அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!

பெங்களுரு : ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே அதிக அளவு முதலீடுகளை ஈர்த்த டாப் 10 நகரங்களில் பெங்களுரு (Bangalore) தேர்வாகியுள்ளது. அவ்வாறு கிடைத்த முதலீட்டின் படி கடந்த நிதியாண்டில் மட்டும் 1.6 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் விளைவாக APAC இன் விருப்பமான சந்தைகளில், ரியல் எஸ்டேட் சந்தைகளில் டாப் ஐந்து பட்டியலில் இந்தியாவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக முதலீடுகளை ஈர்க்கும் நகரங்களில் பெங்களூரு தான் பெஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!

இந்த நிலையில் பெங்களூரு பல சர்வதேச நிறுவனங்களின் முதலீட்டு தளமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நற்பெயரின் அடிப்படையில் இந்தியாவில் விருப்பமான முதலீட்டு பட்டியல் நகரில், பெங்களுரு நகரம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களுரு நகரத்தில் குறிப்பிடத்தக்க திறமை, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு அலுவலகம், சில்லறை விற்பனை, குடியிருப்பு பிரிவுகளிலும் பல முதலீடுகளை வழங்குகிறது.

இவ்வாறு ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்படுவதில், குறிப்பாக அலுவலகம் குறித்தான சொத்துகள், அதோடு தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் குறித்த முதலீடுகளில், முதலீடு செய்யப்படுவதில் தான் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் சில குடும்பங்கள் ஹோட்டல்கள் மற்றும் சில்லறை வர்த்தகங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனராம்.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் கணிசமான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக லாஜிஸ்டிக்ஸ் துறையில் அதிகரித்துவரும் நுகர்வு மற்றும் தேவை காரணமாக இது சந்தையில் வாய்ப்புகளை பெற முதலீட்டாளர்களை ஊக்குவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களுரு ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம், மருந்து உற்பத்தி, பயோ டெக்னாலஜி மற்றும் உற்பத்தி துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது.

இது கடந்த 2017 - 2018ம் ஆண்டில் மட்டும் பெங்களூரில் ரியல் எஸ்டேட் துறையில் 800 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாம். இது 2018 - 2019ல் இரு மடங்கு ஆகலாம் என்றும் கருதப்படுகிறது.

இது அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+