அப்பா இடத்தை பிடிக்க வரும் மகன்.. தலைவர் பதிவியிலிருந்து ஓய்வு பெறும் அசிம் பிரேம்ஜி

டெல்லி : விப்ரோ நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனம் மட்டும் அல்ல. மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் விப்ரோ கொடையளித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆமாப்பு.. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் தலைவரும், மிகச் சிறந்த கொடையாளியுமான அசிம் பிரேம்ஜி ஜீலை மாத இறுதியில் இருந்து ஓய்வு பெற போகிறாராம்.

ஆமாப்பு.. விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தொடர்ந்து ஹுரன் இந்தியா (Hurun India) நிறுவனம் வெளியிட்டு வரும் சிறந்த கொடையாளிகள் பட்டியலில் (Hurun India Philanthropy List 2018 ) இடம் பிடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா இடத்தை பிடிக்க வரும் மகன்.. தலைவர் பதிவியிலிருந்து ஓய்வு பெறும் அசிம் பிரேம்ஜி

இதன் மூலம் கடந்த 2018ல் 22.6 பில்லியன் டாலர் மதிப்பில் நன்கொடை அளித்துள்ளராம். ஆமாப்பு.. அதன் இன்றைய மதிப்பு சுமார் 156 கோடி ரூபாயாகும். அதோடு வருடா வருடம் பல கோடிகளை நன்கொடையாக அளித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நல்ல மனிதர் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான அசிம் பிரேம்ஜி, இந்தியாவின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். இத்தகைய பணக்காரருமான அசிம் பிரேம்ஜி வரும் ஜூலை மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறாராம்.

எனினும் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தில் செயல் இயக்குநர் அல்லாத அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றி வருவாராம்.

விப்ரோ நிறுவனத்தில் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் இருந்து பணியாற்றி வருபவர் அசிம் பிரேம்ஜி. அந்த நிறுவனத்தின் நிறுவனரும் கூட. இவர் விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அல்லாத பொறுப்பில் சில காலம் பணியாற்றியுள்ளார். மேலும் விப்ரோ ஜிஇ ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அபிதாலி இசட் நீமுச்வாலா புதிய மேலாண்மை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். இவரே தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவாராம்.

அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி வரும் ஜூலை 31ஆம் தேதியில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுநேர இயக்குநராக செயல்படுவார் என்றும் விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+