அதிர வைக்கும் தில்லாலங்கடி.. ரூ.351 கோடிக்கு ஸ்டெராய்டு ஊக்க மருந்துகளை விற்ற ஒஸ்தி கடத்தல்காரர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: லண்டனை சேர்ந்த Gurjaipal Dhillon என்பவர் சுமார் 351 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து உரிமம் இல்லாத அனாபொலிக் ஸ்டெராய்டுகள் மருந்து கடத்தியுள்ளதாகவும் இவர் உலகில் செல்வாக்குமிக்க கடத்தல் கும்பல்களில் ஒருவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாம்.

 

அதுவும் தீவிர உடற்பயிற்சியாளர்களின் மன நிலையை தெரிந்து கொண்டு அவர்களிடம் பல கோடிகளுக்கு விற்றதும் கண்டறியப்பட்டுள்ளதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்தை சார்ந்த ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளாராம்.

இதில் வேடிக்கை என்னவெனில் 65 வயதான Gurjaipal Dhillon மூன்றாவது பெரிய குற்றவாளி என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஜேக்கப் ஸ்போரோன் ஃபீட்லர் 38 வயதுடைய இவரும், Berkshire சேர்ந்த நாதன் சேல்கோன் (44 வயது) என்பவரும் இந்த கடத்தல் குழுமத்தில் இணைந்து செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இனி விடிய விடிய வியாபாரம் பாருங்க... சில கண்டிசனோட - தமிழக அரசு அனுமதி

டன் கணக்கில் போதை மருந்து கடத்தல்

டன் கணக்கில் போதை மருந்து கடத்தல்

மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் நகரை சேர்ந்த 65 வயதான Gurjaipal Dhillon இந்தியா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உரிமம் இல்லாத மருந்துகளை கப்பலின் மூலம் டன் கணக்கில் இங்கிலாந்து கடத்தியுள்ளாராம். அதோடு தடை செய்யப்பட்டுள்ள Class C drug வகை போதை மருந்துகளை கடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல கோடி லாபம் பார்த்துள்ளார் மனுசன்.

இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட மருந்து

இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட மருந்து

இங்கிலாந்து நாட்டில் சட்ட விரோதமான மருந்துகளை மூன்று வகையாக பிரித்து வைத்துள்ளனர். அதில் ஒரு வகை தான் இந்த சி வகை மருந்துகள். இந்த தடை செய்யப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்தால் சிறைதண்டனையும், கடுமையான அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடுமாம். இவ்வகையான மருந்துகளை கடத்தியதால் தான் மனுசன் தற்போது சிறையில் இருக்கிறாராம்.

எதற்காக பயன்படுகிறது?
 

எதற்காக பயன்படுகிறது?

Gurjaipal Dhillon சட்ட விரோதமாக கடத்தியது இந்த சி வகை போதை மருந்துதான். ஆமாங்க.. இந்த அனாபொலிக் ஸ்டெராய்டுகள் ஒரு வகையில் போதை மருந்துகள் என்றே கூறலாம். சிலர் தங்கள் உடல் தோற்றத்தை மேம்படுத்த அனாபொலிக் ஸ்டெராய்டுகள் உட்கொள்கின்றனர். ஆனால் இந்த மருந்துகள் தாமதமாக பருவமடைதல் போன்ற ஹார்மோன் பிரச்சினைகள் சிகிச்சைக்கு ஸ்டெராய்டுகளை பரிந்துரைக்கப்படும் மருந்தாம்.

தோற்றத்தை மேம்படுத்துவதற்கு பயன்படும் மருந்துகள்

தோற்றத்தை மேம்படுத்துவதற்கு பயன்படும் மருந்துகள்

ஸ்டெராய்டுகள் கூட புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற தசை இழப்பு ஏற்படுத்தும் நோய்களை சிகிச்சையளிக்க முடியுமாம். ஆனால் சில விளையாட்டு வீரர்கள் மற்றும் உடலளவிலானவர்கள் இந்த மருந்துகளை செயல்திறன் அதிகரிக்கவும், உடல் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனராம். இதை தொடர்ந்து நாளடைவில் இதை உபயோகிக்கும் போது அதிக பின் விளைவுகளை பெற நேரிடுகிறது.

கள்ள மருந்து விற்பனை

கள்ள மருந்து விற்பனை

இந்த வகையான மருந்துகளை, விளையாட்டு, பந்தய மற்றும் உடற்பயிற்சி வீரர்கள் பயன் படுத்துகின்றனராம். ஏனெனில் அவற்றின் எதிர்மறையான விளைவுகள் மற்றும் உடல் போட்டிகளில் நியாயமற்ற நன்மைகளை பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இது விளையாட்டு அமைப்புகளால் தடை செய்யப்பட்டிருந்தாலும், Gurjaipal Dhillon போன்ற கடத்தல் காரர்களால் பிளாக் சந்தையில் விற்கப்படுகின்றனவாம்.

கடத்தலில் முக்கிய பங்கு

கடத்தலில் முக்கிய பங்கு

இப்படி சட்ட விரோதாமாக கடத்தப்படும் மருந்துகளை இங்கிலாந்தில் இறக்குமதி செய்வதில் Gurjaipal Dhillon முக்கிய பங்கு வகித்துள்ளராம். ஏன் இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இவர்தானாம். ஆமாப்பு.. இந்த மருந்துகளை மற்ற நாடுகளில் இருந்து கில்லாடியாக இங்கிலாந்து கொண்டு வந்துள்ளாரே. அப்படின்ன இவர்தான் கில்லாடி.

கடத்தலுக்கு தலைமை Jacob Sporon

கடத்தலுக்கு தலைமை Jacob Sporon

இந்திய மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Jacob Sporon-Fiedler தான் இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவராம். இவர் தலைமையில் இதுவரை குறைந்தபட்சம் 42 டன் அனாபொலிக் ஸ்டெராய்டுகள் மருந்துகளையாவது கடத்தியிருக்கலாம் என்றும் நேஷனல் கிரைம் ஏனென்சி கூறுகிறது. இந்தியாவில் Jacob Sporon-Fiedler இன் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமான மருந்துகளை, Gurjaipal Dhillon பயன்படுத்தி சட்ட விரோதமாக இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டுள்ளதாம்.

வெறும் 300 கிலோ மட்டுமே பிடிபட்டுள்ளது.

வெறும் 300 கிலோ மட்டுமே பிடிபட்டுள்ளது.

பல ஆயிரம் டன்கள் கடத்தப்பட்டிருந்தாலும் இதுவரை வெறும் 300 கிலோ மட்டுமே பிடிப்பட்டிருப்பதாகவும் நேஷனல் கிரைம் ஏஜென்சி கூறியுள்ளது. அதுவும் வடக்கு அயர்லாந்தில் உள்ள முகவரிக்கு, பார்சலில் அனுப்ப முற்பட்ட போது ஹீத்ரோ விமான நிலையத்தில் பிடிபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹீத்ரோ பார்டர் படைகளின் தலைவரான Nick Jariwalla இது குறித்து கூறுகையில், இவ்வாறு சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுவதிலிருந்து மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க கடுமையாக உழைக்கிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மிக வேதனையளிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: london
English summary

Gurjaipal Dhillon is a Third man part of world’s most prolific gang smuggling anabolic steroids

Gurjaipal Dhillon played a role in a £40m international steroid smuggling ring arranged dozens of unlicensed shipments of the drug from India into Europe.
Story first published: Friday, June 7, 2019, 13:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X