டெல்லி: மோடியின் 2.0 அமைச்சர்கள் பதவி ஏற்ற உடனேயே முதல் 100 நாட்களுக்குள் செய்ய வேண்டிய விஷயங்களில் ரயில்வே நிர்வாகத்தையே சிறப்பாக இயங்கக் கூடிய ஒரு அமைப்பாக மாற்ற வேண்டும் எனச் சொல்லி இருந்தார்களாம்.
ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலும் அதிரடியாக Indian Railways நிர்வாகத்தை மறுசீரமைக்க பல வேலைகளை பார்த்து வருகிறாராம்.
அதன் முதல் கட்டமாக சீனியாரிட்டி பார்த்து ரயில்வே போர்ட், பிராந்திய தலைவர்கள் மற்றும் பொது மேலாளர்கள் போன்ற பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பதை நிறுத்தப் போகிறார்களாம். தேவைப்படாத ஊழியர்களை எல்லாம் Layoff-ம் செய்யப் போகிறார்களாம்.
திறமை +அனுபவம்
ரயில்வே போர்ட்டில் நல்ல திறமைசாலிகளை, அவர்கள் திறமை மற்றும் அனுபவத்துக்கு தகுந்தாற் போல பதவிகளில் அமரச் செய்யப் போகிறார்களாம். அதோடு பிராந்திர ரயில்வே நிர்வாக பதவிகளான Divisional Railway Managers, General Managers போன்றவர்களையும் இந்த திறமை அடிப்படையிலேயே பதவி கொடுக்கப் போகிறார்களாம். அப்படியே ரயில்வே உட் துறைகளில் பிரச்னைகள் இல்லாமல் வேலை நடக்கவும் திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.
இனி தனி துறைகளுக்கு நோ
ஒரே நாடு ஓரே வரி, ஒரே நாடு ஒரே தேர்தல், போன்ற விஷயங்களை இப்போது ரயில்வே நிர்வாகத்திலும் கொண்டு வரப் போகிறார்கள். ஒரே நாடு ஒரே ரயில்வே, துறைகளுக்கு இடம் இல்லை. தற்போது இந்திய ரயில்வே பல துறைகளாக பிரிந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பல துறைகளாக பிரிந்திருப்பதால் ஒட்டு மொத்தமாக ரயில்வே நிர்வாகம் செயல்பட முடியாமல் இருக்கிறது. ஆனால் தனித் தனி துறைகளாக மட்டுமே சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என 2015-ம் ஆண்டு பிபெக் தேபராய் கமிட்டி அறிக்கைகள் சொல்கிறதாம்.
ஒரே நாடு ஒரே ரயில்வேஸ்
எனவே மீண்டும் Indian Railways நிர்வாகம் ஒரு மத்திய நிறுவனம் சார்ந்த அமைப்பாக மாற்ற லே அவுட் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அதோடு இவ்வளவு பெரிய Indian Railways-ல் பல பேர் ஒரே வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது தேவை இல்லாமல் ஒரே துறையில் வேலை பார்ப்பவர்களை, ஆள் பலம் அதிக தேவைப்படும் துறைகளுக்கு பணி இட மாற்றம் செய்யப் போகிறார்களாம். அதோடு ஒருவரின் பணி ரயில்வேஸுக்கு தேவை இல்லை என்கிற நிலை வந்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்பவும் தயாராக இருக்கிறார்களாம். இதைத் தான் ஆங்கிலத்தில் Restructuring and Resizing என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
தொழில்நுட்பம்
மிக முக்கியமாக Indian Railways-ல் நிறைய தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறார்களாம். இதை எல்லாம் தாக்கு பிடித்து கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல வேலை பார்க்கத் தயாராக இருப்பவர்களை மட்டும் வைத்து வேலை பார்க்கப் போவதாகச் சொல்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். ஆக இனி Indian Railways-ல் கூட HR அரசியல்கள், அலைக்கழிப்புகள், அப்பரைசல் அலப்பறைகள் எல்லாம் நடக்கப் போகிறது. இன்னும் கொஞ்சம் விட்டால், கார்ப்பரெட் கம்பெனிகள் போல ரயில்வே ஊழியர்களின் செயல்பாடு அடிப்படையில் ஊதியம் வழங்குவார்கள் போல..? நடந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications