இனி ஒத்த ரூவா கடன் வாங்குனாலும் தப்பிக்க முடியாதுப்பு.. கடனாளிங்கள கண்காணிக்க திட்டம்! #Loan #Rating

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடன்களை வாங்கி திரும்ப கட்டாமல் வங்கிகளை அலையவிடும் நிறுவனங்களுக்கெல்லாம் ஆப்பு வைக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. கடன் களை வாங்கி விட்டு கட்டாமல் இருந்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இனி யாரும் எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்கிறது மத்திய அரசு.

ஆமாங்க.. இவ்வாறு நிறுவனங்கள் கடனை வாங்கிவிட்டு ஏமாற்றும் நிலை அதிகரித்து வரும், இந்த நிலையில் இதனை கண்கானிக்க ஒரு சிறப்புக்குழு நியமிக்கப்பட உள்ளதாம்.

இனி ஒத்த ரூவா கடன் வாங்குனாலும் தப்பிக்க முடியாதுப்பு.. கடனாளிங்கள கண்காணிக்க திட்டம்! #Loan #Rating

இவர்கள் வணிக ரீதியாக கடன் வாங்குபவர்களை தொடர்ந்து கண்கானித்து வருவார்களாம். அதற்கான சிறப்பு குழுவை பரீசிலித்து வருகிறதாம் மத்திய அரசு. ஸ்பெஷல் பர்பஸ் வெகிகிள் (special purpose vehicle) எனும் இந்த குழு அனைத்து பொதுத்துறை வங்கிகளின் மூலம் கடன் வாங்கும் நிறுவனங்களை கண்கானிக்கும் என்றும் கருதப்படுகிறது.

அனைத்து வங்கிகளிடமிருந்து தொகுக்கப்பட்ட மாபெரும் தரவு தளம், இந்த SPVக்கு வழங்கப்படுமாம். இதன் மூலம் கடன் வாங்குபவரின் நிதி ஆரோக்கியத்தை கண்கானிக்கவும், ஒரு டைனமிக் மாதிரி தளத்தை உருவாக்கவும் இது பயன்படும் என்றும் கருதப்படுகிறது.

அதோடு மோடி 2.0 அரசின் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் கருதப்படுகிறது.

இது குறித்து அரசு வெளிட்யிட்டுள்ள அறிக்கையில் ஜி.எஸ்.டி என்பது ஒரு லாப நோக்கமற்ற, அரசு சாரா தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். இதில் மத்திய அரசு 24.5% பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது.

ரூ.57000 கோடி காச கை நீட்டி வாங்குறப்ப நல்லா இருந்துச்சா! Anil Ambani-யை மிரட்டும் கடன் தொல்லை..! ரூ.57000 கோடி காச கை நீட்டி வாங்குறப்ப நல்லா இருந்துச்சா! Anil Ambani-யை மிரட்டும் கடன் தொல்லை..!

இதில் மாநிலங்களும், மாநில நிதி அமைச்சர்களின் அதிகாரமளிக்கப்பட்ட நிதிக்குழுவும் சேர்ந்து 24.5% பங்குகளும் மீதமுள்ள 51% அரசு சாரா நிதி நிறுவனங்களுக்கும் சொந்தமானது. இது மாநில மத்திய அரசுகளின் சிக்கலான வரி முறைகளை ஒருமித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது முன்மொழியப்பட்ட இந்த குழுவானது, கடன் வாங்கியவர்களை கண்கானித்து வரும் மாற்று திறனாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தக் குழுவிடம் அளிக்கப்பட்ட தரவின் மூலம் கடன் வாங்கியவர்கள் கண்கானிக்கபட்டு, அவர்களின் பண பரிமாற்றங்களும் கண்கானிக்கப்படுமாம்.

அதோடு அரசு புதிய வங்கி சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் வாராக்கடன்களை வசூலிக்க முடியும் என்றும் கருதுகிறதாம். இதற்கான வங்கி சட்டத்தையும் மத்திய அரசு பரீசிலித்தும் வருகிறதாம்.

ஆமாங்க.. வங்கிகள் புதியதாக கடன் கொடுத்தால் பழைய கடன்களை வசூல் செய்ய முடியும் என்றும் கருதப்படுகிறதாம். இதற்கான தான் வங்கிச் சட்டங்களைத் அரசு பரீசிலித்து வருகிறதாம்.

ஆக மொத்ததில் இனி யாரும் கடனை வாங்கி விட்டு யாரும் ஏமாற்ற முடியாது என்றும் அரசு எச்சரிக்கிறது போல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

central government is going to form a company to rate track loan borrowers

central government is going to form a company to rate track loan borrowers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X