அகமதாபாத் : மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பிர்ஜூ சல்லா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தவுள்ளதாக விமானநிலையத்தின் கழிவறையிலுள்ள டிஸ்யூ பேப்பரில் எழுதி வைத்தார்.
ஆமாங்க.. மும்பை - டெல்லி செல்லும் விமானமான, 9W339 என்ற எண்ணுடைய அந்த விமானத்தில் தான் அந்த துரதிஷ்டவசமான இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் அந்த விமானத்தில் வணிக வகுப்பு அருகில் உள்ள கழிவறையில் தான் இந்த செய்தியை எழுதி வைத்துள்ளார் பிர்ஜூ சல்லா.

இதையடுத்து மும்பை - டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை தான் கடத்தவுள்ளதாக ஆங்கிலம் மற்றும் உருதுவில் எழுதியிருந்தாராம்.
தொழிலதிபர் பிர்ஜு சல்லா எழுதிய இந்த மிரட்டலால், அந்த விமானம் அவசரமாக அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், பிர்ஜூ சல்லா அங்கு கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து முதன்முறையாக விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நபர் பட்டியலில் பிர்ஜூ சல்லா சேர்க்கப்பட்டார். மேலும், விமானக் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.
பிர்ஜூ சல்லாவிடம் நடந்த விசாரணையில், விமானத்தை கடத்துவதாக மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், இந்த மிரட்டலின் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லியில் செயல்படும் அலுவலகத்தை மூடிவிடும். அதனை மூடிவிட்டால் டெல்லியில் பணியாற்றும் தனது காதலி மும்பை திரும்பிவிடுவார் என்று நம்பினேன் கூலாக பதில் கூறியிருந்திருக்கிறார்.
அதோடு ஜெட் ஏர்வேஸ் விமானத்தை ஹைஜேக் செய்வேன் என்று மிரட்டிய இந்த தொழிலதிபருக்கு சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதுமட்டும் அல்ல 5 கோடி ரூபாய் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்த வழக்கை விசாரித்த சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம் டேவ், இந்த அபராதத் தொகையை கடத்தப்படுவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தில் பயணித்தவர்களுக்கு பிரித்து அளிக்கவேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளராம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications