சௌக்கிதார் மோடியுடன் டீ குடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்.. எதிர்பார்ப்பில் மக்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நீங்கள் அதிகளவில் வரி செலுத்துபவரா? அப்படின்னா விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடனோ அல்லது நமது புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனோ டீ விருந்தில் கலந்து கொள்ளாலாமாம்.

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு 2.0 அரசு இரண்டாவது முறையாக தலைமையேற்றதிலிருந்து பல அதிரடியான தகவல்கள் வெளியாகி வண்ணமே உள்ளன.

சௌக்கிதார் மோடியுடன் டீ குடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்.. எதிர்பார்ப்பில் மக்கள்

அதன் ஒரு பகுதியாக அதிக வருமான வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அதே சமயம் அதிக வருமான ஈட்டி வரி செலுத்துவதை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியுடனோ அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனோ தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாம் என்று செய்திகள் பரவலாக வெளியாகி வருகின்றன.

இதில் குறிப்பாக சென்ற ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது முறையாக கணக்கு காண்பித்து வரி செலுத்தியவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பினை அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக அரசுக்கு தொடர்ந்து வரியை ஒழுங்காக செலுத்தி வருபவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கி வந்தது. எனினும், இதற்கான அறிவிப்பை பட்ஜெட் தாக்கலின் போது மோடி 2.0 அரசு, புதியதாக நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் ஒரு வகையில் வருமான வரித்துறையினரையும் ஊக்கப்படுத்தும் என்றும், அதிக வரி செலுத்துவோருக்கும் இது ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் 12லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பாதிக்கும் தனி நபர்களுக்கு 10 சதவிகித கூடுதல் கட்டணமும், இதுவே ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 15 சதவிகித வரியை அதிகமாக சம்பாதிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் வர்த்தகத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் வருமானத்தை அதிகரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதியதாக நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன் ஜீலை5ல், 2019 - 2020க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மோடி 2.0 அரசின் முதல் முழு பட்ஜெட் என்பது கவனிக்கதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Get ready for a tea session with Narendra Modi

Are you a high-income taxpayer? Super, will soon you may be invited to have tea with Prime Minister Narendra Modi or Finance Minister Nirmala Sitharaman.
Story first published: Wednesday, June 5, 2019, 15:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X