கணக்கு தர்றியா ஜெயிலுக்கு போறியா.. 10 வருசம் ஜெயில்.. ஜாமீன் இல்ல.. 90 நாள் தான் டைம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வகையான டிஜிட்டல் நாணயங்கள் வைத்திருந்தாலோ, பரிவர்த்தனை செய்தாலோ 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

பிட்காயின் கிரிப்டோ கரன்சிகள் டிஜிட்டல் வடிவில் உள்ள நாணயங்கள். இந்த கரன்சிகள் கம்ப்யூட்டர்கள், இதற்கான ஏடிஎம்கள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

கணக்கு தர்றியா ஜெயிலுக்கு போறியா.. 10 வருசம் ஜெயில்.. ஜாமீன் இல்ல.. 90 நாள் தான் டைம்

பிட்காயின் போன்று ஏராளமான கிரிப்டோ கரன்சிகள் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இந்தியாவில் இந்த டிஜிட்டல் நாணயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்படுவதாவது, இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் சட்ட விரோதமாக பல பரிவர்த்தனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இது போன்ற சட்ட விரொதமான பரிவர்த்தனைளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதோடு இதற்காக கிரிப்டோ கரன்சிகள் தடை மற்றும் முறைப்படுத்துதல் மசோதா - 2019 வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற போகின்றன. குறிப்பாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் வைத்திருப்பதும், விற்பதும், வாங்குவதும் கடும் குற்றமாக கருதப்படும். அதோடு சட்ட விரோதமாக இதில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த சட்ட விரோதமாக இந்த கரன்சி பிரச்சனையால் கைது செய்யப்பட்டால், ஜாமீனில் வெளிவர முடியாது என்பது கவனிக்கதக்கது.

இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டால், பிட்காயின் வைத்திருப்பவர்கள் தங்களிடம் எவ்வளவு மதிப்பிலான கரன்சி உள்ளது என 90 நாட்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india's IT Department and CBIC also ban on crypto currencies

Indian government working towards formulating a policy that would make owing crypto currencies a non bailable offence.
Story first published: Monday, June 10, 2019, 13:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X