கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கறி பீட்சா நிறுவனம், சாப்பிடும் போது செல்போனை பயன்படுத்தாமல் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த பீட்சா நிறுவனம் இலவசமாக பீட்சாவை வழங்கும் என்றும் அறிவித்துள்ளதாம். நல்ல ஆஃபர் இல்ல.
இது குறித்து அந்த பீட்சா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளது.

அதோடு மக்கள் தங்கள் குடும்பத்துடனே நண்பர்களுடனோ சேர்ந்து நேரம் செலவளிக்க இது ஒரு வாய்பாக அமையும் என்றும் இந்த பீட்சா நிறுவனம் அறிவித்துள்ளதாம்.
எனினும் இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ள ஒரு விதிமுறையும் உண்டு. அது குழுவாக சாப்பிட வந்தால் அந்தக் குழுவில் இருப்பவர்களுள் குறைந்தபட்சம் நான்கு பேராவது செல் ஃபோன் பயன்படுத்தாமல் சாப்பிட வேண்டுமாம்.
அப்படி செல் போன் இல்லாமல் சாப்பிட்டால் மட்டுமே, அந்த ஒட்டுமொத்த குழுவுக்கும் இலவச பீட்சா வழங்குகிறதாம் இந்த பீட்சா உணவகம். இந்த சவாலுக்குத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்கள் உணவகப் பணியாளர்களிடம் தங்களது செல்ஃபோனை ஒப்படைத்துவிட வேண்டுமாம்.
அதோடு செல்ஃபோன்களும் லாக்கரில் வைக்கப்படுமாம். அப்போது செல்ஃபோன் இல்லாமல் உடன் வந்தவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு, அடுத்து வரும்போது இலவசமாக பீட்சா வழங்கப்படுமாம். வேண்டுமென்றால் அவர்கள் கையோடு வீட்டுக்கும் இந்த இல்வச பீட்சா வாங்கிச் செல்லலாமாம்.
அவ்வாறு அடுத்த வருகையின் போது இந்த பீட்சாவை வாங்கிக் கொள்ள அடுத்த 24 மணி நேரம் தான் நேரம் தான் கெடுவாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பல அடங்கிய குழுக்களாக சாப்பிட வருபவர்கள், இந்த திட்டத்தின் மூலம் உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ பேச நேரம் கிடைக்கும்.
இதில் நாங்கள் குழுக்களாக வருபவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர் இவ்வாறு இலவசமாக கிடைக்கும் பீட்சாவை சிலர் தானாம் செய்கின்றனர். அதை பிரிஸ்னோவில் உள்ள வீடு அற்றவர்களுக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறோம். ஆக நீங்கள் பீட்சா சாப்பிட பலரை அழைத்து வாருங்கள் என்கிறார்களாம் இந்த நிறுவனத்தினர்.
இது குறித்து கூறிய இந்த நிறுவனத்தின் கோ- நிறுவனர் வரிந்தர் மால்கி, மக்கள் தங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிட வேண்டும், அதோடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிக்கும் செல்போன் பயன்பாட்டினை குறைக்கவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக அந்த கறி பீட்சா நிறுவனர் தெரிவித்துள்ளாராம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications