மும்பை : முன்னர் மூன்று முறைக்கு மேல் பணத்தை எடுத்தால் வங்கிகளால் கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது Canara வங்கி, பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணம் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து Canara வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே ரூ.50,000 வரை இலவசமாக வங்கியில் பணம் டெபாசிட் செய்யலாம், இதற்கு எந்த கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

அதன் பின்னர் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ரூ.1 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் இந்தக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ. 50,000 வரை இருக்கும் என்றும். இத்துடன் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் கூறியுள்ளது கனரா வங்கி.
மோடி 2.0 அரசு தலைமையேற்ற பின்பு பிரதமர் மோடி கருப்பு பண ஊழலை ஓழிக்க பலவேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், அதோடு டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், பல செயல் முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆன்லைன் சேவையை அதிகரிப்பதற்காகவே, ஆண்லைன் பணபரிமாற்றத்தை அதிகரிக்கவும் இந்த அறிவிப்பை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வெளியிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், ஆன் லைன் வர்த்தகத்தை அதிகரிக்கும்போது, கருப்புப் பணம் புழக்கமும் குறையும் என்று கருதப்படுகிறது. இந்த அறிவிப்பால் அதிகளவு பணத்தை டெபாசிட் செய்பவர்களே அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கருதப்படுகிறது.
ஒரு புறம் ஆன்லைன் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று கனரா வங்கி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தாலும், வங்கி வாடிக்கையாளர்களை இது மிகவும் பாதிக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
ஒரு புறம் வங்கிகள் தங்களது சேவை ஊக்குவிக்க கட்டணங்களை குறைத்து வரும் நிலையில், கனரா வங்கியின் இந்த அதிரடியான முடிவு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை என்றும் கருதப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியில் அதிகளவில் டெபாசிட் செய்வது குறையும் என்றும் கருதப்படுகிறது. எனினும் ஆன்லைன் பணபரிமாற்றங்களும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications