என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒரு புறம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள். வரியை கட்டிவிட்டு வறட்சியால் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் கிடைத்த தண்ணீருக்கு வரி கட்டாமல் இருந்து வருகின்றனர்.

என்ன கொடுமை எனில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரா பட்னாவிஸ் முதல் கொண்டு, சில அமைச்சர்களும் இந்த பட்டியியல் உள்ளதாக மும்பை நகராட்சி அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆமாங்க.. மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரரான தேவேந்திர பட்னாவிஸ். இவர் நாக்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வரே தண்ணீர் வரி பாக்கியா?

முதல்வரே தண்ணீர் வரி பாக்கியா?

இந்த நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் இவர் ரூ.7,44,981 தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளார் என மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. இவர் மட்டும் இன்றி 18 மந்திரிகளும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனராம். ஆமாங்க.. அவர்களும் தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளனர் என கூறியுள்ளது. இந்த நிலையில் வரி பாக்கியினை உடனடியாக செலுத்துமாறு 19 பேருக்கும் மும்பை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி?

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி?

மும்பை மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் ஷகீல் அகமது என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கேட்டிருந்த போது, இதற்கு பதிலளித்துள்ள மும்பை மாநகராட்சி மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் இதர அரசியல் தலைவர்கள் 8 கோடி ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவேந்திர பட்னாவிஸின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களா, சுமார் ஏழரை லட்சம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மட்டும் இல்ல, நிதியமைச்சரும் தான்?

முதல்வர் மட்டும் இல்ல, நிதியமைச்சரும் தான்?

குறிப்பாக இந்த லிஸ்ட்டில் முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸின் வர்ஷா பங்களா அதிக தொகையை வரி கட்ட வேண்டியுள்ளதாகவும், இதற்கு அடுத்தாற்போல் நிதியமைச்சர் சிதிர் முங்கந்திவாரின் தேவகிரி பங்களாவுக்கு 4,45,055 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், இதே போக்குவரத்து துறை அமைச்சர் திவாகர் ராவ்தேவின் மெக்தூட் பங்களா 1,61,719 ரூபாயயும், இதுவே குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பங்கஜா முண்டே 35,033 ரூபாயும் பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அங்கேயுமா பாக்கி வைப்பாங்க?

அங்கேயுமா பாக்கி வைப்பாங்க?

இவர்கள் தவிர ஆஷிஷ் ஷெலார், சுபாஷ் தேசாய், ஏக்நாத் ஷிண்டே, சந்திர சேகர் பவன் குலே மற்றும் மஹாதேவ் ஜங்கர், ஆகியோரும் இந்த பட்டியலில் பணம் செலுத்த தவறியதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர அமைச்சரின் உத்யோகபூர்வ விருந்தினர் மாளிகையின் நிலுவை தொகையும் 12,04,390, ரூபாயும் உள்ளதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pending Water Bills of Over Rs 7 Lakh in CM Bungalow

Pending Water Bills of Over Rs 7 Lakh in CM Bungalow
Story first published: Monday, June 24, 2019, 18:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X