என்னங்க வீட்டுக்கு போகச் சொல்றீங்க! சாரி நீங்க கம்பெனிய புரிஞ்சிக்கிட்டு வேலை பாக்கல, You are fired!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐபிஎம் (IBM - International Business Machine)சொல் பேச்சைக் கேட்டு வேலை பார்க்காத, ஐபிஎம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை நோக்கி வேலை பார்க்காத 2,000 ஊழியர்களை அசால்டாக வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஏன் வேலையை விட்டு நீக்கிவிட்டீர்கள், என்ன காரணம் எனக் கேட்டால், ஐபிஎம் (IBM - International Business Machine) நிறுவனம் தன்னுடைய பிசினஸுக்கு மறு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.

 

ஆகையினால் நிறுவனத்தில் மற்ற ஊழியர்களுடன் போட்டி போட முடியாத அளவுக்கு குறைவாகச் செயல்படும் ஊழியர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லி இருக்கிறார்களாம்.

என்னங்க வீட்டுக்கு போகச் சொல்றீங்க! சாரி நீங்க கம்பெனிய புரிஞ்சிக்கிட்டு வேலை பாக்கல, You are fired!

ஐபிஎம் (IBM - International Business Machine) நிறுவனத்தில் உலக அளவில் சுமார் 3.50 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்களாம். அத்தனை பேரின் வேலை மற்றும் பணித் திறனைப் பார்த்து தான் இந்த 2000 பேரைத் தேர்ந்தெடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்களாம்.

இப்படி ஒரு பக்கம் சரியாக வேலை பார்க்காதவர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மறு பக்கம் ஐபிஎம் (IBM - International Business Machine) எந்தெந்த துறைகளில் எல்லாம் புதிதாக வளர வேண்டுமோ, அந்தந்த துறைகளில் எல்லாம் கூடுதல் ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். மேலும் ஐபிஎம் (IBM - International Business Machine) ஊழியர்களை அதிக மதிப்பு கொண்ட, ஐடி வேலைகளை நோக்கி வேலை பார்க்கச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படி புதிதாக நிறுவனம் சில கொள்கைகளை வகுக்கும் போதும், புதிய பிசினஸ்களை நோக்கி ஓடும் போதும், அந்த புதிய கொள்கைகளுக்குத் தகுந்தாற் போல மாறாத ஊழியர்கள் மற்றும் புதிய கொள்கைகளை அனுசரித்து, ஏற்றுக் கொண்டு வேலை பார்க்க முடியாமல் தவிக்கும் ஊழியர்களை எல்லாம் வெளியே தள்ளும் புதிய கலாச்சாரத்தை அர்மங்க் (Armonk) என்கிற நியூயார்க் நிறுவனம் தான் முதலில் தொடங்கியது.

 

தன்னுடைய ஊழியர்களில் யார் எல்லாம் நிறுவனத்தின் புதிய க்ளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஐடியாவை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் 2016-ல் முதல் பேட்சில் வீட்டுக்கு அனுப்பியது. அதன் பின் 2017-ம் ஆண்டிலும் பாக்கி ஆட்களைக் கண்டு பிடித்து பலரை வீட்டுக்கு அனுப்பியது.

இப்போது அந்த வேலையை ஐபிஎம் (IBM - International Business Machine) கையில் எடுத்திருக்கிறது. ஆனால் நம் ஐபிஎம் (IBM - International Business Machine) நிறுவனமோ மொத்த உலக டெக்னாலஜி சந்தையில் கடந்த ஆறு வருடங்களாக தன் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்காமல் "உலகின் அதிக வருமானம் ஈட்டும் ஐடி கம்பெனி" என்கிற இடத்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு தான் தன் வருவாயை ஒரு சதவிகிதம் அதிகரித்து தன் சரிவைத் தடுத்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IBM International Business Machine fired around one percent employees for worst performance

IBM International Business Machine fired around one percent employees for worst performance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X