வாஷிங்டன்: நாங்க உங்க பொருளுக்கு பெரிசா வரி போடறது இல்லை. அதேபோல நீங்களும் போடக்கூடாது, என்ன டீல் ஓகேவா ... வாங்க திறந்த மனசோடு பேசுவோம். மனசு விட்டுபேசுனா எல்லாத்துக்கும் தீர்வு உண்டு... என்ற ரீதயில் இந்தியாவுடனான வணிகம் குறித்து பேச அமேரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்காவில் வரி விதிப்பதில்லை ஆனால் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 100 % வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் கூறிவருகிறார்.
இது தொடர்பாக அமெரிக்கத் தொலைக்காட்சியான சி.என்.பி.சி-க்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேட்டி அளித்தார்.
வரியை குறைந்த மோடி
அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 100% வரி விதிக்க கூடாது என்று தான் இந்திய பிரதமர் மோடியிடம் பேசியதாகவும் அவர் உடனடியாக வரியை 50% ஆக குறைத்து விட்டதாகவும் இது ஒரே ஒரு போன் காலில் முடிந்து விட்டது என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
எங்களுக்கு பற்றாக்குறை
இருந்தாலும் அமெரிக்கா இந்திய வணிகம் குறித்து தொடர்ந்து அதிருப்தியிலேயே இருந்து வருகிறது. அனைவரும் கொள்ளையடிக்க விரும்புகிற வங்கி போல அமெரிக்கா இருக்கிறது. இதைத்தான் அனைவரும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளால் நமக்கு 800 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது எனவும் ட்ரம்ப் கூறியிருந்தார்' என்றார்.
போட்டிய ஏத்துக்கங்க
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு வருகிற 24ந்தேதி முதல் 30ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் மேற்கொள்ள உள்ளதையடுத்து இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை பற்றி பேசிய அவர், "வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தொடர்ந்து தயாராக உள்ளோம். இந்தியாவில் இருக்கும் தங்களது வணிக நண்பர்கள் வர்த்தக தடைகளை கைவிட்டு, வர்த்தக போட்டியில் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என நம்புகிறேன். தன்னுடைய இந்திய வருகையின் போது ஜி.எஸ்.பி. முடிவு பற்றி ஆலோசிக்கப்படலாம்" என்று கூறினார்.
கடுமையான நிலைப்பாடு
இதேபோன்று இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி பேசிய அவர், எங்களுடைய பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன என்று கூறியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை தாங்கள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications