டெல்லி : சர்வதேச அளவில் பல நாடுகளை ரவுண்டுகட்டி அடிக்கும் அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் ஓசாகா மாகாணத்தில் நடக்கவிருக்கும் G20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆமாங்க.. அமெரிக்கா முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. இந்த நிலையில் இந்தியாவுக்கு கிடைத்து வந்த நன்மைகளையும் பிடுங்கிக் கொண்டார் டிரம்ப். இதனால் பல ஆயிரம் கோடி லாபம் கிடைப்பது குறையலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்தியா போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகளுக்கு கிடைத்து வந்த நன்மைகளை, அமெரிக்கா நிறுத்தியதோடு, இந்த நிலையில் அமெரிக்கா இந்தியா மாணவர்களுக்கும், இந்திய ஐ.டி ஊழியர்களுக்கும் பிரச்சனையை கிளப்பும் வகையில் விசாவிலும் கட்டுப்பாடுகளை விதித்தது.
டிரம்பை சந்திக்கும் மோடி
இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்கிறார். அதோடு இந்த மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தையும் நடத்துகிறார்.
டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த போகும் மோடி?
இந்தியாவை அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கிய விவகாரத்தால், எழுந்துள்ள இரு தரப்பு வரி விதிப்பு பிரச்சினை, விசா விவகாரம், இரு தரப்பு ராணுவ, அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு அமெரிக்கா வெளியுறவு மந்திரி வருகை?
எனினும் ஜப்பானில் நடக்கவிருக்கும் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஜீன் 25-ம் தேதி இந்தியா வருகிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மைக் பாம்பியோவின் வருகையின் போது மோடி, டிரம்ப் சந்திப்பின்போது பேச விரும்பும் அம்சங்கள் பற்றி பேசப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்கா – சீனா வர்த்தக பிரச்சனை முடிவுக்கு வரலாம்?
இதற்கிடையில் சீன அதிபர் ஜின்பிங் - அமெரிக்கா அதிபர் டிரம்பை சந்திக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் ஜி20 மாநாட்டில் அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படலாம் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக நிலவி வரும் வர்த்தக போர் பற்றி பேசப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் இந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications