சம்பளம் வாங்குவோர் கவனத்துக்கு.. வருமான வரி தாக்கல் செய்ய Form 16.. கெடு நீட்டிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : வருமான வரி என்பது, தங்கள் அதிகார எல்லைக்குள் தனிநபர்களாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்ட வருவாய்க்கு, அரசு விதிக்கும் வரி ஆகும். இந்த வருமான வரிகள் அரசாங்கங்களுக்கான வருவாய் ஆதாரமாக உள்ளன. இப்படி விதிக்கப்படும் வருமான வரியானது மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு அளிக்கும் வரியாகும்.

இந்த வரி ஒவ்வொருவருக்குமான கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். அதில் மாத சம்பளம் வாங்குவோர் ஆண்டுதோறும் ஜூலை31ம் தேதிக்குள் அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற நிலையே இருந்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டு, கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் படிவமான 16 (Form 16) வழங்குவதற்கான கெடு தேதியை வரும் ஜீன் 15ம் தேதியில் இருந்து ஜீலை 10ம் வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

TDS தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு

TDS தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு

அதோடு கடந்த 2018 - 2019 ஆண்டுக்கான டி.டி.எஸ் (TDS) தாக்கலுக்காக ஜீன் 30 வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source) என்பர். இது ஒரு ஊழியருக்கு, அவரின் நிறுவனம் அளிக்கும் சான்றிதழாகும். இந்த ஆவணத்தில் வேலை செய்பவருக்கு அளிக்கப்படும் மாதச் சம்பளம் மற்றும் TDS ஆகியவை பற்றிய விளக்கமான தகவல்கள் இருக்கும்.

இதையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்

இதையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்

கடந்த ஏப்ரல் மாதம், புதிய நிதியாண்டுக்கான 2019 - 2020 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது, முந்தைய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருமான வரி குறித்துப் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். குறிப்பாக பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பிற்குள் வருபவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஆக பலருக்கு இதன் மூலம் வருமான வரி என்பதே இருக்காது.

வருமான வரிச்சலுகை

வருமான வரிச்சலுகை

அதோடு சம்பளம் பெறும் ஊழியர்களோ அல்லது ஓய்வூதியம் பெறும் நபர்களோ மருத்துவச் செலவுகள் மற்றும் பயணப் படி போன்றவற்றுக்கான வரி கழிவு (standard deduction) ரூ.40,000யிலிருந்து ரூ.50,000 உயர்த்தப்பட்டிருந்தது. முன்பு வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகை மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளின் மூலம் வரும் வட்டி வருவாய் ரூ.10,000 அதிகமாக இருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டு ரூ.40,000 உயர்த்தப்பட்டிருந்தது.

வீட்டு வாடகை வருமானத்தில் சலுகை

வீட்டு வாடகை வருமானத்தில் சலுகை

வீடு வாடகை மூலம் ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமான வருகிறதென்றால் கூடுதல் தொகைக்கும் வரி செலுத்த வேண்டும் என்று முன்னர் இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் 2.40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

தேசிய வரியில் சலுகை

தேசிய வரியில் சலுகை

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடு உள்ளது என்றால் அதற்கு தேசிய வரி செலுத்த வேண்டும் என்ற விதியை நடப்பாண்டு முதல், இரண்டாவது வீட்டை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் போது வரி செலுத்தத் தேவையில்லை என்றும் அரசு இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருந்தது. அதோடு சொந்த ஒரு ஊரில் ஒரு வீடும், வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு வீடும் என்று மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், வாடகைக்கு விடாமல் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தினால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டின் போது பியூஷ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மக்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது இதையும் கொஞ்சம் கவனித்து செய்வது நல்லது.

வருமான வரி தாக்கல் செய்ய பான் – ஆதார் இணைப்பு

வருமான வரி தாக்கல் செய்ய பான் – ஆதார் இணைப்பு

இந்த நிலையில் மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2019 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த நிதி ஆண்டுக்கான வரியை தாக்கல் செய்ய வேண்டுமெனில், பான் கார்டுடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இதையும் கொஞ்சம் கவனித்து செயல்படுவது நல்லதே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ITR filing date may get more time to issue Form 16

The IT department has extended the deadline for employers to issue Form 16 TDS certificate for financial year 2018 - 2019 to its employees from 15 June to 10 July.
Story first published: Thursday, June 6, 2019, 22:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X