டெல்லி : மோடி 2.0 புதிய அரசு வந்ததிலிருந்தே பல பல அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கியிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
அவ்வாறு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது கட்டாயம் ஆதார் எண்ணையும் தரப்பட வேண்டுமாம். ஆமாங்க.. அப்போது தான் தனி நபர்களின் பண பரிவர்த்தனையை எளிதாக கண்காணிக்க முடியுமாம்.

அதோடு அவர்களின் வருமான வரி தாக்கல் கணக்கின் உண்மை நிலை என்ன என்பதையும் கண்டறியவும் இது பயன்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மோடி அரசு ஒவ்வொரும் முறையும் கருப்பு பண பதுக்கலை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறது. தற்போது இதனடிப்படையில் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆமாங்க.. ஏற்கனவே இதன் ஒரு பகுதியாகத்தான் ஆர்.டி.ஜி.எஸ், மற்றும் நெப்ட் மூலம் பணபரிவர்த்தனை செய்ய கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஏ.டி.எம் கட்டணங்களையும் மறுபரீசீலனை செய்வதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக வங்கியிலிருந்து ஆண்டுக்கு ரொக்கமாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் எடுப்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக இந்த பரிவர்த்தனையில் அனைத்து தரப்பினரும் ஈடுபட போவதில்லை.
குறிப்பிட்ட சில தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.10 லட்சமோ அல்லது அதற்கு மேலோ பண பரிவர்த்தனையில் ஈடுபடுவார்கள். ஆக இந்த மோடி அரசின் புதிய வரி விதிக்கும் முடிவு, நடுத்தர மற்றும் ஏழை மக்களை இது பாதிக்காது எனவும் கருதப்படுகிறது.
அதோடு கருப்பு பணத்தை ஒழிக்கவும், பாதுகாப்பான முறையில் பணத்தை பரிவர்த்தனை செய்யவும் இது உபயோகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications