மோடியின் சமாதான புறா.. டிரம்பிடம் பலிக்குமா.. favourable trade package சலுகை அளிக்கும் இந்தியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக அளித்து வந்த ஜி.எஸ்.பி வர்த்தக சலுகையை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பறித்து விட்ட நிலையில், இந்த திட்டமானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

எனினும் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்தியா இது குறித்து பெரிதாக எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அந்த சலுகைகள் பறிப்பு ஒரு புறம் இருந்தாலும், இந்தியா தற்போது "favourable trade package" என்ற சலுகையை அமெரிக்காவுக்கு அளிக்க முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால பொருட்கள் பயன் வர்த்தகம் பயன் அடையும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இந்தியா தற்போது இறங்கியுள்ளதையே இது காட்டுகிறது. அது மட்டும் அல்ல இந்த புதிய பேக்கேஜ் திட்டத்தில் அமெரிக்காவின் வேளாண் பொருட்கள் மற்றும் பால் உற்பத்தி பொருட்களுக்கு, அதிக சந்தை வாய்ப்புகளை இதன் மூலம் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறதாம்.

மோடி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்

மோடி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்

எனினும் இது குறித்து முழுமையான அறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்து கலந்து கொள்ள திட்டமிடப்பட்ட ஜீன் 28 மற்றும் 29 தேதியில் ஜப்பானில் நடக்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவுக்கு உற்சாகம் அளிக்கவில்லை

அமெரிக்காவுக்கு உற்சாகம் அளிக்கவில்லை

மேலும் அமெரிக்கா ஜி.எஸ்.பி நலன்களை திரும்ப பெறும் என கடந்த மார்ச் மாதத்தில் அச்சுறுத்திய போதே, இது போன்ற வர்த்தக சிறிய வர்த்தக தொகுப்பை அமெரிக்காவிடம் இந்தியா வழங்கியது. எனினும் டிரம்ப் நிர்வாகம் இதை நிராகரித்து, இந்தியாவுக்கு கிடைத்து வந்த சலுகையை துண்டித்தது. ஆக அமெரிக்காவுக்கு முன்னர் வழங்கிய சலுகைகள் உற்சாகத்தினை அளிக்கவில்லையாம். ஆகவே தற்போது அமெரிக்கா பொருட்களின் மீது மற்றொரு வரிச்சலுகை அளிக்க திட்டமிட்டுள்ளது இந்தியா. இது கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வெளியுறவு துறையுடன் பேச்சு வார்த்தை
 

அமெரிக்கா வெளியுறவு துறையுடன் பேச்சு வார்த்தை

மேலும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பே இந்தியா அடுத்த முறை வரவிருக்கும் போது இது குறித்த விரிவான பேச்சு வார்த்தையினை தொடரவிருக்கிறதாம். எனினும் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தேதி இன்னும் எதுவும் அறிக்கப்படவில்லை.

நிலவி வரும் வர்த்தக பற்றாக்குறை

நிலவி வரும் வர்த்தக பற்றாக்குறை

அமெரிக்கா சீனா இடையே நிலவி வர்த்தக ஒப்பந்த பிரச்சினை ஒரு புறம் மிக மோசமாக போயிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜப்பான் மற்றும் ஐரோப்பா நாடுகள் அதன் வர்த்தக பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஆட்சி காலம் முடிவடையும் காலத்தில் தான் இந்த பிரச்சினை முடுக்கிவிடப்பட்டது.

பதிலளிக்க முடியவில்லை

பதிலளிக்க முடியவில்லை

இந்த நிலையிலேயே, அமெரிக்கா இந்தியாவை வர்த்தக ஒப்பந்ததிற்கு வரும் படி அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் தான் சரியான பதிலை கொடுக்க முடியாத நிலையில் சலுகைகளை பறித்துக் கொண்டது அமெரிக்க என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வர்த்தகர்கள் கவலை

வர்த்தகர்கள் கவலை

எனினும் அமெரிக்கா ஒரு புறம் ஜி.எஸ்.பி சலுகையை பறித்தாலும், ஒரு புறம் அமெரிக்க தொழில் ஆதரவை இந்தியா பெற்றுக் கொண்டுதான் உள்ளது. இது குறித்து அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனராம்.

வரிச்சலுகையை நீட்டிக்க வேண்டும்

வரிச்சலுகையை நீட்டிக்க வேண்டும்

சில நாடுகள் இந்த வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், இந்தியாவுக்கு ஒரு கட்டமைப்பு அணுகுமுறையை வழங்க வேண்டும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த மிக உபயோகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

FTA வரிச்சலுகையை நீட்டிக்க வேண்டும்

FTA வரிச்சலுகையை நீட்டிக்க வேண்டும்

அதோடு இந்தியாவில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஆக நீண்ட காலத்திற்கு இந்தியாவில் FTA வரிச்சலுகை உடன் படிக்கையை நீட்டிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா இந்தியா மூலோபாய கூட்டுறவு அமைப்பு (USISPF) அமைப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான முகேஷ் தெரிவித்துள்ளார்.

$500 பில்லியன் வர்த்தகத்திற்கு வழிவகுக்கும்

$500 பில்லியன் வர்த்தகத்திற்கு வழிவகுக்கும்

அதோடு இந்த FTA வரிச்சலுகை, இந்த இரு தரப்பினருக்கும் ஒரு குறுகிய கால தீர்வை கொடுக்கும். இதன் மூலம் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்திற்கு இது வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது. இது இந்த இரு நாடுகளுக்கும் நன்மையே தரும் என்றும் கருதப்படுகிறது.

கவலை கொள்ளும் வரி விதிப்புகள்

கவலை கொள்ளும் வரி விதிப்புகள்

மேலும் இதுகுறித்து அமெரிக்க இந்தியா வணிக கவுன்சில் தலைவர் நிஷா பிஸ்வால் கூறுகையில், அமெரிக்கா சேம்பர்ஸ் ஆப் காமர்ஸின் பிரதான கவலையே இது தான். இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் சந்தை அணுகல், மருத்துவ சாதனங்கள் மீதான விலைக் கட்டுபாடுகள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் மீதான வரிவிதிப்புகள் மீது கவலை கொள்ளும் விதமாக உள்ளன என்றும் கூறியுள்ளார். எனினும் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படக்கூடிய விஷயம் தான். தொடர் பேச்சு வார்த்தை மூலம் இது விரைவில் தீர்க்கப்படலாம் என்றும் நிஷா கூறியுள்ளார்.

வர்த்தக சலுகை ரத்து

வர்த்தக சலுகை ரத்து

கடந்த 1975ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை அமெரிக்கா அரசு துண்டித்தது. இந்த நிலையில் ஜி.எஸ்.பி வர்த்தக சலுகையை இன்றிலிருந்து ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுடன் தான் அமெரிக்கா அதிகளவில் வர்த்தகம் செய்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் அமேசான், வால்மார்ட், கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் தன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன என்பது கவனிக்கதக்கது.

டிரம்ப் ஒப்புக் கொள்வாரா?

டிரம்ப் ஒப்புக் கொள்வாரா?

இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில, தற்போது வெளிவந்துள்ள அறிக்கை சற்றே நிம்மதியை கொடுத்திருந்தாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வியும் ஒரு புறம் எழுகிறது. இந்தியா 46 பில்லியன் டாலர் மதிப்பிலான டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இந்தியா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வரிச்சலுகையை பெற்று வருகிறது.

ஜி.எஸ்.பி ரத்து குறிப்பிட்ட துறைகளை பாதிக்கும்

ஜி.எஸ்.பி ரத்து குறிப்பிட்ட துறைகளை பாதிக்கும்

அதோடு தோல், நகை, பொறியியல் நகை தொடர்பான பொருட்கள் மீதான ஜி.எஸ்.பி சலுகையை நீக்கியுள்ளதால், இது இந்த துறைகளின் மீதுள்ள வேலைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt now plans to offer a ‘better’ package to Trump

India has decided to offer yet another “favourable trade package” to the America, after the Trump administration withdrew trade benefits given to New Delhi under the GSP Programme.
Story first published: Wednesday, June 5, 2019, 13:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X