ட்ரம்ப் சார்.. உங்க வார்த்தைக்கு மதிப்பே இல்லையா.. உங்க பேச்ச 30 நாடு கேக்கவே இல்லியே..!

பெய்ஜிங்: அமெரிக்கா சீனாவிடையே நடந்து வரும் வர்த்த ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தடுத்து இந்த இரு நாடுகளும் அடிச்சுக்கோ புடிச்சுக்கோ என்று இருந்து வருகின்றன. இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஹீவாய் நிறுவனம், மற்ற 30 நாடுகளுடம் மொத்தம் 46 வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக அறிவித்துள்ளது கவனிக்கதக்கது.

அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த கூடாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு ஏற்கனவே பிறப்பித்து இருந்தார்.

ட்ரம்ப் சார்.. உங்க வார்த்தைக்கு மதிப்பே இல்லையா..  உங்க பேச்ச 30 நாடு கேக்கவே இல்லியே..!

இந்த உத்தரவு சீனாவின் ஹீவாய் நிறுவத்தை தாக்கும் விதமாகவே இருந்தது என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிற நாடுகளில் உளவு பார்ப்பதாகவும், அமெரிக்காவும், அதனுடனான நட்பு நாடுகளும் குற்றம் சாட்டி வந்த நிலையில், ஹீவாய் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹீவாயின் பொருட்களுக்கு தடை விதித்திருந்தார்.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட போதிலும் கூட தாங்கள் 30 நாடுகளில், 5ஜி தொடர்பான 46 வர்த்தக ஒப்[பந்தங்களை செய்துள்ளதாக ஹீவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதோடு சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்னுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழக்கிழமையன்று 5ஜி சம்பந்தமான நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமைக்க அனுமதி கொடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சீனாவின் பிராட்கேஸ்டிங் நெட்வொர்க் இந்த 5ஜி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளாதாம். இதோடு சீனாவின் மிகப்பெரிய ஜாம்பாவான்களான சீனா டெலிகாம், சீனா மொபைல், சீனா யுனிகாம் என மூன்று ஜாம்பாவான் களும் அனுமதி கொடுத்துள்ளனராம்.

இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹீவாய் 5ஜி பயன்பாட்டிற்கான சாதனங்களை மிக அருமையாக தயாரித்து வருகிற்து. கடந்த ஆண்டு பிப்ரவரியில் முதன் முதலி 5ஜி தொடர்பான தொலைத்தொடர்பு சாதனங்களை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளதாம்.

அதோடு அமெரிக்கா சீனா வர்த்தக போரால் அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா பொருட்களுக்கான வரி மாற்றத்தை கொண்டு வந்தது. இதே சீனா அமெரிக்காவின் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விகிதத்தை அதிகரித்தது. ஆனால் இந்த நிலையில் தான் அமெரிக்காவின் வர்த்தக வார் பிரச்சனை டெக் வாராக மாறியது.

அமாங்க., சீனாவின் மீது இருந்த கோபத்தால் அமெரிக்கா சீனா நிறுவனங்களின் மீது கோப்பத்தை காட்ட ஆரம்பித்தது. அதோடு தொலைத்தொடர்பு துறையில் சர்வதேச அளவில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக முன்னிலை வகித்து வருவதும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.

எனினும் தற்போது நாங்கள் தற்போது 30 நாடுகளில் இருந்து 46 வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றுள்ளோம் என்றும் ஹீவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக எந்த நாடுகள் என்று எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த 5ஜி நெட்வொர்க் மூலம் 10 மடங்கு இருக்கும் இணையத்தின் வேகம் 100 மடங்காக அதிகரிக்கும் என்றும் ஹீவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு இந்த 5ஜி சேவையால் அதிவேகமான மொபைல் சேவையையும், பாதுகாப்பான தகவல் தொழில் நுட்ப சேவையையும் தரும் என்றும் MIIT Minister Miao Wei கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+