Apple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா?

பெய்ஜிங் : அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக போரால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, இந்த இரு நாடுகளில் உள்ள நிறுவனங்களும் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த வர்த்தக பிரச்சனையால் முதலில் பாதிக்கப்படுவது என்னவோ ஸ்மார்ட்போன்களின் உலகம் என்று கூறப்படும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆப்பிள் இன்க் நிறுவனமே. ஆமாங்க.. இந்த நிறுவனம் அமெரிக்காவில் இருந்தாலும் இதன் முக்கிய உற்பத்தி சீனாவிலும் மற்ற நாடுகளிலும் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போரால் ஆப்பிள் ஐபோன் உற்பத்திக்கான செலவுகள் சுமார் 3 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் அமெரிக்கா சீனா பிரச்சனை மேலும் வலுவடைந்து வருவதால் இந்த இரு நாடுகளின் நிறுவனங்களும் வர்த்தகம் மேற்கொள்ள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த பிரச்சனை முடிவுக்கே வராதா?

இந்த பிரச்சனை முடிவுக்கே வராதா?

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும், ஐஃபோன் உதிரிபாகங்கள் பலவற்றை சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போர், மேன்மேலும் வலுவடைந்து கொண்டே செல்லும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி மிக பாதிப்படைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது?

ஆப்பிள் நிறுவனத்திற்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான வரி 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இந்த இரண்டு நாடுகளும் இப்படி வரிகளை மாறி மாறி உயர்த்தி வரும் நிலையில், இரு நாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தை செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது பெருத்த அடியாகவே உள்ளது. இந்த நிலையில் ஐபோன் உற்பத்திக்கான செலவுகளும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

லாபமும் குறையும்?

லாபமும் குறையும்?

இந்த நிலையில் ஏற்கனவே ப்ரீமியம் மொபைல் ஃபோன் சந்தையை இழந்து வரும் ஆப்பிள், இனி ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்குமா என்றும் அஞ்சப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும், வரி அதிகரிக்கும் என்ற பிரச்னையும் எழுந்துள்ளது. இதனால் ஐஃபோன் உற்பத்தி செலவு அதிகரித்து லாபம் குறையலாம், அதோடு விற்பனையும் சரியலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

எனினும் முக்கிய சந்தையே சீனா தான்?

எனினும் முக்கிய சந்தையே சீனா தான்?

இது குறித்து Hon Hai Precision Industry Co நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறும்போது, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் உற்பத்தியை செய்யும் அளவிற்கு போதுமான திறன் உள்ளது என்று கூறியுள்ளார். எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய வணிக நாடு சீனாவாகும். குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபாட்களின் முக்கிய சந்தையே சீனாதான் என்றும் கூறியுள்ளராம்.

பங்காளியாகும் ஃபாக்ஸ்கான்

பங்காளியாகும் ஃபாக்ஸ்கான்

இந்த நிலையில் அமெரிக்கா மேலும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் மீது வரியை அதிகரிப்பதாக கூறி வருகிறது. இந்த நிலையில் அவ்வாறு வரி உயர்த்தப்பட்டால், ஆப்பிள் நிறுவனம் மேலும் பாதிக்கப்படும். அதோடு ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமெரிக்காவின் மிக நெருங்கிய உற்பத்தி பங்களியாகும். ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக லாபத்தை கொடுக்கும் வகையில் பொருட்களை இறக்குமதி செய்தால் சீனாவை ஆதரிக்கும்.இல்லையேல் அது மற்ற நாடுகளிடம் கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும். அதே சமயம் அமெரிக்க சீனாவின் உற்பத்தி தவிர ஏற்கனவே 25% உற்பத்தியை மற்ற நாடுகளிடம் இருந்து வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவி செய்ய ஃபாக்ஸ்கான் தயாராக உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவி செய்ய ஃபாக்ஸ்கான் தயாராக உள்ளது.

அதோடு ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவை எனில் சீனா உதவி செய்யவும் தயாராக இருக்கிறது. அதை சீனாவிலிருந்து தான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ஆப்பிளின் கோரிக்கையை நிறைவேற்ற இது போதுமானதாக இருக்கும் எனவும் கூறினார். மேலும் Hon Hai board nominee and semiconductor division chief Young Liu கூறுகையில், ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து உற்பத்தியை அப்புறபடுத்துவதாகவும், எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை. ஆனால் தேவையை பொறுத்து மற்ற இடங்களுக்கு நகர்த்தும் திறனையும் தற்போது கொண்டுள்ளது கவனிக்கதக்கது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் தேவைப்படுகிறது!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் தேவைப்படுகிறது!

தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தொழிற்சாலைகள் வரை தேவைப்படுகிறது. ஐபோன் நிறுவனத்திற்கு தேவைப்படும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதற்கும், அதோடு மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்யப்படுவதற்கும் தேவைப்படுகிறது. தற்போது இதனாலேயே சில நாடுகள் தங்களது ஆர்டர்களை தள்ளி வைத்திருக்கின்றன. இதை அவ்வளவு எளிதாக விடவும் முடியாது.

சர்வதேச அளவில் பல நாடுகளை பாதிக்கும்?

சர்வதேச அளவில் பல நாடுகளை பாதிக்கும்?

ஃபாக்ஸ்கான் நிறுவனம் சர்வதேச அளவில் தனது பொருட்களை விரிவாக்கம் செய்ய முடியும். ஆனால் அது சில சீன தொழிற்சாலைகளுக்கு பொருத்தமற்றதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இது அவ்வளவு எளிதானது அல்ல. அதோடு இந்த வர்த்தக யுத்தம் சீனாவிற்கும் - அமெரிக்காவிற்கும் அப்பால் உள்ள பல நாடுகளை பாதிக்கும் சங்கிலி தொடராக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா தைவானில் இருக்கும் மொபைகள்களுக்கான சிப் தயாரிக்கும் நிறுவனம் தைவானிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற நிலையும் நிலவி வருகிறது.

சென்னையில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது?

சென்னையில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது?

இது எளிதில் சீனாவில் இருந்து மாற்றப்படலாம். ஆனால் ஒரு மொபைலுக்கு தேவையான போனை செய்வதற்கு தேவையான அனைத்து கூறுகளையும் உற்பத்தி செய்வது என்பது மிக கடினமான விஷயம் என்று மாவ்ஸ்டன் கூறியுள்ளார். தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன் எக்ஸ்.ஆர் தொடர்வரிசைக்கு தரப்பரிசோதனை நடத்தியுள்ளது. இது சென்னை புற நகர் பகுதியில் பெரும் உற்பத்தியை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பழைய மாடல்களை அசெம்பிளிங் செய்யும் விஸ்டிரான் ஆலை ஒன்று பெங்களூரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படியோ விரைவில் ஆப்பிள் நிறுவனம் சென்னைக்கு வரலாம் என இதன் மூலம் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+