மும்பை : தற்போதைய பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு ஒரு புறம் Non Performing Asset என்று சொல்லக் கூடிய வாராக்கடன் என்பது பெரும் தலைவலியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வாராக்கடன்களின் மதிப்பு எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளது என அறிவித்துள்ளது.
ஆமாங்க.. கணினி அளவிலான செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த மார்ச்2019 மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 9.3 சதவிகிதமாக குறைந்துள்ளதாம்.

இது முன்னர் கடந்த மார்ச் 2018ல் 11.5 சதவிகிதமாக வாராக்கடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விடவும் இந்த வளர்ச்சி விரைவாக நடந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
குறிப்பாக பல வங்கிகள் நீண்டகாலத்திற்கு பிறகு வாராக்கடன் அதிகரிப்பின் காரணமாக, தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனவாம் வாராக்கடனை குறைக்க. ஆமாங்க வாராக்கடனை வசூலிக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனவாம்.
இதே கடந்த மார்ச் 2019ல் மொத்த செயற்படாத சொத்துக்களின் மதிப்பு 10.3 சதவிகிதமாக குறைந்துள்ளதாம். இதுவே செப்டம்பர் 2018ல் 10.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கிரில் அறிக்கை இது குறித்து கூறியிருப்பதாவது, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிலும் சரி, தனியார் வங்கிகளிலும் சரி கடந்த அரையாண்டுகளாக வாராக்கடன்களில் அளவு குறைந்து வருகின்றனவாம்.
அதிலும் வாராக்கடன் மற்றும் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 2015ல் இருந்து தற்போது குறைந்து காணப்படுகிறது. இது மிக நல்ல விஷயமே என்கிறது இந்த அறிக்கை.
அதோடு ரிசர்வ் வங்கியின் சொத்து மதிப்பாய்வு அதிகப்படியான வாராக்கடன்களுக்கு வழிவகுத்தது. எனினும் இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசு திவால் சட்டத்தை கொண்டு வந்தது.
எனினும் பல திவால் சட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் முன்னேற்றம் இல்லாமலேயே காணப்படுகிறது. எனினும் சில சட்ட சிக்கல்கள் காரணமாக இதில் தீர்மானங்கள் தாமதப்படுத்தப்படலாம் எனினும் விரைவில் தீர்வு காணப்படலாம் என நம்பபடுகிறது. இந்த நிலையில் வாராக்கடன்களின் அளவு இன்னும் குறையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications