வாசிங்டன்: என் தலைமையில் அமெரிக்காவை ஒருத்தனும் முட்டாளாக்க முடியாது. ஆனா இந்தியா அமெரிக்காவை முட்டாள் ஆக்கப் பார்க்கிறது. இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நாங்கள் (அமெரிக்கா) தான் முதலிடம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியே வசூலிப்பதில்லை. அதாவது 0% இறக்குமதி வரி.
ஆனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஹார்லி டேவிட்சன் போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 100 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஹார்லி டேவிட்சன் விவகாரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்பே நேரடியாகப் பேசி இருக்கிறார். அமெரிக்காவை ராஜ தந்திரமாக டீல் செய்ய நரேந்திர மோடி அரசும், ஹார்லி டேவிட்சன் வாகனங்கள் மீதான 100 சதவிகித இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக குறைத்திருக்கிறார்களாம்.
இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இதுவும் போதாதாம். "இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நாங்கள் வரியே விதிப்பதில்லை. அதே போல இந்தியாவும், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரியே விதிக்கக் கூடாது" என காரசாரமாக லாஜிக் பேசுகிறார் ட்ரம்ப்.
அதோடு "இந்தியா ஏன் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கிறது..? தன்னுடைய வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதி தொகையை விட இறக்குமதி தொகை அதிகமாக இருப்பதை) குறைத்துக் கொள்ளத் தானே..? அதே போல அமெரிக்காவுக்கு கடுமையாக வர்த்தகப் பற்றாக்குறை இருக்கிறதே. உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்க பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. அதே போல இறக்குமதியும் செய்கிறது அமெரிக்கா. ஆனால் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை விட 800 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகமாக பல நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது அமெரிக்கா. ஆக எங்கள் வர்த்தகப் பற்றாக்குறையை யார் குறைப்பார்கள்..?" எனவும் கோபப்பட்டிருக்கிறார்.

உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி சுரண்டும், பெரிய வங்கியாக இருக்கிறது அமெரிக்கா. இது போல அமெரிக்காவுக்கு நஷ்டம் ஏற்படுத்தக் கூடிய டீல்களை எல்லாம் யார் அனுமதித்தது சொல்லுங்கள் என பத்திரிகையாளர்களையே திருப்பிக் கேட்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications