பட்டியில் சிக்கிய கறுப்பு ஆடுகள்.. சுவிஸ், கறுப்பு பண முதலாளிகளுக்கு செக்.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்!

டெல்லி : இந்தியாவின் பெரும்பான்மையான கறுப்பு பணம், சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டு இருப்பதை கடந்த முறை மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே களையத் தொடங்கினார். அதற்காக பல வெளி நாடுகளின் ஆதரவையும் நாடி வந்தார் பிரதமர் மோடி. இந்த நிலையில் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பட்டியலை அனுப்ப சுவிஸ் வங்கிக்கும் இந்திய அரசுக்கும் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை இந்திய அரசு பகிர்ந்து கொள்ள சுவிஸ் அரசு உத்தரவிட்டுள்ளதாம்.

இந்தியா-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே, நிதி பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த வங்கி விவர பரிமாற்றங்கள் நடந்து கொள்ளவதாகவும் கூறப்படுகிறது.

போலியான தகவல்கள் மூலம் சுவிஸ்சில் வங்கிக் கணக்கு

போலியான தகவல்கள் மூலம் சுவிஸ்சில் வங்கிக் கணக்கு

இந்த நிலையில் சுவிஸ் வங்கி 50 நபர்களுடைய சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டதாக கூறப்படும் பணமாக இருக்கலாம் என நினைக்கும் 50 பேரின் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை அளிக்க முன் வந்துள்ளதாம் சுவிஸ் வங்கி. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 பேர்கள் இந்தியாவில் ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், தொழில் நுட்பம் மற்றும் டெலிகாம், வர்ணங்கள். வீட்டு அலங்காரம், ஜவுளி, பொறியியல் பொருட்கள், கற்கள் மற்றும் நகைகள் போன்ற துறைகளில் உள்ளிட்ட துறைகளில் தாங்கள் வர்த்தகம் செய்வதாகவும், அதன்படி போலியான நிறுவன தகவல்களை அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக இந்த 50 பேரின் மேல் சந்தேகம் உள்ளதாகவும் சுவிஸ் வங்கி அறிவித்துள்ளதாம்.

கறுப்பு பணம் பதுக்கல்

கறுப்பு பணம் பதுக்கல்

இந்த வகையில் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவில் நிறுவனம் நடத்துவதாக கூறி, வங்கி கணக்குகளை தொடங்கி அதன் மூலம் பணத்தை பதுக்கியிருப்பதாக கூறப்படும், 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை, மத்திய அரசிடம் அளிக்க சுவிஸ் அரசு முன்வந்திருக்கிறதாம்

கணக்கில் வராத பணத்திற்கு வரி

கணக்கில் வராத பணத்திற்கு வரி

இதன்மூலம், சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின், கணக்கில் வராத சொத்துக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் மீது வரி செலுத்த செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 50 இந்தியர்களுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. தங்களது சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு கடைசி வாய்ப்பை இந்த நோட்டீஸ் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. மேலும், 30 நாட்களுக்குள் இவர்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

நிராகரிக்கப்பட்ட ஆவணங்கள்

நிராகரிக்கப்பட்ட ஆவணங்கள்

அதோடு இந்த நோட்டீசுக்கு முன்பாகவே, இவர்களில் சிலர் தாக்கல் செய்திருந்த ஆரம்பநிலை அப்பீல்கள், போதிய உண்மை விவரங்கள், ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான், இப்போது இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இதற்கு எதிரான அப்பீல்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளதாம்.

கூண்டில் சிக்கிய கறுப்பு பதுக்கல்வாதிகள்

கூண்டில் சிக்கிய கறுப்பு பதுக்கல்வாதிகள்

முழுபெயருடன் அரசு அறிவிப்பு ஆணையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியியலில் சிலரின் பெயர்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ண பகவான் ராம்சந்த், பொட்லூரி ராஜ்மோகன் ராவ், கல்பேஷ் ஹர்ஷத் கினாரிவாலா, குல்தீப் சிங் திங்ரா, பாஸ்கரன் நளினி, லலிதாபென் சிமன்பாய் படேல், சஞ்சய் டால்மியா, பங்கஜ் குமார் சரோகி, அனில் பரத்வாஜ், தரணி ரேணு திகம்தாஸ், மகேஷ் திகம்தாஸ் தரணி, சவானி விஜய் கனையாலால், பாஸ்கரல் தரூர், கல்பேஷ்பாய் படேல் மகேந்திரபாய், அஜய் குமார், தினேஷ்குமார் ஹிமத்சிங்கா, ரதன் சிங் சவுத்ரி, கதோடியா ராகேஷ் குமார் உள்ளிட்ட பலர் இந்த பட்டியியலில் இடம் பெற்றுள்ளனர்.

சிலரின் பெயர்கள் மட்டும் ரகசிய வார்த்தைகள்

சிலரின் பெயர்கள் மட்டும் ரகசிய வார்த்தைகள்

எனினும் குறிப்பிட்ட பலரின் பெயர்களை, ரகசிய வார்த்தையின் மூலமே மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் NMA, MMA, PAS, RAS, ABKI, APS, ASBK, MLA, ADS, RPN, MCS, JNV, JD, AD, UG, YA, DM, SLS, UL, SS, RN, VL, UL, OPL, PM, PKK, BLS, SKN மற்றும் JKJ. என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியியலில் பலர் கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களாம். இவர்களது கம்பெனிகளும் அங்கு அமைந்துள்ளனவாம்.

நடவடிக்கை தொடரும்

நடவடிக்கை தொடரும்

இந்தியாவில் சில ஆண்டுகளாக மட்டும் சுவிஸ் வங்கி இந்தியாவுக்கு ஒத்துழைக்கும் வகையில், பல கறுப்பு பண வைத்திருப்பவர்களின் விவரங்களை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் சந்தேகிப்படும் பலரின் தகவல்களை சேகரித்து வருவதாகவும், அப்படி அவர்களில் யாரேனும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலோ, சந்தேககிக்கப்படும் வகையில் இருந்தாலோ அவர்களின் விவரங்கள் இந்திய அரசோடு பகிர்ந்து கொள்வதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுவிஸ் வங்கி அறிவித்துள்ளதாம்.

கறுப்பு பண பதுக்கல்களின் புகலிடம்

கறுப்பு பண பதுக்கல்களின் புகலிடம்

கறுப்புப் பணக்காரர்களின் புகலிடம் எனக் கருதப்படுகிற சுவிட்சர்லாந்து, சமீப ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வரி ஏய்ப்பாளர்கள், நிதி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+