என் பொண்ண 1-ம் வகுப்பு சேத்திருக்கேன், ஃபீஸ் சொல்லுங்க..? ஒரு கிலோ Plastics பாட்டில்..! என்னது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஸ்ஸாம் : இந்தியா, மக்கள் தொகையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப, அனைவருக்கும் அரசே கல்வியை வழங்க முடியாத நிலை ஏற்பட்ட போது கல்வியில் தனியார் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாத காரணியாக உருவெடுத்தது.

எனினும் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் பள்ளிகளின் ராஜ்யம் தான் தற்போது நடந்து வருகிறது. அரசு என்னதான் குறிப்பிட்ட கட்டணங்களை மட்டுமே வகுத்திருந்தாலும், தனியார் பள்ளிகளை பொருத்த வரை அவர்களின் தனி சாம்ராஜ்யம் தான். அவர்கள் சொல்வது தான் கட்டணம். இந்த நிலையில் இதற்கெல்லாம் வெறும் பிளாஸ்டிக் (Plastics) குப்பைகளை கட்டணமாக வாங்கிக் கொண்டு பள்ளி அஸ்ஸாமில் உள்ளது.

 

ஆமாங்க.. நாம் தான் சரியாக படிக்கவில்லை. நம் குழந்தையாவது நன்றாக படிக்க வேண்டும். என்ற ஆதாங்கத்திலேயே குழந்தைகளை அதிக கட்டணமாக இருந்தாலும் கஷ்டப்பட்டேனும் படிக்க வைக்கின்றனர். ஆனால் இது போன்ற சூழ்நிலைக்கு மாறானது அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் ஒரு தம்பதியால் நடத்தப்பட்டு வரும் அக்ஷர் பள்ளி. ஏன் மற்ற பள்ளிகளுக்கு ஒரு எடுத்துக் காட்டும் கூட.

இலவச கல்வி தான் நோக்கம்

இலவச கல்வி தான் நோக்கம்

2013-ம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து இந்தியா வந்த மெஸின் முக்தர் (30 வயது ) என்பவர், ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்பதே இவரின் நோக்கமாம். இந்த நிலையில் முக்தரும், பர்மிதா சர்மா என்ற சமூக ஆர்வலருடன் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு தான் உருவெடுத்தது இந்த அக்சர் பள்ளி.

சமூக ஆர்வலர்கள்

சமூக ஆர்வலர்கள்

மெஸின் முக்தர் ஒரு விண்வெளி பொறியாளாராக அமெரிக்காவில் வேலை செய்து வந்தவர், அதே அவரது மனைவி பர்மிதா சமூக சேவை குறித்த மாஸ்டர் டிகிரியை முடித்தவர். இதில் முக்தருக்கு நியூயார்க்கில் இருக்கும் போது இருந்தே இப்படியொரு ஆசையாம், இதே பர்மிதா ஏற்கனவே ஒரு பள்ளியில் தான் பணியாற்றியும் இருக்கிறார். ஆக இருவர் மனதிலும் ஒரே எண்ணம் தான் ஒரு நல்ல தரமான பள்ளியை உருவாக்க வேண்டும் என்பதே.

தனித்துவமான பள்ளி
 

தனித்துவமான பள்ளி

அக்சார் பள்ளி குறிப்பாக ஏழை மாணவர்கள், பள்ளியிலிருந்து பாதியில் வெளியேறியவர்கள் போன்ற பலரும் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். அதோடு இந்த தம்பதியர் இது குறித்து கூறும் போது அக்ஷர் பள்ளி சாதாரண ஒரு பள்ளியைப்போல் இல்லாமல் அனைத்து விதத்திலும் தனித்துவமாக திகழ்கிறது. இங்கு சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனினும் பொருளாராத ரீதியில் உள்ள பிரச்சனையால் எளிய முறையில் மரத்தால் ஆன வகுப்பறையிலேயே மாணவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர்.

சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு முன்னுரிமை

சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு முன்னுரிமை

அங்கு படிப்பைத் தாண்டிச் சுற்றுச்சூழல், நடனம், இசை, ஓவியம், கைவினைப் பொருள்கள், விளையாட்டு, புகைப்படம் எடுத்தல் மற்றும் சமூகம் மற்றும் கேளிக்கை பொருட்கள் உற்பத்தி செய்தல், எம்பிராய்டரி, வேளாண்மை, நடனம், தோட்டக்கலை, சோலார் பேனலிங்க் மற்றும் மறுசுழற்சி மற்றும் மின்னனுவியல் சார்ந்த பல விஷயங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனில், வயதில் மூத்த மாணவர்கள்தான் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்.

பள்ளிக் கட்டணம் பிளாஸ்டிக் கழிவுகளே

பள்ளிக் கட்டணம் பிளாஸ்டிக் கழிவுகளே

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்தப் பள்ளியில் படிக்கக் கட்டணமாக, மக்கள் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பைகளே வாங்கப்படுகிறது. அட ஆமாங்க.. மாணவர்கள் அனைவரும் வாரம் ஒருமுறை அந்த பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வர வேண்டுமாம். இதுதான் பள்ளிக் கட்டணமாம். ஆமாங்க வாரம் 20 - 25 பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கொண்டு வந்து தருதலே கட்டணமாம்.

படிக்க வசதியில்லாத குழந்தைகள்

படிக்க வசதியில்லாத குழந்தைகள்

இது பற்றி முக்தர் கூறுகையில், இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள், படிக்க வசதியில்லாத சின்னஞ்சிறு பிள்ளைகள் மற்றும் பலரும் குவாரிகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வந்தவர்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இந்த மாணவர்களுக்கு இலவசமாகத் தரமான கல்வி தர வேண்டும் என நாங்கள் முடிவு செய்து உருவாக்கியதுதான் இந்த அக்ஷர் மன்றம். இங்கு 4 முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த குழந்தைகள் அனைவரும் கவுஹாத்திக்கு அருகில் உள்ள பாமோஹி, போரகோன், கோர்ச்ஹுக் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்கிறார் முக்தர்.

அன்பான விதிமுறைகள்

அன்பான விதிமுறைகள்

எங்கள் பள்ளியில் கட்டணமாக வாரம் ஒருமுறை பிளாஸ்டிக் பைகளைப் பெறுகிறோம். இதன் மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அவற்றை எரிக்கக் கூடாது மறுசுழற்சி செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை எளிதில் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும். அதோடு எங்களுக்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்வோம். மீதமுள்ளவற்றைப் பள்ளியினுள்ளே அழகு பொருட்கள் செய்ய பயன்படுத்துவோம். மாணவர்களையும் அவர்களை வைத்துப் பெற்றோர்களையும் இனி பிளாஸ்டிக்கை எரிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்துள்ளோம். மாணவர்கள் தங்களின் வீடுகளில் குறைவான அளவில் பிளாஸ்டிக்கை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளோம் என்கிறது இந்த பள்ளி. இது தான் இந்த பள்ளியின் அன்பான விதிமுறையும் கூடவாம்...

பள்ளியில் செயல் முறை பாடங்களே அதிகம்

பள்ளியில் செயல் முறை பாடங்களே அதிகம்

எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் ரூ.100 முதல் 150 வரை கல்குவாரிகள் வேலைக்கு சென்றவர்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து விட்டால், குடும்பம் வறுமை அதிகரிக்கும், இதனால் இவர்களின் இந்த பள்ளிப் படிப்புக்கு இது முற்றுப்புள்ளியாகி விடக்கூடாது என்பதற்காகவே, வறுமையைத் தடுக்கும் வகையிலும் அதை எதிர்த்துப் போராடும் வகையிலும் எங்கள் பள்ளியில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செய்முறை பாடங்கள் அதிகம் கற்பிக்கப்படும். வாரம் ஒருமுறை மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவோம். செய்முறை தேர்வின் மூலம் மாணவர்கள் தங்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். இப்படியொரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளோம் என்கிறார் பர்மிதா.

ஆரம்பத்தில் 20 மாணவர்கள் தான்

ஆரம்பத்தில் 20 மாணவர்கள் தான்

இந்த பள்ளி ஆரம்பத்தில் வெறும் 20 மாணவர்களுடன் ஆரம்பித்தோம். ஆனால் தற்போது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். அதோடு இங்கு 8 மூங்கில் குடிசைகள் தான் பள்ளிகளாக உள்ளன. தற்போது உள்ள டிஜிட்டல் வகுப்பிற்காக சிலவற்றை மற்ற சமூக ஆர்வலர்கள் மூலம் வாங்கியுள்ளதாகவும் இந்த பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. எப்படியோங்க.. இந்த பள்ளி மற்ற பள்ளிகளுக்கு ஒரு நல்ல முன் உதாரணம் என்பதில் தவறில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: plastic
English summary

Assam School Accepts Plastics As School Fee. What A Brilliant idea!

Mazin Mukhtar and his wife Parmita Sarma run the Akshar School at Guhawati in Assam. A unique thing about it is that if a student brings in 25 pieces of plastic waste, their school fee is waived off.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more