என்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆக்ரா : உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், இந்தியாவில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி இடத்தை சுற்றி பார்க்க கட்டணம் மூன்று மணி நேரத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமாம்.

 

ஆமாப்பு.. ஏற்கனவே இருந்த கட்டணமுறையுடன் ஒப்பிடும்போது, தற்போது கட்டணம் அதிகரித்துள்ளதாம். முன்னதாக ஒரு வெளி நாட்டு சுற்றுலா பயணி தாஜ்மஹாலுக்குள் சென்று பார்க்க வேண்டுமெனில் கட்டணமாக 1100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்ததாம்

என்னய்யா கொடுமை இது.. தாஜ்மஹால்ல மூனு மணி நேரத்துக்கு மேல இருந்தா கட்டணம் அதிகமாம்

.
இதே SAARC, BIMSTIC, நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 540 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. (ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாள், பாகிஸ்தான், மற்றும் இலங்கை, தாய்லாந்து)

இனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி!

இதே உள்நாட்டினருக்கு ரூ.50 கட்டணமாக இருந்தது. இது போக தாஜ்மஹாலில் உள்ள மீயூசியத்திற்கு போக வேண்டுமெனில் கூடுதலாக 200 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. அதோடு 15 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்றும் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான சுற்றறிக்கைகள் வரலாம் என்றும் கருதப்படுகிறது.

காலையில் நுழைவு வாயிலில் டிக்கெட் வாங்கிக் கொண்டு தாஜ்மாஹாலினுள் சென்றால் பிறகே வெளியே வரும் போது அதற்கேற்ப ( நேரத்திற்கு ஏற்ப ) கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்னதாக காலையில் சூரிய அஸ்தமத்திற்கு முன்பு அரைமணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலையில் சூரிய அஸ்தமனத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்கள் தரப்படுகின்றன. அதே போல் சூரிய அஸ்தமனத்திற்கு பின் 45 நிமிடங்கள் வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்களாம்.

 

இதோடு https://asi.payumoney.com என்ற இனையதளத்தின் மூலம் டிக்கெட்கள் பதிவு செய்பவர்களுக்கு சில சலுகைகளும் உண்டாம்.

ஏற்கனவே இந்தியர்களுக்கான டிக்கெட் விலையை விட ஒப்பிடும் போது வெளி நாட்டவர்களுக்கு சுமார் 10 மடங்கு வரை டிக்கெட் விலை அதிகம், இனி இத்திட்டம் அமலுக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: taj mahal
English summary

Visitors more than three hours at the Taj mahal will now be charged an additional fee

Visitors who spend more than three hours at the Taj mahal will now be charged an additional fee. But its earlier visitors were allowed to stay from morning till evening.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X