உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு: 2020ல் சென்னை, கோவை வளர்ச்சி... பெங்களூரு சரியும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நடப்பு 2020ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்குள் கட்டமைப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் துறையில் குறைந்தபட்சம் 58200 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் இதழ் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் கோவை சென்னை வளர்ச்சியடையும் நிலையில் பெங்களூரு சரிவை சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு வளர்ச்சி சதவிகிதத்தை பொறுத்த வரையிலும் புனே நகரம் 5 சதவிகிதமும், கோயம்புத்தூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்கள் 4 சதவிகிதமும், சென்னை, கொல்கொத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் 3 சதவிகிதமும், தலைநகர் டெல்லி 2 சதவிகித வளர்ச்சியை பெற்றிருக்கும் என்றும் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் இதழ் தெரிவித்துள்ளது. மும்பை மற்றும் சண்டிகார் நகரங்கள் 1 சதவிகிதம் சரிவையும், நாக்பூர், கொச்சி மற்றும் கூர்கன் ஆகிய நகரங்கள் 2 சதவிகிமும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் 3 சதவிகிதமும் சரிவை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறையின் வேலை வாய்ப்பு சதவிகிதமானது நடப்பு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் 2 சதவிகிதம் வரை அதிகரித்துக் காணப்பட்டதாக டீம்லீஸ் சர்வீசஸ் என்னும் அரையாண்டு இதழ் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதோடு பொறியியல், கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறைகளில் கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் இரண்டாம் பருவத்தில் சுமார் 6.42 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் அமைப்புடன் கூடிய மின்னணு உற்பத்தித் துறையில் சுமார் 26 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் குவியும் என்றும் டீம்லீஸ் இதழ் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டதாகவும் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மத்திய பொருளாதார கண்காணிப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. ஆனால் மத்திய அரசு இதை மறத்ததோடு இந்த புள்ளிவிவரத்தை சரிபார்க்க வேண்டும் என்றம் தட்டிக்கழித்ததோடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இது பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிடுவது வழக்கம் என்று மழுப்பியது.

 செல்லாத நோட்டு அறிவிப்பும் ஜிஎஸ்டியும்

செல்லாத நோட்டு அறிவிப்பும் ஜிஎஸ்டியும்

மத்திய அரசு, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் அப்போதைக்கு மறைத்து விட்டாலும், அதன் பின்னர் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் சுமார் 1.10 கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வருவதாகவும், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்றவை வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

 வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை
 

வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பிரதமராக மோடியே மீண்டும் வந்து உட்கார்ந்துவிட்டார். அவர் வந்த சூட்டோடு தொடர்ந்து அதிகரித்து வரும வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார். இதற்காக கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விவசாயம் மற்றும் தொழில் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டார்.

 பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்துள்ள இத்துறைக்கு முற்றிலும் புதியவரான நிர்மலா சீதாராமனும் பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழில் திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இவர்களுடைய கணிப்பை பிரதிபலிக்கும் வகையிலேயே நிர்மலா சீதாராமனும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உத்தரவாதமும் அளித்துள்ளார். இவர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பது வரும ஜூலை 5ஆம் தேதியன்று விளங்கிவிடும்.

 2 சதவிகிதம் அதிகரிக்கும்

2 சதவிகிதம் அதிகரிக்கும்

இந்நிலையில் டீம்லீஸ் சர்வீசஸ் என்னும் நிறுவனம் அரையாண்டுக்கு ஒரு முறை வெளியிடும் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் (Employment Outlook) என்னும் இதழில் வேலை வாய்ப்பு பற்றி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் சுமார் 2 சதவிகிதம் வரை வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.

 58200 புதிய வேலை வாய்ப்புகள்

58200 புதிய வேலை வாய்ப்புகள்

குறிப்பாக பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கமான உற்பத்தி, பொறியியல், மற்றும் கட்டமைப்பு ஆகிய துறைகளில் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் முதல் அரையாண்டான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான பருவத்தில் சுமார் 58200 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும் புள்ளிவிவரக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

 6.42 கோடி வேலை வாய்ப்புகள்

6.42 கோடி வேலை வாய்ப்புகள்

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இரண்டாம் அரையாண்டு பருவத்தில் பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டமைப்பு போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சதவிகதம் என்பது அதிகரித்துள்ளது. மேற்கண்ட துறைகளில் சுமார் 6.42 கோடி பேர் புதிய வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு வரும் 2025ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலோடு கூடிய மின்னணு சாதனங்களின் உற்பத்தித் துறைகளில் அதிக அளவில் முதலீடுகள் குவியும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

 ரூ.26 லட்சம் கோடி முதலீடு

ரூ.26 லட்சம் கோடி முதலீடு

மின்னணு சாதனங்களை உருவாக்கும் துறைகளில் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 26 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்து குவியும் என்றும் இதன் காரணமாக இந்தத் துறைகளில் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதோடு இத்துறைகளில் வேலை வாய்ப்பு சதவிகிதம் அதிவேக வளர்ச்சியை எட்டக்கூடும் என்றும் குறிப்பாக பொறியியல் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சதவிகிதம் என்பது அதிவிரைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவரான சுதீப் சென் கணித்துள்ளார்.

 முதல் அரையாண்டில் 8.02 சதவிகிதம்

முதல் அரையாண்டில் 8.02 சதவிகிதம்

தொழில்துறையின் நவீனமயமாக்கல் மற்றும் தொழில்துறை இணையதளத்தோடு இணைத்தல் (Modernization and the introduction of Industrial internet of Things-IIOT) ஆகியவற்றின் காரணமாக வரும் 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பானது நிச்சயமாக சுமார் 25 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்றும், பொறியியல், கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் சுமார் 8.02 வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்றும் சுதீப் சென் தெரிவித்துள்ளார்.

 புனே நகரம் டாப்

புனே நகரம் டாப்

வேலை வாய்ப்பு வளர்ச்சி சதவிகிதத்தை பொறுத்த வரையிலும் புனே நகரம் 5 சதவிகிதமும், கோயம்புத்தூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்கள் 4 சதவிகிதமும், சென்னை, கொல்கொத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் 3 சதவிகிதமும், தலைநகர் டெல்லி 2 சதவிகித வளர்ச்சியை பெற்றிருக்கும் என்றும் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் இதழ் தெரிவித்துள்ளது.

 பெங்களூரு மோசம்

பெங்களூரு மோசம்

வேலைவாய்ப்பு வளர்ச்சியில் மும்பை மற்றும் சண்டிகார் நகரங்கள் 1 சதவிகிதம் சரிவையும், நாக்பூர், கொச்சி மற்றும் கூர்கன் ஆகிய நகரங்கள் 2 சதவிகிமும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் 3 சதவிகிதமும் சரிவை சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் நடுத்தர நிறுவனங்கள் 5 சதவிகித வளர்ச்சியையும் பெரிய நிறுவனங்கள் 2 சதவிகித வளர்ச்சியையே காணும் என்றும் எம்ப்ளாய்மென்ட் அவுட்லுக் இதழ் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infrastructure Manufacturing sector can get 58200 jobs in FY 20

The Employment Survey published a poll of at least 58,200 new jobs in the construction and manufacturing industry within the first half of the current 2020. According to TeamLease Services biannual 'Employment Outlook' report for April-September FY20, these industries will witness a 2 per cent increase in net employment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more