மும்பை : கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக நம்ம அனில் அம்பானியின் (Anil Ambani) கதை இருக்கிறது. ஒரு புறம் அண்ணன் சொத்துக்கு மேல் சொத்து சேர்த்துக் கொண்டு தொழிலில் கொடி கட்டு பறந்து கொண்டிருக்க மறுபுறம் அவரின் தம்பி அனில் அம்பானி எதுவெடுத்தாலும் நஷ்டம் என்றே இருக்கிறார்.
என்னதான் பணக்காரனாகவும் கோடிஸ்வரனாகவும் இருந்தாலும் கடனுக்கு மேல் கடன் அதிகரிக்கும் போது, அவர்களின் சொத்து மதிப்பு குறையத்தானே செய்யும். அப்படித்தான் நம்ம அனில் அம்பாயின் கதையும்.

ஒரு காலத்தில் உலக அளவில் பணக்காரர்களாக இருந்தவரின் சொத்து மதிப்பு தற்போது 42 பில்லியன் டாலரிலிருந்து 0.5 பில்லியன் டாலாராக குறைந்துள்ளதாம்.
இதனால் பில்லியனர்கள் பட்டியியலில் இருந்து அனில் அம்பானி வெளியேறிவிட்டாராம். கடந்த 11 ஆண்டுகளில் அனில் அம்பானியின் ஒட்டுமொத்த வர்த்தகம் சார்ந்த சொத்துக்கள் ரூ.3,651 கோடியிலிருந்து ரூ.765 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வரை ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்து மதிப்பு 8000 கோடி ரூபாயாக இருந்தது தான்.
எனினும் பல்வேறு நிறுவனங்களில் வைத்திருந்த நிலுவை தொகையின் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்குகளும் பெரிய அளவில் சரிந்துள்ளன. இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் அதிகரித்து வரும் கடன் தொகையே காரணமாக கருதப்படுகிறதாம்.
குறிப்பாக கடந்த மார்ச் 2018ன் படி இந்த ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் கடன் தொகை 46,400 கோடி ரூபாயாகும், இதுவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை 47,234 கோடி ரூபாயாகும். இதே ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் 13,120 கோடி ரூபாயாகும்.
இதுவே ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கடன் தொகை 23,144 கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் நாவல் மற்றும் இன்ஜினியரிங் துறையில் 10,689 கோடி ரூபாய் கடனாக இருந்ததாம். இதே ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் கடன் 31,697 கோடி ரூபாயாக இருந்ததாம். இதில் கடந்த சில வாராங்களுக்கு முன்பு தனது ரிலையன்ஸ் குழும பங்குகள் பற்றி தேவையற்ற வதந்திகள் பரவுவதாகவும், இதன் மூலம் தனது ரிலையன்ஸ் குழும பங்குகள் வீழ்ச்சிகண்டு வருவதாகவும் கூறினார்.
அதோடு கடனை கட்ட முழுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆக பங்குதாரர்களே முதலீட்டாளர்களே அச்சம் கொள்ள வேண்டாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் மதிப்பீட்டு நிறுவனங்களான CARE, ICRA and Brickwork நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் கடன் மதிப்பு சற்று குறைந்துள்ளதாகவும், விரைவில் இது இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளனவாம்.


Click it and Unblock the Notifications