ஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அரசு பொது நிறுவனங்களின் சுரங்கங்களை தனியார் மையமாக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருடத்துக்கு 400 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

 

ஏற்கனவே இந்தியாவில் உள்ள 42 பொதுத்துறை நிறுவனங்களை ஒன்று மூட வேண்டும் இல்லையேல் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று ஏற்கனவே நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் அனில் அகர்வால் இந்த கோரிக்கை இன்னும் அரசை உசுப்பேற்றுவதாகவும் உள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் 3 தொழிலதிபர்களும் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் 3 தொழிலதிபர்களில் ஒருவர் தான் வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால்.

அன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர்! அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்!

இறக்குமதி செலவு மிச்சமாகும்?

இறக்குமதி செலவு மிச்சமாகும்?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அனில் அகர்வால் கூறியதில், 5 பொதுத்துறை நிறுவனங்களின் சுரங்களை தனியார் மையம் ஆக்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 400 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்றும். இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். அதோடு பொருளாதாரமும் வளர்ச்சியடையும், மேலும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும் என்றும் என்றும் கூறியுள்ளாராம் அனில் அகர்வால்.

சுரங்க நிறுவனங்கள்?

சுரங்க நிறுவனங்கள்?

ஹிந்துஸ்தான் ஜிங்க், ஹிந்துஸ்தான் காப்பர், கோலார் தங்க சுரங்கம், யுரேனியம் கார்ப்பரேஷன் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் என்.எம்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களை தனியார் மையமாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளராம்.

ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
 

ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் பங்குகளை தான் வாங்கிய போது வெறும் 5000 ஊழியர்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது அந்த நிறுவனத்தில் 25,000 ஊழியர்கள் உள்ளார்கள் என்றும் அனில் அகர்வால் கூறியுள்ளார். அதோடு கடந்த 2002 - 2003ல் வேதாந்தா நிறுவனம், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 64.9 சதவிகித பங்குகளை வாங்கியது. மீதமுள்ள 29.5 சதவிகித பங்குகள் மட்டுமே அரசிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் அனில் அகர்வால்.

உலோக உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்

உலோக உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்

அரசு விரைவில் என்ணெய் எரிவாயு மற்றும் தங்கம் உள்ளிட்ட உலோக உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், தற்போது 400 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து கொண்டிருக்கும் இந்தியா, பின்னர் 1 டிரில்லியன் டாலர் இறக்குமதிக்காக கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளராம்.

சுயாட்சி வழங்க வேண்டும்?

சுயாட்சி வழங்க வேண்டும்?

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் சரி, பொதுத்துறை வங்கிகளும் சரி, தானே இயங்கும் அளவுக்கு சுயாட்சியாக செயல்பட்டால் ஒன்று மூன்று மடங்கு சிறப்பாக செயல்படும். ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என்ன இல்லை. மிகப்பெரிய ஆற்றலும், அபரீமிதமான திறமையும் உள்ளது. ஆனால் அதன் நிர்வாகிகள் விசாரனைக்கு பயந்தே முடிவு எடுக்க பயப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil agarwal said Privatise mining firms to cut import bills

Anil Agarwal chairman of Vedanta Resources, has reportedly asked the government to privatise five mining companies, including Hindustan Zinc, which will help India save $400 billion that it spends annually on imports. Also its may help for new job creating and Economy growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X