கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியன் ரயில்வேகளில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மேற்கு ரயில்வே மண்டலம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில் பயணிகள் அலுப்பு தெரியாமல் போக மசாஜ் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. இதற்காக மேற்கு ரயில்வே மண்டலத்தின் இதற்கான அறிக்கையையும் முன்னர் அளித்தது.

கலாச்சாரத்திற்கு புறம்பான திட்டம்.. அதிரடியாய் ரத்து செய்த மேற்கு ரயில்வே.. இனி ரயிலில் மசாஜ் இல்லை!

அதோடு மேற்கு ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் பகர் கூறுகையில் தலை மற்றும் கால் மசாஜ் சேவையை ரத்லம் பிரிவில் முன்னர் தொடங்கப்பட்டது.

இது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்தவுடன், இந்த ரயில்வே மசாஜ் சேவைகளைத் தொடங்குவதற்கான இந்த திட்டத்தை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

வெகுதூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதுவாக, மசாஜ் சென்டர்களை ஓடும் ரயில்களிலேயே அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது நீண்ட தூர பயணிகளுக்கு கலைப்பு தெரியாமல் இருக்க இரயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய இந்திய இரயில்வே திட்டமிட்டிருந்தது.

கோல்ட், டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த மசாஜ் வசதி இரயில்களில் இரவு 10 மணி துவங்கி காலை 6 மணி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அதோடு சுமார் 15 - 20 நிமிடங்கள் வரை இந்த சேவை அளிக்கப்படும் என்றும், இதற்காக 100 - 300 ரூபாய் வரை வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது என்றும் ரயில்வே வாரியத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்திருந்தார்.ஆனால் இதைத் தொடர்ந்து இந்த முடிவு இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என இந்தூர் தொகுதி பாரதிய ஜனதா எம்பி ஷங்கர் லால்வானி, ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியிருந்தாராம். அதில், ரெயில்களில் பெண்களும் பயணிக்கும் போது அவர்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படும் என்பதால் மசாஜ் சென்டர் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாராம்.

 

ஆமாங்க .. அதோடு இதனைத் தொடர்ந்து மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதுபோன்ற சேவைகளை பயணிகளுக்கு முன்னால் வழங்குவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளாராம்.

இந்த நிலையில் இந்திய ரயில்களில் மசாஜ் சேவை தொடங்குவது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தூரில் இருந்து செல்லும் ரெயில்களில் மசாஜ் சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Western Railways to drops proposal of providing massage service in train

western Railway has decided to withdraw the proposal of providing head, neck and foot massages to the passengers of trains originating from Indore said chief spokesperson Ravinder Bhakar.
Story first published: Sunday, June 16, 2019, 18:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X