ட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம்! இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங் : அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போரினால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, உலகப் பொருளாதாரமே பாதிக்கப்படுகிறது என்று ஐ.எம்.எஃப் ஒரு புறம் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், இந்த இரு நாடுகளும் தற்போதைக்கு இதை பிரச்சனையை நிறுத்துவதாய் இல்லை. ஆமாங்க அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் மேலும் சீனாவை மிரட்டும் விதமாகவோ எச்சரிக்கும் விதமாகவோ உள்ளது.

 

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஜப்பானில் நடைபெறும் G20 மாநாட்டில் ஜின்பிங் தன்னை சந்தித்து பேச மறுத்தால் சீனாவிற்கு வரி உயர்த்தப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளாராம் டிரம்ப்.

தொடர்ந்து அமெரிக்கா சீனா பொருட்களுக்கு வரி விதிப்பதும், சீனா அமெரிக்கா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதும் தொடர்கதையாகி போன நிலையில், முன்னர் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் செய்து வந்தனர். ஆனால் தற்போது அதை தாண்டி நீ என்ன பார்க்கல, கண்டிப்பா நான் வரியை உயர்த்திடுவேன் என்று சிறு பிள்ளைகள் சாண்டையிடுவதை போல் சண்டை போட்டுக் கொள்கின்றனர் அமெரிக்காவும் சீனாவும்.

 நீயா நானா?

நீயா நானா?

சீனா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிதமாக, கடந்த ஆண்டே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் நான் மட்டும் என்ன கொறஞ்சவனா என அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரியையும் விதித்தது. இந்த நிலையில் தொடர்ந்து, இரு நாடுகளும் நீயான நானா? என மாறி மாறி இறக்குமதி பொருட்களுக்கான வரியை உயர்த்திக் கொண்டே வருகின்றன.

 எந்தவித மாற்றமும் இல்லை

எந்தவித மாற்றமும் இல்லை

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் சீனாவும் அமெரிக்காவும் பல கட்டத்தில் 11 முறை பேச்சு வார்த்தைய நடத்தி வருகின்றன. ஆனால் இதுவரை எதுவும் பலனளித்ததாக தெரியவில்லை. எனினும் இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, நிரந்தர தீர்வுகாண இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தின. எனினும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் எந்த பலனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக பிரச்சனைகள் தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது கவனிக்கதக்கது.

 ஏற்கனவே வரி உயர்வு
 

ஏற்கனவே வரி உயர்வு

ஏற்கனவே சீனாவின் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக வரி உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் டிரம்ப், இந்த நிலையில் கடந்த வாரம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சீனாவுடன் நடந்து வரும் பேச்சு வார்த்தை மிக சுவாரசியாமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்றும், அதோடு வர்த்தக ஒப்பந்தமோ பேச்சு வார்த்தையோ சரியான முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, சரியான நேரத்தில் மேலும் 300 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் டிவிஸ்ட் வைத்திருந்தார் டிரம்ப்.

 மற்ற நாடுகளுடன் வியாபாரம்

மற்ற நாடுகளுடன் வியாபாரம்

இந்த நிலையில் கடுப்பான சீனா தற்போது மற்ற நாடுகளுடன் வியாபாரத்தை பெருக்கும் வகையில், பல ஒப்பந்தங்களை செய்து வருகிறது. அதனை தெளிபடுத்தும் வகையிலேயே சீனாவின் ஹீவாய் நிறுவனம் அமெரிக்கா தடை செய்தால் என்ன, நாங்கள் இதுவரை 30 நாடுகளுடன் 5ஜி தொடர்பான 46 வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளோம் என்றும் அதிரடியாய் அறிக்கை விட்டிருந்தது. அதோடு சீனாவிலேயே ஹீவாய் நிறுவனத்தை ஊக்குவிக்கும் வகையில் நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களை நிறுவ அனுமதியும் கொடுத்துள்ளது சீனா அரசு.

 இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினால் மட்டுமே முடிவு

இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினால் மட்டுமே முடிவு

இதன் காரணமாக அமெரிக்கா சீனா ஆகிய இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போர் தற்போது உச்சத்தை எட்டி யுள்ளது என்றே கூறலாம். இந்த இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி, ஒருமித்த கருத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் மட்டுமே வர்த்தகப்போர் முடிவுக்கு வரும் என்கிற சூழல்நிலையும் தற்போது உருவாகி உள்ளது.

 மாநாட்டிற்கு முன்பு பேச்சு வார்த்தை

மாநாட்டிற்கு முன்பு பேச்சு வார்த்தை

ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஜீன் 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த மாநாட்டுக்கு இடையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 சீனாவுக்கு மிரட்டல்

சீனாவுக்கு மிரட்டல்

இந்த நிலையில் ஜி-20 மாநாட்டின் போது ஜின்பிங் தன்னை சந்திக்காவிட்டால், ஏற்கனவே குறிப்பிட்ட படி, மேலும் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவிகிதமாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ உயர்த்துவேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

 பகிரங்கமாக பேட்டி

பகிரங்கமாக பேட்டி

இது குறித்து டிரம்ப் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜின்பிங் என்னை சந்திக்க தயாராக இருப்பார் என நினைக்கிறேன். அவ்வாறு நடக்காத பட்சத்தில் கண்டிப்பாக 300 பில்லியன் டாலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி நிச்சயமாக உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார். அதற்கு ஜின்பிங் தயாராக இல்லை எனும் பட்சத்தில், அதன் மோசமான விளைவுகளையும் சந்திக்க தயாராக இருப்பார் என்றும் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

 ஜின்பிங்கிற்கு பாராட்டு

ஜின்பிங்கிற்கு பாராட்டு

சீனா அதிபர் ஜின்பிங் உண்மையில் நல்லவர், அவருக்கும் எனக்கும் நல்ல உறவு இருக்குகிறது, ஜின்பிங் மிக வலுவானவர். மிகவும் புத்திசாலியும் கூட, அதோடு அவர் பெரிய மனிதர், என்ன? அவர் சீனாவில் இருக்கிறார், நான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளாராம் டிரம்ப்.

 ஹீவாய் வைத்துக் கொள்ளலாம்

ஹீவாய் வைத்துக் கொள்ளலாம்

ஏற்கனவே அமெரிக்கா, ஹீவாய் உள்ளிட்ட சீனா தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் சீனா, அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஹீவாய் நிறுவனத்தின் பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. அதோடு மற்ற நாடுகளையும் அமெரிக்கா எச்சரித்தும் வந்தது. ஆமாங்க.. ஹீவாய் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்றும் கூறி வந்தது. ஆனால் தற்போது அதற்கு மாறாக ஹீவாய் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மீண்டும் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

 அமெரிக்கா பேச்சு வார்த்தையையே விரும்புகிறது

அமெரிக்கா பேச்சு வார்த்தையையே விரும்புகிறது

அமெரிக்கா சீனாவுடன் பேச்சு வார்த்தையையே விரும்புகிறது. அதோடு ஹீவாய் நிறுவனத்தினை பற்றியும் இதில் அங்கமாக கருதுகிறது என்றும், ஹீவாய் நிறுவனத்திற்கும் எதாவது செய்யலாம் என்றும் கருதிகிறேன் என்றும் கூறியுள்ளார். அதோடு ஹீவாய் நிறுவனம் அமெரிக்கா 5ஜி சேவையை ஆரம்பிக்குமா என்று கேட்ட போது தான் இந்த பிரச்சினையே ஆரம்பமாகியது என்றும் டிரம்ப் கூறியுள்ளராம்.

 நல்ல படியாய் பேச்சு வார்த்தை நடக்கும்

நல்ல படியாய் பேச்சு வார்த்தை நடக்கும்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சுமூகமான மூறையில் பேச்சு வார்த்தை நடக்கும் என நினைக்கிறேன். அவ்வாறு எதிர்ப்பார்த்தபடி நடககவிட்டாவில் வரி உயர்வு நிச்சயம் அமலுக்கு வரும். ஆமாப்பு.. சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி உயர்வு நிச்சயம் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 பேச்சு வார்த்தையோ – ஒப்பந்தமே வேண்டும்

பேச்சு வார்த்தையோ – ஒப்பந்தமே வேண்டும்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சீனா அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கோ ஒப்பந்தத்திற்குகோ வரா விடில் கண்டிப்பாக வரியை 35 - 40 சதவிகிதம் வரை உயர்த்துவோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். எனினும் அவர்கள் 60 சதவிகிதம் வரை வரி உயர்த்தப்படும் என்றும் கூறியிருந்தனர். இதனால் யாருக்கு பாதிப்பு என்று சீனா யோசிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump says if xi jinping does not meet me at G20, america will raise tariff on china

America President Donald Trump threatened to raise tariffs on China again if china President Jinping doesn’t meet with him at the upcoming Group of 20 meeting in Japan. If doest meet me means america much higher than 25% on $300 billion in another Chinese goods.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X