அடிச்சாலும் புடிச்சாலும் அமெரிக்காதான்.. கறாராக நிற்கும் இந்திய ஐ.டி ஊழியர்கள்.. அதிகரிக்கும் மோகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : என்னதான் அமெரிக்கா அடிச்சாலும் துரத்தினாலும் நாமலும் அமெரிக்காவ விடுறதா இல்ல, அமெரிக்காவும் இந்திய ஐ.டி மக்கள விடுறதா? இல்ல. ஆமாங்க.. அண்மையில் வெளிவந்த ஆய்வின் படி ஆண்டுக்கு ஆண்டு அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை செய்ய மக்கள் தொடர்ந்து ஆர்வமா தான் இருந்துட்டு வர்றாங்களாம்.

 

இதற்கு உதராணம், கடந்த 2019ம் ஆண்டில் முதல் காலாண்டில் மட்டும் அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலைக்காக சென்றவர்களின் விகிதம் 9.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாம்.

அடிச்சாலும் புடிச்சாலும் அமெரிக்காதான்.. கறாராக நிற்கும் இந்திய ஐ.டி ஊழியர்கள்.. அதிகரிக்கும் மோகம்

இதுவே இதற்கு முந்தைய ஆண்டு 2018ல், இதே காலாண்டில் 9.3 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாம்.

இதற்கு காரணம் கடந்த ஆண்டு அமெரிக்காவின் வேலை வாய்ப்புக்கான சந்தைகள் மிக வலுவாக இருந்தனவாம். அதோடு மற்ற நாடுகளோடு ஒப்பிடும்பொது அமெரிக்காவே ஈர்க்கும் விதமாகவும் இருந்ததாக இந்த அறிக்கைகள் கூறுகின்றன.

அதிலும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல வகையில் இந்த குடியேற்றத்திற்கான விசாக்களில் மறுசீரமைப்பை கொண்டு வந்த போதிலும் கூட அமெரிக்காவின் மீது ஈர்ப்பு குறையவில்லையாம். இது மிகுந்த ஆச்சர்யத்தை கொடுக்கிறது என்றும் இந்த ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் இந்த இந்தியாவில் இருந்து வெளி நாடுகளில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதோடு இவ்வாறு வெளி நாடுகளில் வேலை தேடுவதில் அமெரிக்கா முதலிடத்திலும் இரண்டவது இடத்தில் இங்கிலாந்தும் மற்றும் ஜெர்மனி பிலிப்பைன்ஸ் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளதாம்.

மூன்றாம் முறையாக வட்டியைக் குறைத்த RBI..! காரணம் சுணங்கித் திரியும் இந்தியப் பொருளாதாரம்..!

எனினும் இந்த ஆர்வம் தற்போது குறையத் தொடங்கியுள்ளதாகவும் முன்னர் இருந்தது போல அல்லாமல் அமெரிக்காவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் மற்றோரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலை தேடுவது மிகவும் குறைந்துவிட்டதாகவும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா
English summary

Indian IT peoples interest in America IT jobs wanes

Job seekers in India accounted for 3.7% of all clicks for US tech postings in last April. Also second were UK, Germany and Philippines rounded of next levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X