குருகிராம்: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமான சேவை நிறுவனமான Indigo சில வாரங்களுக்கு முன் 999 ரூபாய் முதல் 3,299 ரூபாய்க்குள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் என ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் இருக்கைகளை விற்கத் தீர்மானித்திருந்தது. இந்த திட்டம் இன்றோடு நிறைவடைய இருக்கிறது. 999 ரூபாயில் இருந்து 3,299 ரூபாய் வரை இந்தியாவின் பல விமான வழி தடங்களிலும் விமான பயணச் சீட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.

26 ஜூன் 2019 முதல் 28 செப்டம்பர் 2019 வரையான 90 நாட்களுக்கு எடுக்கும் விமான பயணச் சீட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை விலையில் விமான பயனச் சீட்டுகளை புக் செய்ய முடியுமாம்.
டெல்லி - அஹமதாபாத் - 1,799
டெல்லி - பெங்களூரு - 3,299
டெல்லி - சண்டிகர் - 1,299
டெல்லி - ஜெய்பூர் - 1,499
ஜெய்பூர் - டெல்லி - 1,799
கோவா - ஹைதராபாத் - 1,499
ஹைதராபாத் - பெங்களூரூ - 1,899
டெல்லி - டேராடூன் - 1,999
என இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான விமான பயணச் சீட்டு விலைப் பட்டியல் நீள்கிறது.
உள்நாட்டில் மட்டும் இன்றி வெளிநாடுகளுக்குமான விமான பயணச் சீட்டு சலுகை விலை பட்டியலை தன் வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது Indigo.
டெல்லி - அபுதாபி - 6,799
பெங்களூரூ - பேங்காக் - 6,899
கொல்கத்தா - பேங்காக் - 5,099
ஹைதராபாத் - துபாய் - 8,999
டெல்லி - துபாய் - 7,799
டெல்லி - கோலாலம்பூர் - 6,599
என சர்வதேச விமான வழித் தட சலுகை விலைகள் இருக்கின்றன.
அதோடு Indigo விமானத்தில் பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்ய இண்டஸ் இந்த் கார்டுகளை பயன்படுத்தினால் 20% அல்லது 2000 ரூபாய் கேஷ் பேக் வேறு கொடுக்கிறார்களாம். ஆனால் அதற்கு 4,000 ரூபாயாவது குறைந்தபட்சம் Indigo விமானத்தில் முன் பதிவு செய்ய வேண்டுமாம்.
அதே போல ஐசிஐசிஐ பேங்கின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் முன் பதிவு செய்பவர்களுக்கு 5% அல்லது 1,000 ரூபாய் கேஷ் பேக் கொடுக்கிறார்களாம். ஆனால் அதற்கு 6,000 ரூபாயாவது குறைந்தபட்சம் Indigo விமானத்தில் முன் பதிவு செய்ய வேண்டுமாம்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சத்தம் காட்டாமல் சீன விமானப் பயணிகள் சந்தையில் கால் பதிக்கத் தொடங்கி இருக்கிறது Indigo. கடந்த ஜுன் 10-ம் தேதி கொல்கத்தா முதல் ஹாங்காங் வரையான நிறுத்தமில்லா (நான் ஸ்டாப்) நான்கு மணிநேர விமான சேவையைத் துவக்கி இருக்கிறார்கள்.
அதோடு வரும் ஜூன் 15-ம் தேதி முதல் டெல்லி முதல் செங்குடு (chengdu) வரையான நிறுத்தமில்லா 5 மணி நேர விமான சேவையையும் அறிமுகப்படுத்தி சந்தை கலக்கப் போகிறதாம். ஆக மகா ஜனங்களே கொஞ்சம் குறைந்த விலையில் பறக்க நினைப்பவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிக்கெட் போடவும்.


Click it and Unblock the Notifications