டெல்லி : இந்த ஜியோவால் எப்பவும் தொல்லையே. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஆரம்பித்ததிலிருந்தே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்தது. அது தற்போது ஜென்ம சனியாக விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.
அட ஆமாப்பு.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனத்திற்கு கடந்த 2016ம் ஆண்டில் கோபுரம் அமைக்க இடம் கொடுக்காததால், பார்தி ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.3,050 கோடி அபாராத தொகை விதித்துள்ளதாம் மத்திய தொலைத்தொடர்பு ஆணையம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாளுக்கு நாள் தொலைத்தொடர்பு துறையில் தனக்கென தனி இடம் வகித்து வருகிறது. குறிப்பாக பல ஆஃபர்களையும் சலுகையும் வழங்கி வருகிறது.
சமாளிக்க முடியாத நிறுவனங்கள்
இந்த நிலையில் ஏற்கனவே ஜியோவின் தாறுமாறான ஆஃபர்களை சமாளிக்க முடிமாமல் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் காணமல் போய்விட்டன. இந்த நிலையில் இருப்பதோ பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தான். இந்த நிலையில் இந்த நிறுவனங்களும் ஜியோவின் இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. இந்த நிலையில் இந்த அபராதம் மேலும் இந்த நிறுவனங்களுக்கு பிரச்சனை கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
யாருக்கு எவ்வளவு?
ஜியோவால் தொடர்ந்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஏழரைச் சனியே. ஆமாங்க.. மத்திய டெலிகாம் ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அபராத தொகையாக ரூ.1,050 கோடியும், வோடபோன் நிறுவனத்திற்கு ரூ.1,050 கோடியும், இதுவே ஐ.டியா நிறுவனத்திற்கு ரூ.950 கோடியும் பரிந்துரை செய்துள்ளதாம்.
புகாரை டிராய் உறுதி செய்தது!
மத்திய டெலிகாம் ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கடந்த 2016ல் அக்டோபரில் ஜியோவின் இந்த புகாரை உறுதி செய்தது. இந்த நிலையில் டிராயின் தீர்ப்பின் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவில் இந்த நிறுவனங்களின் வர்த்தகம் நஷ்டத்தில் இருப்பதாக கூறி வரும் இந்த நிறுவனங்கள் சட்ட பூர்வமாக மீண்டும் எதிர்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொலை தொடர்பு நிறுவனங்கள் இரு பிரிவு
அபராதம் விதிக்கபட்ட பழைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு புறம், மறுபுறம் ஜியோவுடன் டிராயும் சேர்ந்து கொண்டது. இதுகுறித்து செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI) கூறுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து தொலைதொடர்பு ஆபரேட்டர்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகிறது. இது கட்டுப்பாட்டாளருக்கு எதிராக சார்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இந்த நிலையில் இந்த விஷயம் பிரதமர் அலுவலகம் வரை சென்று வந்து விட்டது.
குற்றசாட்டுகள் நிராகரிப்பு
இந்த நிலையில் ஜியோவும் டிராயும் அனைத்து சார்பு குற்ற சாட்டுகளையும் நிராகரித்துள்ளதாம். இது குறித்து கூறியுள்ள ஜியோ, ஜியோ நிறுவனம் தனது குரல் மற்றும் டேட்டா சேவையில் வழங்கி வரும் சலுகைகளாலும், அடிமட்ட விலைக்கு கொடுத்து வருவதாலும் இன்றுவரை தொலைத் தொடர்பு துறையில் தனித்து நின்று வருகிறது. எனினும் ஜியோவின் இந்த அதிரடி ஆட்டத்தை தாக்குபிடிக்க முடியாத வோடாபோன் மற்றும் ஐடியா இணைப்புக்கு இடையே ஒரு பலவீனமான போக்கையும் இது ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications