கமிஷனுக்கு நோயாளியை விற்ற ஈரோடு சம்பவம்! விஜயண்ணா பிறந்த நாளில் நடந்த லைவ் மெர்சல் காட்சிகள்!

ஈரோடு அருகில் சூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இனியன் கடந்த மே மாதம் தன் 14 வயது மகள் ரித்திகா உடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு விபத்து ஏற்படுகிறது.

ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே பைக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் இவர்கள் வந்த பைக்கின் மீது மோத அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுமி ரித்திகாவுக்கு காலில் பலத்த அடிபட்டு ரத்தம் வழியத் தொடங்கிவிட்டது.

அருகில் இருந்த கிராமவாசிகள் அவசரமாக 108 ஆம்புலன்ஸுக்குப் ஃபோன் செய்தார்கள். 108-ம் சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தனியார் மருத்துவமனை

தனியார் மருத்துவமனை

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ரித்திகாவை அழைத்துச் செல்ல வந்திருக்கிறது. அவசரத்துக்கு எந்த ஆம்புலன்ஸாக இருந்தாலும் பரவாயில்லை என ஏறி, விரைவாக தங்கள் குடும்ப மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொல்லி இருக்கிறார்கள் ரித்திகாவின் அப்பா இனியன். ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ அது வேண்டாம், இவர்கள் நன்றாகப் பார்ப்பார்கள் என ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் செந்தில் குமரன். மருத்துவமனையில் உடனடியாக எக்ஸ்ரே எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்.

மோல்டட் பிளேட்

மோல்டட் பிளேட்

"கால்ல எலும்பு முறிஞ்சிருக்குங்க. உடனே ஆபரேஷன் பண்ணனும். இல்லன்னா எதிர்காலத்துல பெரிய பிரச்னை வரும்" என வழக்கம் போல மருத்துவமனை பெற்றோர்களை பயமுறுத்தி இருக்கிறது. அதோடு நிற்காமல் "உங்க பொண்ணு பெரிய விளையாட்டு வீராங்கணையாமே, எதிர்காலத்துல எந்த பிரச்னையும் வராம இருக்க மோல்டட் பிளேட் வெச்சிருவோம். கொஞ்சம் விலை அதிகம் அதுக்கு 75,000 செலவாகும்" என தூண்டில் விரித்திருக்கிறார்கள்.

75000 பணம்

75000 பணம்

ரித்திகா பெற்றோர்களும் அழுது புரண்டு எப்படியோ பணத்தைத் தயார் செய்து மருத்துவமனையில் 75,000 ரூபாயைக் கட்டி விட்டார்கள். அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் கழித்து வீட்டுக்குச் வந்துவிட்டார் ரித்திகா. சிகிச்சை முடிந்த சில நாட்கள் ஆகியும், ரித்திகாவுக்கு காலில் கடுமையான வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. மீண்டும் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டரில் சொல்லி சிகிச்சைக்குப் போய் இருக்கிறார்கள்.

எக்ஸ் ரே

எக்ஸ் ரே

மீண்டும் எக்ஸ்ரே எடுத்த போது எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் மோல்டட் பிளேட் தெரியவில்லை. அதற்கு பதிலாக இரண்டு கம்பி மட்டுமே தெரிந்தது. மருத்துவர்களிடம் கேட்ட போது "மோல்டட் பிளேட்கள் எப்போதும் எக்ஸ்ரேவில் தெரியாது" என சமாளித்திருக்கிறார்கள். ரித்திகாவின் பெற்றோர்களுக்கு சந்தேகம் வலுக்க, ஒரு மறு பரிசோதனைக்காக மற்றொரு மருத்துவமனையில் காட்டி இருக்கிறார்கள்.

மற்றொரு சோதனை

மற்றொரு சோதனை

"எலும்பு முறிவுக்கு முறையான சிகிச்சை செய்ய வில்லை. எனவே காலில் உள்ள கம்பி உள்ளே சதையைக் குத்தி குத்தி பெரிய புண்ணாகி இருக்கிறது. அதனால் தான் காலில் சீழ் பிடித்து மோசமான நிலையில் இருக்கிறது" என உண்மையை போட்டு உடைத்துவிட்டார்கள். கோபமும், வலியும் பீறிட அனைத்தையும் அடக்கிக் கொண்டு நேரடியாக ஈரோடு காவல் கண்காணிப்பாளரிடம் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டரில் நடந்த விஷயங்களையும், செய்த சிகிச்சைகளைப் பற்றியும் விவரமாகச் சொல்லி புகார் கொடுத்து இருக்கிறார்கள் ரித்திகாவின் பெற்றோர்கள்.

108-ம் புகார்

108-ம் புகார்

"விபத்து நடந்தப்பவே நாங்க, எங்களோடு குடும்ப டாக்டர் வீட்டுக்குத் தான் வண்டிய விடச் சொன்னோம். ஆனா இந்த தனியார் ஆம்புலன்ஸ் ட்ரைவர் தம்பி தான் இங்க நல்லா பாப்பாங்கன்னு சொல்லி ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைச்சிக்கிட்டு வந்தாரு. இந்த ஆஸ்பத்திரி வைத்தியருங்க எங்க பொண்ணுக்கு முறையா வைத்தியம் பாக்கல. அவங்க இஷ்டத்துக்கு ஏதோ சிகிச்சை செஞ்சி எங்க பொண்ணோட உசுரோட விளையாடிட்டாங்க, அவங்கள விசாரிச்சி தண்டிக்கணும்ங்க" என குமுறுகிறார்கள் ரித்திகாவின் பெற்றோர்கள்.

ஆம்புலன்ஸ் பிரச்னை

ஆம்புலன்ஸ் பிரச்னை

அதோடு "என் பொண்ணுக்கு அடி பட்டப்ப எங்க கிராமத்தாளுங்க சில பேர் 108-க்குத் தான் போன் பண்ணாங்க. அவகளும் சில நிமிஷத்துள வந்துடரதாத் தான் சொல்லி இருந்தாய்ங்க. ஆனா வந்தது என்னமோ தனியார் ஆம்புலன்ஸ் தான். ஆக இந்த 108 அரசுத் துறைக்கும், தனியார் ஆஸ்பத்திரிங்களுக்கும் ஏதோ வணிக தொடர்பு இருக்காங்குறத எல்லாம் கண்டு பிடிச்சி கடுமையான நடவடிக்கை எடுக்கணும்ங்க" என மொத்த விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்கள் வேதனையில் இருக்கும் ரித்திகா பெற்றோர்கள்.

மருத்துவர் பதில்

மருத்துவர் பதில்

ரித்திகாவின் பெற்றோர்கள் புகாரைப் பற்றி ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டரில் கேட்ட போது "எங்க மருத்துவமனைக்கு வேண்டாத ஒரு சிலரோட தூண்டுதலாலத் தான் இந்த மருத்துவமனை மேல இது மாதிரி புகார் தர்றாங்க. சம்பந்தப்பட்ட குடும்பம் மூலமா என் கிட்ட 5 லட்சம் வரை பணம் கேட்டாங்க. எங்க மருத்துவ சிகிச்சை சரியாத் தான் இருக்கு. அதுல எந்த தவறும் இல்லை. ஆகையால நாங்க ஒரு பைசாகூட கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டோம். நாங்க கொடுத்த சிகிச்சையை ஒரு மருத்துவ கமிட்டி வெச்சி ஆய்வு செஞ்சி விசாரிக்கட்டும். அதில் ஏதாவது தப்புன்னு சொன்னா நாங்க ஏத்துக்குறோம்" என பதில் கொடுத்திருக்கிறார்கள் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் நிவாகத்தினர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+