வாராணாசி : யம்மாடியோவ் இது என்ன ரயில்வே ஸ்டேஷனா? இல்லை ஏர்போர்ட்டா இப்படி இருக்கு என்கிற அளவுக்கு தாங்க, நம்ம வாராணாசி தொகுதியில் உள்ள மந்துவாடி ரயில் நிலையம் அமைந்திருக்காம்.
அட சூப்பர்லா.. வேர்ல்டு கிளாஸ் லெவல்ல அமைசிருக்காங்க இந்த டாப் லெவல் ரயில் நிலையம், சும்மாவா நம்ம பிரதமர் மோடியோட தொகுதியாச்சே, அப்படிதான் இருக்கும்.
இதுல என்ன குறைன்னா மந்துவாடிங்கிறது நல்லாவே இல்லையாமாங்க? அதுனால நம்ம மோடிஜி இந்த பேர் "பனாரஸ் ரயில் நிலையம்" மாத்த சொல்லி இருக்காராம். இதுக்காக பரிந்துரையும் அனுப்பி இருக்காராம்.
மந்துவாடில்ல என்னதான் இருக்கு?
அட என்னங்க இப்படி கேட்டீங்க? மந்துவாடி ரயில் நிலையத்துல எல்லாமே ஸ்பெஷல் தாங்க. அது, அங்க கட்டி இருக்கிற கட்டிடம் மட்டும் இல்லங்க. பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் இருக்காம். ஆமாங்க.. பயனிகள் தங்குவதற்கான குளிரூட்டப்பட்ட அறைகள், அங்குள்ள மற்ற பயணிகள் அமருவதற்கான இட வசதிகள் என அனைத்துமே மிக தரமானதாகவும் பார்ப்போரின் கண்களை பிரமிக்க வைப்பதாகவும் உள்ளதாம்.
புதிய டெக்னாலஜியுடன்?
ஆமாப்பு.. இங்குள்ள பல்புகள் முதல் கொண்டு அனைத்தும் எல்.இ.டிகளாகும். அதோடு தகவல் பலகை முதல் கொண்டு எல்.இ.டிக்களாக உள்ளனவாம். அதுவும் தூய்மையுடனும் தரமானதாகவும் உள்ளனவாம். இங்க எல்லாமே எல்.இ.டி பேனல்களாகவே உள்ளனவாம். அதோடு பரவலான காத்திருப்பு அறைகள் அது நுட்ப வசதியுடனும் செய்யப்பட்டுள்ளதாம்.
நீருற்றுகள்!
இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் வந்தோரை வரவேற்கும் விதமாக நீருற்றுகள் அமைக்கப்படுகின்றன. அதோடு கட்டிட கலையோடு சேர்த்து காசியின் அழகையும் வர்ணிக்கும் விதமாக இந்த கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவாம். இது ரயில் நிலையத்திற்கு வருவோரின் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்துள்ளதாம்.
சுத்தமான ரயில் நிலையம்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இங்குள்ள பிளார்ட் பார்ம்கள் மிக தூய்மையாகவும் பளப்பளாகவும் காணப்படுகின்றனவாம். அதோடு அழகான சுற்றுசூழலுடன், முன்பதிவு செய்வதற்கான இடம், வெயிட்டிங் ஹால், உணவு விடுதிகள் என பலவும் மிக சுத்தமாக காணப்படுகின்றவாம்.
சர்வதேச தரத்தில் ரயில் நிலையம்
இந்த மந்தவாடி ரயில் நிலையம் சர்வதேச அளவில் மிகத் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருப்பதோடு, இது வாராணாசி மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அள்ளித் தருகிறதாம். அதோடு தற்போதைக்கு இந்த ரயில் நிலையத்தில் 8 பிளார்ட்பார்ம்கள் உள்ளனவாம். அதோடு இங்கிருந்து 8 எட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் பலர் தங்களது வேலை வாய்ப்பினை பெறுகின்றனராம். நல்ல விஷயம் தானே.
பனாரஸ் நல்லா இருக்குல்ல!
மத்தியில் உள்ள மோடி அரசு இந்த ரயில் நிலையத்தின் பெயரை மாற்ற பரிந்துரை செய்துள்ளதாம். ஆமாங்க.. மந்துவாடி என்கிற பெயரை மாற்றி பனாரஸ் ரயில் நிலையம் என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாம். இதுகுறித்து முன்னாள் ரயில்வே அமைச்சர் மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்திற்கு முன்னரே கடிதமும் எழுதியுள்ளராம்
மோடி ஆட்சியில் வரலாற்றுக்கு முக்கியத்துவம்
இது முன்னர் தேர்தல் காலத்தினால் சரியான முடிவை எட்டபடவில்லையாம். ஆக கூடிய விரைவில் இது பனாரஸ் ரயில் நிலையம் என்று மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இங்குள்ள மக்கள் வாராணாசி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்றும். ஏனெனில் நகரத்தின் முக்கிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பனாரஸ் பெயர் வைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனராம்.
More From GoodReturns

மோடியின் திடீர் அவசர CCS கூட்டம்.. எதற்காக ஞாயிற்றுக்கிழமை மீட்டிங்..? என்ன நடந்தது..?!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications