டெல்லி : போக்குவரத்து விதிமீறல்களால் பல விதமான பிரச்சனைகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க போக்குவரத்து காவலர்களும் ஆங்காங்கே நின்று, ஆங்காங்கே நிறுத்தி பரிசோதனை செய்வதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இது பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்தாலும், அந்த அபராத கட்டணத்தை செலுத்த பல மைல் தூரத்தை கடந்து செல்ல வேண்டி இருக்கிறதாம்.
அட ஆமாங்க.. 100 ரூபாய் அபராதம் கட்டணம் செலுத்த 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு அந்த போக்குவரத்து நெரிசலில் செல்ல வேண்டி இருக்காம். ஆமாங்க. பூந்தமல்லிலா புடிச்சாலும், அபராதம் கட்ட வேண்டியது மவுன்ட் ரோடு போக வேண்டி இருக்காம்.
அபராதம் கட்ட பல மைல் செல்ல வேண்டும்
அட ஆமாங்க.. மேற்கு டெல்லிலா தோதாபூர்ல தான் போக்குவரத்து காவல் நிலையத்தோட தலைமை அலுவலகம் இருக்காம். டெல்லி நகரத்துக்குள் எந்தவொரு பயணிக்கு அபராதம் விதிச்சாலும், அந்த அபராதத்த கட்டுறதற்காக பல கிலோமீட்டர் செல்ல வேண்டி இருக்காம்.
அலைச்சலை குறைக்க ஆன்லைன் வசதி
இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறீர்களாம். இதனால் அவர்களுடைய அலைச்சலை தவிர்க்க ஆன்லைன் பேமென்ட் முறையை கொண்டு வரப்போகுதாம் போக்குவரத்து காவல்துறை.
கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்கும்
இது குறித்து போக்குவரத்து காவல் துறை இணை ஆணையர் ஜெகதிஷன் கூறுகையில், இந்த தானியங்கி எந்திரங்கள் அதிக எண்ணிக்கையிலான அபராதங்களை வசூலிக்கும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு இது கட்டணம் செலுத்தும் முறையும் இன்னும் எளிதாக்கும்.
குற்றவாளிகளை ஊக்குவிக்காது
இவ்வாறு ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் அதிக தூரம் அலைய வேண்டியதில்லை. அதோடு இந்த ஆன்லைன் கட்டணம் ஒரு போதும் குற்றவாளிகளை ஊக்குவிக்காது. இந்த அபாராதம் செலுத்தும் முறையானது மிக எளிதானது. அதோடு அபராதம் வசூல் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கும். இது பதிவுகளை உறுதி செய்யவும், பதிவுகளை பராமரிக்கவும் மிக உபயோகமாக இருக்கும்.
காட்டிக் கொடுத்து விடும்?
பணம் செலுத்தாதவர்கள் , அதாவது அபராத கட்டணத்தை செலுத்தாதவர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நீங்கள் ஒரு முறை பணம் செலுத்தாவிட்டால் அடுத்த முறை ஆர்.டி.ஓ அலுவலகத்தை எதற்காகவும் நாடும் போது இந்த அபராத பிரச்சனை அங்கே பிரதிபலிக்குமாம்.
பிரச்சனையில் இருந்து அல்ல
இந்த பிரச்சனையில் உங்களுக்கு அளிக்கப்படும் சேவையில் சலுகை அளிக்கப்படும். ஆனால் ஒரு போதும் பிரச்சனையிலிருந்து விலக முடியாது என்றும் கூறியுள்ளார் ஜெகதீஷன்.
இதை கட்டிட்டு போங்க?
டெல்லி போக்குவரத்து துறையின் இணையதளமான www.delhitrafficpolice.nic.in இணையதளத்தின் மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். அதோடு சிக்னலில் நிற்காமால் செல்வது, அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறல்களுக்கு இங்கு அபாரதங்களுக்கு இங்கு பணம் செலுத்திக் கொள்ளலாமாம்.
ஈஷியா ஃபைன் கட்டிக்கிடலாம்!
அதோடு போக்குவரத்து காவர்களின் கூற்றுப்படு ஒரு நாளைக்கு 20,000 பெருக்கு மேல் இதில் அபராதம் செலுத்திக் கொள்ளலாமாம். அதோடு நகரங்களில் இந்த தானியங்கி இயந்திரங்கள் 10 இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
ஆங்காங்கே 25 கேமராக்கள்?
அதோடு 25 கேமாராக்களையும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளனவாம். இதனால் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். ஆனா ஒரே குறைதான் இப்போது ஆமாங்க இப்போதைக்கு டெல்லி மட்டும் தான் இந்த நடைமுறையாம்.


Click it and Unblock the Notifications