Budget 2019-20: அந்த சிவப்பு சூட்கேசிஸ் அப்படி என்னதான் இருக்கும்?

சென்னை: ஜூலை 5ஆம் தேதியன்று நடப்பு 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் (Budget) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் எந்தமாதிரியான அறிவுப்புகள் இருக்குமோ எந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்குமோ என்ற பதைபதைப்பு அனைவரின் மனதையும் குடைந்து கொண்டிருப்பது வாடிக்கை.

Budget 2019-20: அந்த சிவப்பு சூட்கேசிஸ் அப்படி என்னதான் இருக்கும்?

இந்நிலையில் பட்ஜெட் என்றால் என்ன? முதலில் எங்கு அறிமுகப்பட்டது, எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்ற பல ஆச்சர்யங்களையும் சுவராஸ்யங்களையும் பார்க்கலாம்.

பட்ஜெட்... ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. சுருக்கமாக பாமரனுக்கும் விளங்கும் வகையில் சொல்லப்போனால் அடுத்து வரும் நிதியாண்டில் அரசுக்கு வரவேண்டிய வரவுகள், வருமானங்கள், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்காக ஆகும் ஒரு குத்துமதிப்பான செலவுகளை உள்ளடக்கிய ஒரு பட்டியல் அவ்வளவுதான்.

பெண்களின் வீட்டு பட்ஜெட்

பெரும்பாலான வீடுகளில் மாத பட்ஜெட்டிலிருந்து ஆண்டு பட்ஜெட் வரையிலும், அதாவது கணவன்மார்களுக்கு ஒரு சட்டை எடுப்பதாக இருந்தாலும், வீட்டை ஆளும் பெண்கள் தயாரிப்பது வழக்கம். ஆனால் ஒரு நாட்டிற்கு தேவையான வரவு செலவு ஆகியவற்றை உள்ளடக்கிய பட்ஜெட்டை தயாரிப்பது பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பது வாடிக்கை. பெண்கள் பட்ஜெட் தயாரிப்பது உலக நாடுகளில் எங்கும் இல்லை என்பது தான் உண்மை.

பொறுப்பு நிதியமைச்சர்தான்

இந்தியாவில் முதன் முதலில் பட்ஜெட் தயாரிப்பை பெண்கள் கையிலெடுத்தது இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போதுதான் நிதியமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொண்டார். அப்போது தான் அவர் உருப்படியான ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடித்தார். முதன் முதலாக நாட்டிலுள்ள பெரிய தனியார் வங்கிகள் மத்திய அரசின் கீழ் பொதுத்துறை வங்கிகளாக ஆக்கப்பட்டன.

பட்ஜெட் எப்படி இருக்கும்

கடந்த சில நாட்களாக சாதாரண பொது ஜனத்திலிருந்து, மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் முதல் கார்பரேட் நிறுவனங்கள் வரையில் அடுத்து தாக்கல் செய்யவிருக்கும் முழு பட்ஜெட் எப்படி இருக்குமோ, தங்களுக்கு சாதமான அம்சங்கள் என்னென்ன இருக்குமோ என்று , இவர்கள் அதை வைத்து மனதில் தனியாக ஒரு பட்ஜெட் போட ஆரம்பித்திருப்பார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் வரைக்கும் இந்த காய்ச்சல் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும்.

பட்ஜெட் அல்ல அது புக்கெட்தான்

ஆளாளுக்கு பட்ஜெட் பட்ஜெட் என்று அடித்துக்கொள்ளும் இந்த பட்ஜெட் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? புக்கெட் (Bougette) என்ற ஃபிரெஞ்சு வார்த்தையில் இருந்து நாளடைவில் மறுவி வந்ததுதான் பட்ஜெட் என்ற வார்த்தை. புக்கெட் என்பதற்கு தோலால் செய்யப்பட்ட ஒரு சிறிய பை என்று அர்த்தமாகும். தங்களுக்கு தேவையான பணத்தையும் குறிப்புகளையும் அதில் வைத்து கட்டி வைத்து எடுத்துச் செல்வதற்கு மிக எளிதாகவும் வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதால் அக்காலத்தில் இதைப் பயன்படுத்தினார்கள்.

பட்ஜெட் பைதான் அது

பின்னர் பல்வேறு நாடுகளும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஐரோப்பாவை ஆண்ட ஆட்சியாளர்கள் அன்றைய காலகட்டத்தில் அரசின் வரவு செலவு பற்றிய சிறிய குறிப்புகள் அடங்கிய தோலால் ஆன பட்ஜெட் பையை கொண்டு செல்வது வழக்கமான நடைமுறையாக இருந்தது. இதுவே பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் பரவியது.

ராணி எலிசபெத்

நாகரீகம் வளர வளர பட்ஜெட் பை பின்னர் பெட்டியாக மாறத் தொடங்கியது. முதன்முதலில் அதிகாரபூர்வமாக பட்ஜெட் பெட்டியானது 1860ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது லண்டன் பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வந்த நிதியமைச்சர் வில்லியம் க்ளெண்டோன் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உருவம் பொறித்த சிகப்பு நிற தோல் பெட்டியை கொண்டுவந்தார்.

எங்கே அந்த பட்ஜெட்

லண்டன் பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக வில்லியம் க்ளெண்டோன் தனது உதவியாளரிடம், தோல் பெட்டியில் உள்ள நிதிநிலை அறிக்கையை எடுக்கச்சொல்லும் விதத்தில் அந்த பட்ஜெட்டை எடுங்கள் என்று கூறினார். இதுவே பின்னர் பட்ஜெட் என்று அழைக்கப்படுவதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது.

இந்தியாவின் முதல் பட்ஜெட்

பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் முதன்முதலில் கிழக்கிந்திய கம்பெனிதான் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியது. அப்போது இந்தியாவுக்கான நிதிப்பொறுப்பை கவனித்து வந்த ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1860ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இந்தியாவுக்கான பட்ஜெட் அறிக்கையை தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்க அனுப்பி வைத்தார். இதுவே இந்தியாவின் முதல் பட்ஜெட் ஆகும்.

தமிழர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்

சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் தாக்கல் செய்யப்பட்டதும் இடைக்கால பட்ஜெட்தான். அப்போது நிதியமைச்சராக இருந்த தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தான் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இவரை அடுத்து 1951-52ஆம் ஆண்டிலும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் இந்தியாவின் முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த டி.டி. தேஷ்முக் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் முதல் முழு பட்ஜெட்

சுதந்திர இந்தியாவின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டி.டி.தேஷ்முக் தான். இதற்கு அடுத்தாக பிரதமராக பதிவி வகித்த ஜவஹர்லால் நேருவும் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பிரதமரும் நேருதான். அப்போது பிரதமர் பொறுப்பையும் கூடுதலாக அவர் கவனித்து வந்ததால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மொரார்ஜி தேசாய் 10 முறை

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுநாள் வரையிலும் அதிக முறை முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயை சேரும். இவர் 1959ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 1967ஆம் ஆண்டு முதல் 1970 வரையிலும், அதன்பிறகு 1977ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரையிலும் 10 முறை முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். அதே போல் தனது பிறந்தநாளன்று பட்ஜெட் தாக்கல் செய்ததும் மொரார்ஜி தேசாய்தான். இவர் பிறந்த நாள் பிப்ரவரி 29ஆம் தேதியாகும். 1964 மற்றும் 1968ஆம் ஆண்டுகளில் தனது பிறந்த நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

முதல் பெண் நிதியமைச்சர்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை தட்டிச்செல்பவர் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி தான். 1970-1971ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தார். இவருடைய காலத்தில்தான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்ததாக தற்போது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியை அலங்கரிப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் நிதியமைச்சராக ஆனதும் இந்திரா காந்திக்கு பிறகு நிர்மலா சீதாராமன் தான் என்பது கவனிக்கத்தக்கது.

நிதியமைச்சர் டு பிரதமர்

நிதியமைச்சராக இருந்து பின்னாளில் பிரதமராக ஆனவர்கள் மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, சரண் சிங், வி.பி.சிங், மன்மோகன் சிங் ஆகியோர். அதேபோல் நிதியமைச்சராக இருந்து பின்னாளில் நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர்கள் ஆர். வெங்கட்ராமன், பிரணாப் முகர்ஜி ஆகிய இருவர் மட்டுமே.

மாலை 5ல் இருந்து காலை 11 மணிக்கு

இந்தியாவில் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்ட 1860ஆம் ஆண்டிலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு வரையிலும் இரவில் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அப்போது நிதியமைச்சர் மாலை 5 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பிது விடிய விடிய வாசித்துக்கொண்டே இருப்பார். அப்போது லோக்சபாவில் உள்ள உறுப்பினர்களில் முக்கால்வாசி பேர் பொறுமையிழந்து தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். இந்த நடைமுறையை முதன்முதலில் மாற்றியவர் 1999ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா தான். அவர்தான் முதன்முதலில் பட்ஜெட்டை காலை 11மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டுவந்தார். அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்த நடைமுறையே தொடர்கிறது.

கடைசியில் இருந்து முதல் தேதிக்கு மாற்றம்

அதேபோல் வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டுவந்த பட்ஜெட் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதேபோல் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து ரயில்வே பட்ஜெட் தனியாகவே தாக்கல் செய்யப்பட்டு வந்தது, அதவும் 2016ஆம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரி சீர்திருத்தவாதி சிதம்பரம்

பட்ஜெட்டில் வரி சீர்திருத்தத்தை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தான். இவர் 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தான் வருமான வரி சீர்திருத்தத்தை கொண்டுவந்து மத்திய அரசுக்கு வருமானத்தை அதிகரித்தவர். அதோடு 1994ஆம் ஆண்டில் சேவை வரியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரும் சாட்சாத் இதே சிதம்பரம் தான். சேவை வரியாக 10.3 சதவிகிதம் விதிக்கப்பட்டது.

அலுவலக சிறைவைப்பு

பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்ட உடனேயே இதில் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகள் முதல் சாதாரண கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அலுவலக சிறை வைக்கப்பட்டதுபோல் பாராளுமன்ற பட்ஜெட் தயாரிக்கும் பிரிவு கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தகவல் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்துவிடும். பட்ஜெட் தயாராக லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

எல்லாருக்கும் அல்வாதான்

அதேபோல் பட்ஜெட் தயாரிக்கும் பணி ஆரம்பிப்பதற்கு முன்பாக எந்தவித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்காகவும் நல்லவிதமாக ஆரம்பிக்க வேண்டும் என்பதாலும், நிதியமைச்சராக இருப்பவர் அல்வா தயாரித்து அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குவது நடக்கும். அதன் பிறகே பட்ஜெட் தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+