சங்ககாலத்தில் இருந்தே தமிழன் 10 ஜாமங்களும் திறந்திருக்கும் அல்லங்காடிகளை நடத்தி வந்தனர் என்பது பண்டைய தமிழனின் நாகரீகம் மற்றம் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
மதுரை: தமிழகத்தில் இனி வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று அரசாணை வெளியிட்டிருக்கும் வேளையில், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லும் பகலும் திறந்திருக்கும் அல்லங்காடிகளை தமிழன் கையாண்டுள்ளது மதுரைக் காஞ்சி என்னும் சங்ககால நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழனின் பெருமையை பறைசாற்றுகிறது. தூங்கா நகரமான மதுரையின் பெருமை இன்றைக்கும் உலகம் அறியும். மணக்கும் இட்லியும் நாலு வகை சட்னியும் நாவில் ருசிக்கும்.
இரவு நேரக்கடைகளில் விற்கப்படும் பொருட்களை அடையாளம் கண்டுகொள்வதற்காவே, கடைகளில் விற்கப்படும் பொருட்களின் உருவத்தை கொடியில் வரைந்து அதை அல்லங்காடிகளின் மேற்கூரைகளில் பறக்க விடுவார்கள். இவற்றை தூரத்தில் இருந்தே பார்க்கும் நுகர்வோர் இரவு நேரத்திலும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து பொருட்களை வாங்கிச் செல்வதுண்டு.
சில அல்லங்காடிகள் முதல் ஜாமத்திலேயே மூடப்பட்டுவிடும். இன்னும் சில மூன்றாம் ஜாமத்திலும், சில ஐந்தாம் ஜாமம் முடியும் முடியும் வைகறைப்பொழுது வரையிலும் கூட திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
24 மணிநேரம்
தமிழ்நாடு அரசு நேற்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் வரும் மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் குறிப்பாக 10க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு நடத்தப்படும் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் வணிக நிறுவனங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.
அல்லங்காடிகள்
இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. காரணம் சங்ககாலத்தில் இருந்தே தமிழன் 10 ஜாமங்களும் (அதாவது 24 மணி நேரம்) திறந்திருக்கும் அல்லங்காடிகளை (அல்லும் பகலும்-இரவும் பகலும்) நடத்தி வந்தனர் என்பது பண்டைய தமிழனின் நாகரீகம் மற்றம் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
மாங்குடி மருதனார்
மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது என்று சங்ககாலப் புலவரான மாங்குடி மருதனார் தனது மதுரைக்காஞ்சி என்னும் நூலில் மதுரை நகரின் அல்லங்காடிகளைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
தூங்கா நகரம்
அதாவது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை மாநகரம் தூங்கா நகரமாக விளங்கியது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதில் 24 மணி நேரமும் செயல்படும் அல்லங்காடிகள் செயல்படும் அங்காடிகளை நடத்தி வந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே மதுரை நகரத்திற்கு தூங்கா நகரம் என்று பெயரெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாமே கிடைக்கும்
அதோடு இரவு நேர சிறுவணிகர்கள் பணிகாரம், பூ, மாலை, வெற்றிலைப்பாக்கு, சுண்ணாம்பு போன்ற பலவகை பொருட்களையும் விற்றுவந்தனர். இரவு நேரங்களில் நால்வகைப் படைகள் அந்த வழியாக வரும்போது மட்டும் அவர்களுக்கு (அப்போதே காவலர்களுக்கு மாமூல் தரும் நடைமுறை இருந்தது போல) அஞ்சி மறைந்துகொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்து போனபின்னர் தங்களின் அங்காடி விற்பனையை தொடர்ந்ததாக மதுரைக் காஞ்சி நூல் விளக்குகிறது. சில அல்லங்காடிகள் முதல் ஜாமத்திலேயே மூடப்பட்டுவிடும். இன்னும் சில மூன்றாம் ஜாமத்திலும், சில ஐந்தாம் ஜாமம் முடியும் சில வைகறைப்பொழுது வரையிலும் கூட திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பூம்புகார் சொர்கம்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், எழுதிய பட்டினப்பாலை என்னும் நூலில், காவிரிப்பூம்பட்டனம் எனப்படும் கடலோர பூம்புகார் நகரத்தில் பட்டினப்பாக்கம், மரூவூர்ப்பாக்கம் என இரு பிரிவுகளைக் கொண்டு ஒரே சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பசுமையான வயல் வெளிகள், மீன்கள் துள்ளிக் குதிக்கும் நீர்நிலைகள், இரவு நேரத்திலும் அரபு நாடுகளில் இருந்து மரக்கலங்களில் (கப்பல்) வந்து இறங்கி நகரத் தெருக்களில் ஒடும் புரவிகளின் (குதிரை) குளம்படி ஓசை (காலடி சத்தம்), பல வகையான தொழில் செய்யும் மனிதர்கள், வரிசையாகக் கடைகளைக் கொண்ட நாளங்காடிகள், இரவில் திறந்திருக்கும் அல்லங்காடிகள் என பூம்புகார் நகரத்தின் எழிலை விவரிக்கிறது. அதோடு நம்மையும் அந்த கடற் கரையில் கொண்டுபோய் நிறுத்துகிறது.
பகலில் நாளங்காடி
மற்றொரு சங்ககால நூலான பொருநராற்றுப்படை என்னும் நூலிலும் இரவு நேரங்களிலும் செயல்படும் அல்லங்காடிகளைப் பற்றி குறிப்பிட்டு வியந்துள்ளார். அதில், ஊர்களில் இருந்த அங்காடிகளை இரண்டு வகையாக பிரித்திள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முதலாவது நாளங்காடி என்னும் பகல் பொழுதில் நடைபெறும் அங்காடிகளாகும்.
இரவில் அல்லங்காடி
மற்றொன்று இரவு நேரங்களில் செயல்படும் அல்லங்காடிகள் என்றும் அதில், இரவு நேரக்கடைகளில் விற்கப்படும் பொருட்களை அடையாளம் கண்டுகொள்வதற்காவே, கடைகளில் விற்கப்படும் பொருட்களின் உருவத்தை கொடியில் வரைந்து அதை அல்லங்காடிகளின் மேற்கூரைகளில் பறக்க விடுவார்கள். இவற்றை தூரத்தில் இருந்தே பார்க்கும் நுகர்வோர் இரவு நேரத்திலும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து பொருட்களை வாங்கிச் செல்வதுண்டு என்று மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில்லறை வியாபாரிகள்
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகார காப்பியத்திலும் அல்லங்காடிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் கடற்கரையை ஒட்டிய பட்டினப்பாக்கம் மற்றும் மருவூர்பாக்கம் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மிகுந்திருந்தன. அங்காடித் தெருக்களில் அலைந்து திரிந்து கூவிக்கூவி விற்பனை செய்யும் சிறு வணிகர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தது.
சுப்ரமணியன் சுவாமி
பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமியும் மதுரை நகரில் இரவு நேரங்களில் செயல்படும் இட்லிக்கடைகளைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேர இட்லிக்கடைகளில் எந்நேரமும் சுடச்சுட இட்லியும் சுவையான ஏழு வகையான சட்னிகளும் கிடைக்கும் என்பதால் அங்கே எப்போதும் கூட்டம் அலைமோதும். வெளிநாட்டினரும் கூட அங்கு வந்து சாப்பிட்டுச் செல்வதுண்டு.
More From GoodReturns

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications