டெல்லி : நாளுக்கு நாள் ஆற்றல் துறை எனப்படும் எனர்ஜி செக்டாரில் தேவைகள் என்னவோ அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆனால் உற்பத்தி அந்த அளவிற்கு இருப்பதாக தெரியவில்லை. இதனால் ஆற்றல் துறை சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு எல்.என்.ஜி எனப்படுகிற லிக்யூபைடு நேச்சுரல் கேஸ் எனப்படும் எரிவாயு இறக்குமதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது கடந்த ஆண்டை விட 9.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவே மாதத்திற்கு மாதம் 13.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க ஆண்டுக்கு ஆண்டு தேவை என்னவோ கூடிக்கொண்டே தான் போகிறதாம். ஆனால் உற்பத்தி தான் குறைந்து கொண்டே போகிறது.
ஆமாங்க.. கடந்த ஆண்டை விட உற்பத்தி 0.3 சதவிகிதம் குறைந்துள்ளது. இது மிகச் சிறிய வித்தியாசமாக இருந்தாலும் மறுபுறம் தேவை 4.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனாலேயே நாளுக்கு நாள் இறக்குமதி யும் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த நுகர்வு 4341 MMSCM ஆகும். குறிப்பாக உரங்கள் துறையில் 27 சதவிகிதமும், சக்தி துறையில் 22 சதவிகிதமும், CGDயில் 18 சதவிகிதமும், சுத்திகரிப்பு துறையில் 14 சதவிகிதமும், பெட் ரோ கொமிக்கல் துறையில் 7 சதவிகிதமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
இதே சமயம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்தே காணப்பட்டது. அதிலும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 6.9 சதவிகிதம் குறைந்தே காணப்பட்டது. குறிப்பாக ஆயில் உற்பத்தி நிறுவனங்களில் எண்ணெய் உற்பத்தி அளவுகள் குறைந்தே காணப்பட்டது. நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் 4.9 சதவிகிதம் குறைந்தும், ஆயில் இந்தியா லிமிடெட் 3.9 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
இதனாலேயே கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 14.1 சதவிகிதம் அதிகரித்தே காணப்பட்டது. இதோடு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பு 86.8 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications