மோடிஜியால் வலுவடைந்த இந்திய - சீனா உறவு.. நடப்பாண்டில் வர்த்தகம் $100 பில்லியனை தாண்டுமாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங் : இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம், நடப்பு ஆண்டில், 100 பில்லியன் அமெரிக்க டாலராக, அதிகரிக்கும் என சீனாவுக்கான இந்திய துாதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

 

பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சீனாவுக்கான இந்திய துாதர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, கடந்த ஆண்டில், இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் 95 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது, நடப்பாண்டில்100 பில்லியன் டாலராக வரை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மோடிஜியால் வலுவடைந்த இந்திய - சீனா உறவு.. நடப்பாண்டில் வர்த்தகம் $100 பில்லியனை தாண்டுமாம்!

அதோடு சமீப காலங்களில் சீனா இந்தியா இடையே ஒரு வலுவான வர்த்தக உறவை பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் சீனா - இந்திய வர்த்தக உறவு மேலும் விரிவடைந்து வருகிறது.

நமது பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், கடந்த ஆண்டு வூகானாவில் நடந்த உச்சி மாநாடு மிகப்பெரிய பாலாமாகவும் மைல்கல்லாகவும் அமைந்தது. ஆக அந்த உறவு இன்னும் நம்மை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறியுள்ளார்.

லண்டன் போக்குவரத்து துறைக்கு இந்தியா ரூ.55 கோடி கடன்.. இந்தியா கம்மி தான்.. அமெரிக்கா தான் டாப்

அதோடு சீனா - இந்தியா இடையேயான வர்த்தக உடன்பாடுகள், இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இரு தரப்புகள் வர்த்தக உறவை மேம்படுத்தவும், இது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தவும் பயன்படும் என்கிறார்.

கொச்சி சார்ந்த சிந்தைட் இண்டஸ் ரீஸ் என்ற நிறுவனம், கிழக்கு சீனாவில் ஷாந்தோங் மாகாணத்தில் டீஜோவில் வூச்செங்கில் 46,000 சதுரகிலோ மீட்டரில் ஆரம்பிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2012ல் தொலைதூர வடக்கு மாகணமாக ஜிஞ்சியாங்கில் தொழிற்சாலை ஒன்றை நிறுவிய முதல் இந்திய நிறுவனமான, சிண்டர்ஹைட் இண்டஸ்டிரீஸ் மதிப்பு சேர்க்கப்பட்ட மசாலா உற்பத்தியாளர்களில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

 

தற்போது இந்த நிறுவனம் பெய்ஜிங்கில் உள்ளது. அதோடு ஷாங்காயில் ஒரு வாடிக்கையாளர் அனுபவித்திற்காக ஒரு வாடிக்கையாளர் மையத்தை திறந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் பெரும்பாலும் சீன குடிமக்களையே வேலைக்கு அமர்த்தியுள்ளது.

சீனா நிறுவனங்கள் Xiaomi, Haier, Oppo போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் நமது வீட்டு பெயர்களாக மாறிவிட்டன. அதே சமயம் தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி, துணி, உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் சீனாவில் பிரதானாமாக 125 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India-China trade may fly to $100 billion this year

Trade between India and China is set to cross the $100 billion mark in 2019 for the first time as the countries expand economic and commercial engagement.
Story first published: Sunday, June 9, 2019, 14:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X