கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் மிகவும் மனம் கவர்ந்த வேலைவாய்ப்பு பிராண்டாக அமேசான் இந்தியா முன்னணியில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இது குறித்து ராண்டட் எம்ப்ளாயர் பிராண்டட் ரிசர்ச் 2019 (Randstad Employer Brand Research 2019) என்ற ஆய்வறிக்கையை கடந்த திங்கட் கிழமை வெளியிட்டது. இதன் படி அமேசான் இந்தியா தான் மக்களின் மனதில் பதிந்த முன்னணி வேலைவாய்ப்பு குறித்தான கவர்ச்சிகரமான பிராண்டாக உள்ளதாம்.

குறிப்பாக நிதி நிலைமை, சமீபத்திய தொழில் நுட்பம் உபயோகம், அதோடு நிறுவனத்திற்கு உள்ள நல்ல பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் வேலை தேடுவோர் மனதிலும் பணியாளர்கள் மனதிலும் அமேசான் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாம்.

கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்

அமேசானை தொடர்ந்து மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் சோனி இந்தியா கவர்ச்சிகரமான பிராண்டுகளாகவும் பணியாளர்கள் மனதில் உள்ளனவாம்.

அதே சமயம் 2019ம் ஆண்டில் இந்தியா பணியாளர்கள் மத்தியில் மிகவும் கவர்ச்சிகரமான இடத்தை முன்னணி நிறுவனங்களில் பென்ஸ் 4 வது இடத்தையும், ஐ.பி.எம் 5 வது இடத்தையும் இடம் பெற்றுள்ளனவாம்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் லார்சன் டூப்ரோ 6 வது இடத்திலும். நெஸ்லே 7 வது இடத்திலும் இன்ஃபோசிஸ் 8 வது இடத்திலும், சாம்சாங் 9 வது இடத்திலும் மற்றும் டெல் நீறுவனம் 10 வது இடத்திலும் இடம் பிடித்துள்ளனவாம்.

இதுவே கடந்த ஆண்டு ஆண்டு கூகுள் நிறுவனம் பாணியாளர்கள் மனதில் கவர்ச்சி கரமான நிறுவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக கூகிள் நிறுவனமே, இந்த கவ்ர்ச்சிகரமான முன்னணி இடத்தை பணியாளர்கள் மத்தியில் பிடித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது அமேசான் இந்தியா கூகுளை பின்னுக்கு தள்ளி, பணியாளர்களுக்கு பிடித்தது போல் மிகவும் மனம் கவர்ந்த பிராண்டுகளில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராண்டட் எம்ப்ளாயர் பிராண்டட் ரிசர்ச் நிறுவனம் உலக அளவில் 75 சதவிகித பொருளாதாரத்தை பங்கு கொள்ளும் 32 நாடுகளில், கிட்டதட்ட 2,00,000 மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளனவாம்.

 

இவ்வாறு ஒரு வேலையை தேர்தெடுக்கும் போது இந்தியர்கள் சம்பளம், பணியாளர்களுக்கான சலுகைகள், அதன் பிறகு, வேலை குறித்த சலுகைகள், குறிப்பாக வேலை குறித்த பாதுகாப்பு நிலை இதை எல்லாவற்றையும் ஆராய்கிறார்களாம்.

அதிலும் இந்தியர்களில் பெரும் பாலான பணியாளர்கள் 55 சதவிகிதம் மல்டி நேஷனல் நிறுவனங்களில் வேலை செய்யவே விரும்புகின்றனராம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் வெறும் 9 சதவிகிதம் பேர் மட்டுமே ஸ்டார்-அப் நிறுவனங்களில் பணி புரிய விரும்புகிறார்களாம்.

இதற்காக இவர்கள் கூறும் காரணங்கள், மல்டி நேஷனல் நிறுவனங்களை தேர்தெடுக்கும் போது வேலை பாதுகாப்பு, நிதியியல் நிலைமைகள், சுகாதாரம், மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்பிற்கான வலுவான காரணங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்களாம்.

இவ்வாறு வேலை தேடுபவர்களில் முதன்மையாக IT, ITES மற்றும் டெலிகாம் துறையில் 65 சதவிகிதம் பேரும், இதுவே ரீடெயில், எஃப்.எம்.சி.ஜி மற்றும் ஈ-காமர்ஸ் துறையில் 67 சதவிகிதம் பேரும் ஆட்டோ மொபைல் துறையில் 66 சதவிகிதம் பேரும், ஆட்டோமேட்டிவ் துறையில் 66 சதவிகிதமும், இதுவே பேங்கிங் மற்றும் பைனான்ஷியல் துறையில் 65 சதவிகிதம் பேரும் விரும்புகின்றனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amazon அமேசான்
English summary

Amazon is a most attractive employeer brand in india

E-commerce giant Amazon India is the most attractive employer brand in the country followed by Microsoft India and Sony India, says Randstad Employer Brand Research (REBR) 2019 on Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X