டெல்லி : முன்னரே பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவுக்கு, கடந்த மாதம் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஒரு மரண அடியைக் கொடுத்தார். ஆமாங்க.. இந்தியாவுக்கு கிடைத்து வந்த GSP சலுகையை ரத்து செய்தார்.
இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது என்றாலும், குறிப்பாக நகை ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகள் ஏற்றுமதி மிக பாதிப்படைந்துள்ளதாகவும், இது இந்த துறைக்கு ஒரு பேரிடியாக உள்ளதாகவும் ஆய்வு நிறுவனமான கிரிசில் ஆய்வறிக்கையில் கொடுத்துள்ளது.
மேலும் இது இந்தியாவின் கற்கள் மற்றும் ஆபரண துறையில் இது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.
ஏற்றுமதியை குறைத்த வணிகர்கள்
இந்த ஜி.எஸ்.பி வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுக்கு இனி இல்லை என்று கூறிய நிலையில், இந்தியா நகை ஏற்றுமதியாளர்கள் நகைக்கு கூடுதலாக 7 சதவிகிதம் வரியை செலுத்த வேண்டி இருக்கும் என்றும் ஏற்றுமதியை குறைத்துக் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது. அதோடு கடந்த 2018ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 15 சதவிகிதம் ஏற்றுமதியாளர்கள் இந்த சலுகையை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைமுகமாக பலரை தாக்கும்
ஒரு புறம் ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இது இன்னும் வேலையில்லாதோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜி.எஸ்.டி வரியோடு சேர்ந்து, ஏற்றுமதி வரியும் அதிகரித்துள்ளது. இதனால் ஆபரணங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு புறம் போட்டிகள் அதிகரித்து வரும் இந்த நிலையில் விலையும் அதிகரித்தால் மக்கள் நம்முடைய பொருட்களை வாங்க மறந்துவிடுவார்கள். இதனால் உற்பத்தி செலவு மற்றும் வேலையாட்கள் குறைப்பதன் மூலம் இந்த சவாலை சமாளிக்க முடியும் என்ற கருத்துகளும் முன்வைக்கபடுகிறதாம்.
வேலையில்லாத் திண்டாட்டம்
இந்தியாவில் ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருவதால், இந்த ஜி.எஸ்.பி பிரச்சனையால் இன்னும் வேலையிழப்போர் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017 -2018ம் ஆண்டில் 5 மில்லியன் மக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவும் வேலை தரப்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், மறு புறம் தற்போது நிறுவனங்களில் வேலையில் இருக்கும் ஊழியர்களும், நிரந்திரமில்லாத தற்காலிக ஊழியர்களும் பணியிழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கடன் பிரச்சனை
ஒரு புறம் நிறுவனத்தினால் செய்ய முடியாத அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கும் போது அதை ஜாப் ஆர்டர்களாக வெளியில் உள்ள சிறு குறு தொழிலாளர்களுக்கும், குடிசைத் தொழிலாக செய்பவர்களுக்கும் கொடுத்து செய்வார்கள். ஆனால் தற்போது சம்பளக் கூலி, செய்கூலி ஏற்றுமதி வரி என அனைத்தையும் கணக்கிட்டு பார்க்கும் போது ஏற்றுமதியாளர்கள் முதலீட்டிற்கான தொகையினை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் ஆர்டர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளன. இதனால் நகை வடிவமைப்பை கைத்தொழிலாக செய்யும், குடிசைத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கருதப்படுகிறது.
அதிகரிக்கும் பொருளாதார அழுத்தங்கள்
ஒரு புறம் மெக்ஸிகோ, கனடா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி அதிகரித்துள்ளதால் இந்தியாவுக்கு அது கடும் போட்டியாளர்களாகவே கருதப்படுகிறது. இது இந்திய உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் ஏற்றுமதி துறை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, வேலையிழப்பும் அதிகரிக்கும் சூழலுக்கு இந்தியா ஆளாகியுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications