அல்வாவும் கிண்ட ஆரம்பிச்சாச்சு.. பட்ஜெட்டும் வந்தாச்சு.. அடுத்து என்ன நடக்க போகிறதோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியா என்றாலே அது பாராம்பரியம் சம்பிரதாயம் பழமை என இருக்கும். இங்கு சம்பிரதாயங்களுக்கும் சாங்கியங்களுக்கும் ஒரு தனி இடமே உண்டு. அப்படிப்பட்ட நம் நாட்டில் எல்லாவற்றுக்குமே ஒரு சம்பிரதாயம் உண்டு.

ஆமாங்க.. அது நம்ம இந்திய பட்ஜெட்டிலும் கூட உண்டு. பட்ஜெட் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பு, சம்பிரதாயப்படி அல்வா கிண்டும் பழக்கம் உண்டாம். ஒரு வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னரே இனிப்புடன் துவங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போதே பழங்கால சம்பிரதாயப்படி அல்வா கிண்டும் பழக்கம் இருந்து வந்து உள்ளது.

பட்ஜெட் ரெடியாகிடுச்சு

பட்ஜெட் ரெடியாகிடுச்சு

இந்த வேலையை ஆரம்பிக்கும் முன்னர் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கமாம். நல்ல வழக்கம் இல்ல.. அந்த வகையில் டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

ஜீலை 5 பட்ஜெட் தாக்கல்

ஜீலை 5 பட்ஜெட் தாக்கல்

இதையடுத்து 2019 - 2020ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் ) அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாம். நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க.. ஜீலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட ஆரம்பித்து விட்டது.

யாரும் வீட்டுக்கு போகக் கூடாது?

யாரும் வீட்டுக்கு போகக் கூடாது?

பட்ஜெட் குறித்த தகவல்கள் குறித்து வெளியே கசிந்து விடக்கு கூடாது என்பதற்காக இந்த பணியில் ஈடுபடும் யாரும் வெளியே செல்ல கூடாது. இந்த பட்ஜெட் பணி நிறைவடையும் வரை அனைவரும் இங்கேயே தங்கி இருக்க வேண்டுமாம். முக்கிய சில மந்திரிகளுக்கு மட்டும் இங்கிருந்து வீட்டிற்கு செல்ல அனுமதி உண்டாம்.

மக்களின் எதிர்பார்ப்பு?

மக்களின் எதிர்பார்ப்பு?

பரப்பரப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்கல் மக்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏனெனில் மோடி 2.0 அரசில் இது முக்கியதுவம் வாய்ந்த பட்ஜெட் ஆக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. அதோடு விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இது விவசாயிகள் மத்தியில் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: budget பட்ஜெட்
English summary

Halwa' ceremony marks Printing of Budget 2019-20

Finanve minister Nimala seetharam and senior officials of the ministry Saturday observed the symbolic Halwa ceremony to mark the launch formal printing of ducuments relating to the Budjet Documents.
Story first published: Sunday, June 23, 2019, 10:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X