அகமத் நகர்: இதென்னாடா சோதனை என்று யோசிக்கும் அளவு சீரடி சாய்பாபா கோவிலுக்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது. அப்படி என்ன பிரச்சனைன்னு யோசிக்கீறீங்களா. அட கோவிலுக்கு வரவங்க எல்லாம் காணிக்கையா காயின்னா கொடுத்திடுறாங்களாம்.
இதுனால அந்த காயின்கள் மலைபோல குவிந்து கிடக்காம். ஆனா அந்த காயின வாங்க வங்கிகளும் மறுக்கிறாங்களாம் இதுனால் இந்த காயிங்களா என்ன அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாமா RBI-ஐ நாடி இருக்காங்க இந்த கோவில் நிர்வாகம்..
இப்ப அந்த கோவில் நிர்வாகிகள் என்ன செய்யுறதுன்னே புரியாமா? ரிசர்வ் வங்கிய நாடி இருக்காங்களாம். அட ஆமாங்க.. கோவில் காசுகள் இதெல்லாம் நீங்க வாங்கிட்ட புண்ணியம் கிடைக்கும்ன்னு ரிசர்வ் வங்கியும் வாங்கிக்கோங்கன்னு சொல்லி இருக்காம்.
சில்லறையாக ரூ.4 கோடிக்கு மேல் வசூல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத் நகரில் உள்ள சீரடி கோவில் மிகப்பெரிய, பிரபலமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இது Shri Saibaba Sansthan Trust மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு வருடத்திற்கு பல மில்லியன் கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக இங்கு வருகிறார்கள் என்றும், இதன் மூலம் காணிக்கையாக வருடத்திற்கு 1லட்சம் கோடி காயின்கள் மூலம், சுமார் 4 கோடி ரூபாய் வரை காணிக்கையாக கிடைக்கிறது.
சில்லறையை வங்கிகள் வாங்க மறுக்கின்றன?
இவ்வாறு அதிகளவில் சேரும் காயின்களை வங்கிகளும் வாங்க மறுக்கின்றனவாம். அதிலும் ரூ.1, 2, 5, 10 என பல வகையான காயின்கள் குவிந்து கிடக்கின்றவாம். இந்த சீரடி Shri Saibaba Sansthan Trust மூலம் 8 வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறதாம். ஆனால் கோவிலிருந்து கிடைக்கும் சில்லறைகளை இந்த டிரஸ்ட் அக்கவுண்டில் டெபாசிட் செய்ய சென்றால் வாங்க மறுக்கின்றனவாம்.
பொக்கிஷங்களை வாங்கிக் கோங்க?
இவ்வாறு சீரடியில் கிடைக்கும் காணிக்கைகள் பொக்கிஷங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என ரிசர்வ் வங்கி 16 வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம். இது குறித்து கூறியுள்ள ஆர்.பி.ஐயின் பொது மேலாளர் கமலக் கண்ணன், இந்த காயின்களை எண்ணுவதில் மிக சிரமம் நிலவி வருகிறது. அதோடு இதை எடுத்து செல்வதிலும் மிக பெரிய பிரச்சனை உள்ளது. இதை வைத்துக் கொள்ள மிகப்பெரிய இடம் தேவைப்படுகிறது. இதனால் தான் வங்கிகள் மறுக்கின்றன எனவும் கூறியுள்ளாராம்.
வலுவான பாதுகாப்புடன் சேமிப்பு அறை
ஒரு வழியாக ஆர்.பி.ஐயின் உதவியுடன் எப்படியோ சேமித்து வைக்க ஒப்புக்கொண்ட வங்கிகள், இங்கு இந்த காயின்களை சேமித்து வைக்க இடம் இல்லை என்று கூறி, அங்கு கோவிலிலேயே வலுவான பாதுக்காப்புடன் 8 - 10 அறை ஓதுக்கப்பட்டுள்ளதாம். அதோடு ஸ்பெஷல் சி.சி.டிவி கேமராக்கள், பாதுகாப்பு படையினர், சிறப்பு கிரில்கள் முதலியவற்றைக் கொண்டு, சுமார் 400 சதுர அடியில் நாணயங்களை சேமித்து வைக்க முடியும் என்றும் வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளனவாம்.
டிஜிட்டல் மையத்தால் சில்லறை பயன்பாடு குறைந்துள்ளது
முன்னதாக சிறிய கடைக்காரர்கள், டோல் பிளாசாக்கள், பொது பேருந்து சேவைகள் என பல்வேறு அமைப்புகளும் நாணயங்களை வாங்கிக் கொண்டன. ஆனா தற்போது டோ பிளாசாக்களில் டிஜிட்டல் கார்டுகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அதோடு மக்களும் பணமில்லா பரிவர்த்தனைக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். அதோடு சில்லறை வர்த்தகத்தை பொறுத்த வரை ஆன்லைன் வர்த்தம் அதிகரித்து வருகிறது. ஆக இங்கு சில்லறை தேவை வெகுவாக குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
சீரடி டாப் 10 கோவில்
சீரடி சாய்பாபா கோவில் நாட்டில் உள்ள பணக்கார கோவில்களில் உள்ள 10 கோவில்களில் ஒன்றாக உள்ளது. இங்கு உள் நாட்டினர் மட்டும்மின்றி வெளி நாட்டினரும் வந்து செல்கின்றனர். குறிப்பாக வருடத்திற்கு 10 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்கள் மூலம் ரூ.500 கோடிக்கும் மேல் நன்கொடை வசூலாகிறது என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சில்லறை எவ்வளவு?
இவ்வாறு நன் கொடையாக வசூலாகும் பணத்தில் 4 கோடி ரூபாய் காயின் களாகவும், 150 கோடி ரூபாய் தாள்களாகவும், அதோடு மதிப்புமிக்க தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களாகவும் வசூலாகின்றது.
இந்த பணம் எதற்காக?
இவ்வாறு நன் கொடையாக வசூலாகும் பணம் பொதுவாக கல்விக்காகவும் சமூக தொண்டுகளுக்காகவும் தான் செலவிடப்படுகிறதாம். இங்கு வரும் யாத்ரீகர்களுக்கு சிறந்த வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதோடு சீரடியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications