என்னய்யா சொல்றீங்க இங்கிலாந்து வங்கிக்கு ஆளுனரா.. யாரு நம்ம ரகுராம் ராஜனா.. நல்ல விஷயம் தானே!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ரகுராம் ராஜன், இங்கிலாந்து வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாராம். நல்ல விஷயம் தானேய்ய, இந்தியர் இங்கிலாந்தில் ஆளுனரான இந்தியாவுக்கே பெருமை தானா?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நம்ம ரகுராம் ராஜன் தான் டாப் கன்டெண்டராம். ஆமாங்க.. இங்கிலாந்து மக்கள் ரகுராம் ராஜன் தான் சிறந்த போட்டியாளர் என்றும் சொல்லி இருக்காங்களாம்.

என்னய்யா சொல்றீங்க இங்கிலாந்து வங்கிக்கு ஆளுனரா.. யாரு நம்ம ரகுராம் ராஜனா.. நல்ல விஷயம் தானே!!

கடந்த செப்டம்பர்- 2013 மற்றும் செப்டம்பர் -2016 ஆம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆளுநராக இருந்தவர் தான் ரகுராம் ராஜன். 56 வயதான இவர் தற்போது சிகாகோ பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராக இருக்கிறார். அதோடு கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனராகவும் ரகுராம் ராஜன் பொறுப்பு வகித்து வந்தார்.

இதனிடையே 2007 - 2008 உலக நெருக்கடிக்கு இடையிலான நிதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி நன்றாக தெரிந்து கொண்டவர்களில் ரகுராம் ராஜனும் ஒருவர்.

இந்த நிலையில் கனடாவைச் சேர்ந்த கார்னி, கடந்த ஜூலை 1, 2013 அன்று தனது பதவியை ஏற்றுக் கொண்டாராம். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் முதல் வெளிநாட்டு கவர்னர் இவரே ஆவார். அதோடு கார்னி 2020ம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி அவர் பதவி விலகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த கவனர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ரகுராம் ராஜன் விண்ணப்பிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக இருக்கும் மார்க் கார்னிக்குப் பின்னர், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்கால ஆளுநராக ஆய்வாளர்களால் ரகுராம் ராஜன் தேர்தெடுக்கபடலாம் என்றும் கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இது தற்போது உண்மையாகும் விதமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகாகோ பல்கலைக் கழகத்தில் நிதியியல் பேராசிரியரும் சரிவதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan top contender for Bank of England Governor

Reserve Bank of India chief Raghuram rajani is moving up in the next Bank of England governor.
Story first published: Thursday, June 13, 2019, 9:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X