Amazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி..! வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு: அமேசான் (Amazon) இந்தியா ஏற்கனவே ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக பேக்கேஜிங்கு என்று மெஷின்களை வேலைக்கு அமர்த்தியது. தற்போது டெலிவரியை வேகமாக்க வேண்டும் என்று பகுதி நேர ஊதியத்திற்காக மாணவர்கள், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், வீட்டில் உள்ள பெண்கள் என அனைவருக்கும் அமேசான் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.

 

இது குறித்து அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் இ- காமர்ஸ் வணிகத்தில் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இந்த இ-காமர்ஸ் நிறுவனங்களின் முக்கிய வேலையே விரைவில் டெலிவரி செய்வது தான்.

 
Amazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி..! வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon!

ஆக இதற்காகத் தான் அமேசான் இப்படியொரு வாய்ப்பினை அறிவித்துள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கும், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், வீட்டில் இருந்து கொண்டு பகுதி நேரமாக பணி புரிய நினைக்கும் பெண்களுக்கும் இது மிக உதவும்.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று விரைவான டெலிவரியை செய்ய முடியும். மற்றொன்று உபர் போன்று சாதகமான நேரங்களில் வேலை செய்ய முடியும்.

இந்தியாவில் சரியான பொருட்களை தேர்வு செய்து, பின்னர் அதை ஓரிரு நாட்களில் டெலிவரி செய்வதற்காக அமேசான் பல வழிகளில் முயன்று வருகிறதாம். அதோடு சில பிரைம் ஆஃபர்களில் வழங்கப்படும் பொருட்களில் ஓரிரு நாட்களில் டெலிவரி செய்யப்பட வேண்டுமாம். அதோடு சில பொருட்களுக்கு அடுத்த நாளே டெலிவரி செய்யப்படவும் வேண்டுமாம். அதற்காக இந்த புதிய திட்டம் உதவும் எனவும் அமேசான் கூறியுள்ளது.

இவ்வாறு உடனடியாக டெலிவரி செய்ய வேண்டிய காலத்தில், இந்த பகுதி நேர ஊழியர்கள் மிக பயனடைவார்கள் என்றும் அமேசான் அறிவித்துள்ளது. அதோடு அமேசானில் இந்த பிளெக்சி ஜாப் தேவையான சிலருக்கு ஓய்வு நேரத்திலும் சம்பாதிக்க உதவும். அதோடு சிலருக்கு கூடுதல் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

ஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க! ஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க!

இவ்வாறு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலை செய்ய முடியும் என்றால் மணிக்கு ரூ.120 -140 வரை இதன் மூலம் பெற முடியுமாம். அதோடு இவ்வாறு இந்த ஃபிளக்சி முறையில் வேலை செய்பவர்களுக்கு வாரத்தில் ஒவ்வொரு புதன் கிழமையன்று டெலிவரி செய்ததற்கான சம்பளத் தொகையையும் பெற முடியுமாம்.

குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களுரூ ஆகிய இடங்களில் இந்த ஆண்டு துவங்க திட்டமிட்டுள்ளது அமேசான். அமேசான் இந்தியாவில் கடந்த 2013ல் நுழைந்தது. அதோடு 99.9% அதன் பின் கோடுகளை பயன்படுத்தி டெலிவரி செய்தும் வருகிறது.

அதோடு 4 லட்சம் விற்பனையாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 170 மில்லியன் பொருட்களை விற்பனை செய்தும் வருகிறது. கடந்த 2017ல் அமேசான் அதன் உள்கட்டமப்பு சேமிப்பு அறையை 1.5 மடங்கு அதிகரித்து 20 மில்லியனுக்கு அதிகமான கன அடியாக உயர்த்தியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon India is offer to students, homemakers and retired professionals for part-time jobs

Amazon India is offer to students, homemakers and retired professionals for part-time jobs, and its may faster deliveries during peak season and creating Uber-style flexible jobs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X