பிஎம்-கிஷான் திட்டத்தின் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இதில் உதவித் தொகை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும்.
டெல்லி: வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கும் பிஎம்-கிஷான் திட்டத்தின் மூலம் இதுவரையிலும் சுமார் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் வரையில் செலவழிக்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் கனவுத் திட்டமான பிஎம்-கிஷான் சம்மான் நிதித்திட்டத்தின் மூலமாக முதல் தவணையாக 3.11 கோடி விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது தவணையாக 2.75 கோடி விவசாயிகளுக்கு 2 தவணைகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிஎம்-கிஷான் உதவித் திட்டத்தின் மூலமாக முதல் தவணையாக 3 கோடியே 29 லட்சத்து 52 ஆயிரத்து 568 விவசாயிகளுக்கு சுமார் 6 ஆயிரத்து 590.51 கோடி ரூபாயும். இரண்டாவது தவணையாக 2 கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 889 விவசாயிகளுக்கு சுமார் 5 ஆயிரத்து 714.77 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளதாக தோமர் தெரிவித்துள்ளார்.
வறுமையில் விவசாயிகள்
நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் வறுமைக்கோட்டுக்கு கீழேயே உழல்வதால் நாட்டின் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு பொருளாதார வளர்ச்சியும் மத்திய அரசு எதிர்பார்த்த இலக்கை எட்டமுடியாமல் திண்டாடிவருகிறது. இதனை உணர்ந்த பிரதமர் மோடியும் விவசாயிகளின் வாழ்வை வளமாக்க முடிவெடுத்தார்.
பிஎம்-கிஷான் திட்டம்
இதனையடுத்து விவசாயிகளின் குறைந்த பட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தை (Pradhan Mantri Kisan Samman Siddhi-PM-KISAN) கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தினார். இதற்காக சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அறிவித்தார்.
இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
பிஎம்-கிஷான் (PM-KISSAN) திட்டத்தில் முதலில் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது சுமார் 3.66 கோடி விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி பிஎம்-கிஷான் திட்டத்தை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் முறைப்படி தொடங்கிவைத்தார். முதல் தவணையாக இதுவரையிலும் சுமார் 3.03 கோடி விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது தவணையாக சுமார் 2.75 கோடி விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 14.01 லட்சம் விவசாயிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குறதி
பிஎம்-கிஷான் திட்டம் விவசாயிகளிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, பிரதமர் மோடி இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டார். இடையில் லோக்சபா தேர்தல் குறுக்கிட்டதால், பிஎம்-கிஷான் திட்டத்தை செயல்படுத்த முடியாமல்போய்விட்டது. ஆனாலும் தனது தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்போவதாக உறுதியளித்திருந்தார்.
விவசாயிகள் அளித்த வெற்றி
மோடியின் வாக்குறுதியை நம்பியே நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் வாக்குகளை ஆளும் பாஜக கூட்டணிக்கே அளித்து மோடியை வெற்றி வாகைசூட வைத்தனர். வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக அமர்ந்த உடன் முதல் கையெழுத்தாக பிஎம்-கிஷான் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.
14.5 கோடி விவசாயிகள்
பிஎம்-கிஷான் திட்டத்தில் பிரதமர் கையெழுத்திட்ட உடனேயே மத்திய கேபினட் அமைச்சரவையும் இத்திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டது. இதன்மூலம் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுமார் 14.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக சுமார் 87 ஆயிரத்து 217 கோடி ரூபாய் வரையிலும் செலவாகும் என்றும் மத்திய அமைச்சரவை தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிஎம்-கிஷான் திட்டத்திற்கு இதுவரையிலும் சுமார் 12 ஆயிரத்து 305 கோடி ரூபாய் வரையில் செலவழிக்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் தவணை செலவு ரூ,5,714.77 கோடி
பிஎம்-கிஷான் உதவித் திட்டத்தின் மூலமாக முதல் தவணையாக 3 கோடியே 29 லட்சத்து 52 ஆயிரத்து 568 விவசாயிகளுக்கு சுமார் 6 ஆயிரத்து 590.51 கோடி ரூபாயும். இரண்டாவது தவணையாக 2 கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 889 விவசாயிகளுக்கு சுமார் 5 ஆயிரத்து 714.77 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளதாக தோமர் தெரிவித்துள்ளார்.
பிஎம்-கிஷான் இணையதளம்
பிஎம்-கிஷான் திட்டத்தின் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இதில் உதவித் தொகை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் வகையில், அவர்களின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற அனைத்து தரவுகளும் மாநில அரசுகளால் சரிபார்க்கப்படுகின்றன. இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அவை உடனடியாக சரி செய்யப்பட்டு, பின்பு பிஎம்-கிஷான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றும் தோமர் தெரிவித்தார்.
நேரடியாக வரவு வைக்கப்படும்
பிஎம்-கிஷான் திட்டத்தில் முதலில் விவசாயிகள் அளித்த ஆவணங்களில் பெரும்பாலானவை குளறுபடியாக இருந்ததால், பிஎம்-கிஷான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் இவையனைத்தும் அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பின்னர் அவை மாநில அரசுகளால் சரி செய்யப்பட்டு உடனடியாக பிஎம்-கிஷான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனையடுத்து உதவித் தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டன. பிஎம்-கிஷான் இணையதளத்தில் விவசாயிகள் தங்களின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்த நாளிலிருந்து நான்கு மாதங்கள் கழித்து தொடர்ச்சியாக விவசாயி உதவித் தொகை பெற தகுதி உடையவர்கள் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தோமர் விளக்கமளித்தார்.


Click it and Unblock the Notifications