நலிந்து வரும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்து அதில் வரும் நிதியைக் கொண்டு பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிரதமரின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும், கிராமப்புற மக்களுக்கு வீட்டு வசதித் திட்டங்களுக்கும் செலவழிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்திட்டத்திற்கான நிதிவசதியை தொடர்ந்து நலிந்து வரும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்து நிதியைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தாலும், எந்தெந்த வங்கிகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த வட்டிக்கு பணம்
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு நாடெங்கிலும் செல்வந்தர்கள் தங்கள் சொந்த நிதியை வைத்து அடகுக் கடைகளையும் நிதி உதவி வங்கிகளையும் நடத்தி வந்தனர். அதன்மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவைப்படும் பணத்தை குறைந்த வட்டிக்கு வழங்கி வந்தனர். இதனால் அந்த காலகட்டத்தில் இவ்வகையான நிதி வங்கிகள் அனைத்துமே நல்ல லாபத்தைக் கண்டன.
அரசியல் செல்வாக்கால் தப்பிய வங்கிகள்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகளின் உதவி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த மத்திய அரசு, நாடு முழுவதும் இருந்த பல தனியார் நிதிவங்கிகளை ஒன்றிணைத்து பொதுத்துறை வங்கிகளாக மாற்ற முயற்சித்து வந்தது. ஆனால் இத்தகைய நிதி வங்கிகள் அனைத்தும் அரசியல் செல்வாக்கினால் அப்போதைக்கு தப்பித்து வந்தன.
பொதுத்துறை வங்கியாக மாற்றம்
ஆனாலும், அந்த முயற்சி இழுபறியாகவே இருந்து வந்தது. பின்னர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் முயற்சிக்கு பின்னர், இறுதியில் கடந்த 1969ஆம் ஆண்டில் சிறிய வங்கிகள் பல ஒன்றிணைக்கப்பட்டு 14 தேசிய வங்கிகளாக உருமாற்றம் செய்யப்பட்டன. அதே போல் பின்பு கடந்த 1980ஆம் ஆண்டில் மேலும் ஆறு தனியார் துறை வங்கிகள் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசின் வசம் 20 பொதுத்துறை வங்கிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி பொறுப்பேற்றுக்கொண்டது.
நட்டத்தில் பொதுத்துறை வங்கிகள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு வங்கிகளும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால், அவ்வப்போது வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச்சிக்கல்களை களைவதற்கு மத்திய அரசும் அவ்வப்போது நிதியுதவி அளித்து அவற்றின் மறுசீரமைப்புக்கு உதவி செய்வதுண்டு. இது காலம் காலமாக நடந்துவரும் நடைமுறையாகும். இருந்தாலும் இந்த வங்கிகள் தொடர்ந்து கடன்களை அளித்துவிட்டு நட்டத்திலேயே இயங்கி வந்தன
தனியார் வங்கிகள் இணைப்பு
அதேபோல், அவ்வப்போது தனியார் துறை வங்கிகள் கடும் நட்டத்தை சந்திக்கும்போதும் திவால் நிலைக்கு தள்ளப்படும்போதும், ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தலையிட்டு, அவற்றை லாபத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டுவிடும். கடந்த 2004ஆம் ஆண்டில் தனியார் துறை வங்கியான குளோபல் ட்ரஸ்ட் வங்கி ஓரியண்டல் வங்கியுடன் இணைக்கப்பட்டது இதற்கு உதாரணமாகும்.
பொதுத்துறை வங்கிகளும் இணைப்பு
அதேபோல், நட்டத்தை சந்தித்து வந்த சில பொதுத்துறை வங்கிகளும் லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டுவருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டில் எஸ்பிஐ வங்கியோடு அதன் ஆறு துணை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. பின்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா உடன் தேனா வங்கியும் விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன.
பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம்
சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவரும் ஆந்திரா வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும், சிறிய வங்கிகளை இணைப்பது அவசியமாகும் என்றம் அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் புதிதாக நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருந்தார்.
கிராமப்புற திட்டங்களுக்கு உதவி
இந்நிலையில் தற்போது தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வரும் சிறிய பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்து அவற்றை பிரதமரின் கிராமப்புற வளர்ச்சிக்கும் கிராமப்புற வீட்டுவசதித் திட்டங்களுக்கும், கிராமப்புற நலத்திட்டங்களுக்கும் அதிக அளவில் பயன்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக இதைப்பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி கிராமப்புற வளர்ச்சிக்கும், கிராமப்புற மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கும் முன்னுரிமை அளிக்க உறுதிபூண்டுள்ளார். இதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. கிராமப்புற வீட்டுவசதி திட்டத்திற்கான பணிகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன.
பட்ஜெட்டில் இடம்பெறும்
கிராமப்புற வளர்ச்சிக்குக்கும் மற்றும் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்திற்கு ஆகும் செலவுகள் பற்றி இன்னமும் மதிப்பிடப்படவில்லை. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் முழுமை பெற்று, மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுவிட்டால், வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இது பற்றிய விவரம் அறிந்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுத்துறை வங்கிகள் விற்பனைக்கு
இத்திட்டத்திற்கான நிதிவசதியை தொடர்ந்து நலிந்து வரும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்து அதில் வரும் நிதியைக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எந்தெந்த வங்கிகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமையை இறக்க முடிவு
மத்திய அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச்சிக்கலுக்கு நடுவில், கடும் நட்டத்தை சந்தித்து வரும் வங்கிகளையும் சேர்த்து சுமக்க தயாராக இல்லை. எனவேதான் இத்தகைய வங்கிகளை விற்பனை செய்து சுமையை இறக்கிவைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே இவ்வங்கிகளை விற்பனை செய்ய மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications