல விஷயம் தானேப்பு நடக்கட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Narendra Modi's new pension scheme for kirana shopkeepers to 3,000 monthly pension

The new Union Cabinet, in its first meeting, approved a pension scheme to provide a minimum assured pension of Rs.3000 per month to all small shopkeepers and retail traders.
Story first published: Tuesday, June 4, 2019, 7:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X