ஐயா அதானி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துட்டேன்.. 6 ஏர்போர்ட்ட எடுத்துக்கோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோடி 2.0 அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதானி குழுமத்திற்கு 6 விமான நிறுவனங்களை நடத்துவதற்கு ஏலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கருத்துகள் நிலவி வருகிறது.

ஒரு புறம் இதற்காக வெற்றிகரமாக ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று கூறப்படும் நிலையில், மற்றொரு புறம் விமான துறை அமைச்சக அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், இதற்காக ஏலம் முடிவினையும், அங்கீகாரத்தையும் அமைச்சரவை ஜுலை மாதம் தான் வழங்க உள்ளது என்றும் ருதப்படுகிறது.

இதுகுறித்து விமான துறை வட்டாரத்தில் கூறுகையில், இந்த ஏலத்திற்கான முடிவினை கடந்த மோடி ஆட்சியின் முடிவிலேயே எடுக்கப்பட்டு விட்டது. இதை நாங்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்றும் கூறப்படுகிறது. எனினும் எது உண்மை என்பது ஜீலை மாத இறுதியிலேயே தெரியவரும்.

அமைச்சரவையின் முடிவை அரசே எடுத்துவிட்டது?

அமைச்சரவையின் முடிவை அரசே எடுத்துவிட்டது?

அமைச்சரவையின் முடிவை அரசாங்கம் எடுத்துவிட்டது. அதோடு அமைச்சகத்தின் குறிப்பை அமைச்சரவை செயலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அமைச்சரவை இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இதனால் அமைச்சரவை மீண்டும் ஒரு குறிப்பை அனுப்பும், இது ஜீலை மாத இறுதிக்குள் என்னவென்று ஒரு இறுது முடிவு தெரியவரும் என்றும் விமான துறை அமைச்சகங்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறதாம்.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மூலம் செயல்படும்

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மூலம் செயல்படும்

ஜுலை மாத இறுதியில் எடுக்கப்படும் முடிவுகளை அடுத்தே, அரசு 6 விமான தளங்களை ஒப்படைக்கும். அதோடு விமான நிலையங்களில் ஊழியர்கள் இருக்கிறார்கள். அதுவரை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மூலம் அவர்கள் செயல்படுவார்கள். ஏலத்திற்கு பின்னரே இந்த விமான நிறுவனங்கள் அதானியுடன் இணைந்து செயல்பட போகிறதா? அல்லது வேறு ஏதேனும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட போகிறதா என்றும் தெரியவரும் என்று விமான துறை அமைச்சக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதானிக்கு அங்கு மட்டும் தான் உரிமை உண்டு?

அதானிக்கு அங்கு மட்டும் தான் உரிமை உண்டு?

அதானி நிறுவனம் கடந்த முறை மோடி ஆட்சியில் 6 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கும், செயலபடுத்துவதற்கும் ஏலத்தில் எடுத்தது. ஆக இந்த விமான நிறுவனங்களில் செயல்படுத்தவோ அதானி குழுமத்திற்கு உரிமை உண்டு. குறிப்பாக அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் மற்றும் மங்களூர் உள்ளிட்ட விமான தளங்களை அதானி குழுமம் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

வருட வருமானம் ரூ.1300 கோடி

வருட வருமானம் ரூ.1300 கோடி

இவ்வாறு விமான தளங்களை தனியார் மையமாக்குவதால் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு வருடத்திற்கு சுமார் 1300 கோடி ரூபாய வருமானம் கிடைக்கிறதாம். இவ்வாறு கிடைக்கும் வருமானத்தை வைத்து உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படுகின்றனவாம்.

அதானி தீவிர ஆர்வம்

அதானி தீவிர ஆர்வம்

இந்த நிலையில் அதானி குழுமம் ஏற்கனவே பல விமான தளங்களை நிர்வகித்து வந்தாலும், இன்னும் உள்ள விமான தளங்களை ஏலத்தில் எடுக்க மிக தீவிர ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வருமானம் வளர்ச்சிக்கு பயன்படும்!

வருமானம் வளர்ச்சிக்கு பயன்படும்!

இந்த நிலையில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் தலைவர் ஜி.பி.மோகபத்ரா கூறுகையில், இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் விமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளாராம். ஆனால் அதானி குழுமத்தை பற்றியோ ஏலத்தினை பற்றியோ எதுவும் கூறவில்லை எனவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிய விமான தளங்களை விரிவுபடுத்த உதவும்.

சிறிய விமான தளங்களை விரிவுபடுத்த உதவும்.

எனினும் இந்த ஆறு விமான நிறுவனங்களை நிர்வகிப்பதை விடுத்து இவ்வாறு தனியார் மையாக்குவதன் மூலம், அரசுக்கு இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும். இதன் மூலம் சிறிய விமான தளங்களை மேலும் விரிவுபடுத்த இயலும். அதோடு கடந்த நவம்பரிலேயே அரசு ஒரு தெளிவான அறிக்கையை இது குறித்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த சமயத்திலேயே 10 நிறுவனங்கள் மூலம் 32 தொழில்நுட்ப ஏலங்களையும் ஏற்படுத்தியிருந்தது என்றும் மோகபத்ரா கூறியுள்ளார்.

அதோடு விமான தளங்களின் செயல்பாடுகள் குறித்து ஏலத்தில் விடப்பட்டிருந்தாலும், விமான நிலைய கட்டணங்கள் அரசின் கீழ் கட்டுப்பட்டில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: adani அதானி
English summary

Adani Enterprises handing over 6 airports likely in july

The Cabinet did not take up the matter for (adani) approval as the government had completed its tenure, but the ministry’s note was not accepted by the cabinet secretariat. so We will again be sending the note and expect it to be cleared by July-end.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X