சென்னை : என்னய்ய சொல்றீங்க 2015ல தண்ணிலேயே மிதந்த நகரத்துல, இன்னிக்கு தண்ணி இல்லையா? ஆமாங்க.. நம்ம சென்னைய தான் சொல்றாங்க..
இந்தியாவில் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கும் நகரங்களில், டாப் 20 லிஸ்டில், தலை நகர் சென்னையும் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
அதிலும் கடந்த 2018ல் இருந்தே இந்த வறட்சி நிலவுவதாகவும், அதுவும் சென்னைக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமாக உள்ள நீர் நிலைகளும் மிக மோசமான நிலைகளில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
குடியிருப்புகளில் குடி தண்ணீரே இல்லை?
சென்னையில் அடிப்படை தேவையான குடி தண்ணீருக்கே இன்றைய நாளில் தட்டுபாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தண்ணீரால் நிரம்பி வழிந்த சென்னையில் இருக்க இடமின்றி 1.8 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். ஆனால் இன்றே அத்தியாவசிய தேவையான குடி தண்ணீருக்கே கஷ்டப்படுகிறார்கள்.
3 பில்லியன் டாலர் பொருட்சேதம்
இந்த பேரழிவால் 500க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதோடு 3 பில்லியன் டாலருக்கும் மேல் பொருட்சேதமும் ஏற்பட்டது. ஆனால் அதன் ஈரம் கூட இன்னும் நெஞ்சிலிருந்து காயவில்லை. ஆனால் சென்னையில் வறட்சி நிலவுகிறது. மிகவும் வறட்டு போயுள்ளது. குடிதண்ணீரே இல்லாத நிலை நிலவி வருகிறது.
இந்தியாவில் தண்ணீர் பிரச்சனையில் சென்னை தான் டாப்?
wss assessment வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தண்ணீர் பிரச்சனை நிலவி வரும் 400 நகரங்களை தேர்தெடுத்ததில் சென்னை உள்ளதாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மிக மோசமாக தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடாத 20 நகரங்களை தேர்தெடுத்ததிலும் சென்னை தான் முதல். சென்னைக்கு அடுத்தபடியாக தான் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களே உள்ளது என்றால் பார்த்துக்கோங்க..
நதிகள் உள்ள நகரங்களிலும் வறட்சி?
இதில் கொடுமை என்னவெனில் இந்த வறட்சி பிடியில் சிக்கியுள்ள சில நகரங்கள் அதிக நதிகள் பாயும் நகரமாம். இந்த நதிகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அந்த தண்ணீர் வீணாவதாகவும் கூறியுள்ளது.
காடுகளையும் இழந்து வருகிறோம்
ஒரு புறம் ஈரப்பதமான நிலங்களை இழந்து வருகிறோம் என்றும், குறிப்பாக சர்வதேச அளவில் 1970 முதல் இதுவரை 35 சதவிகித ஈர நிலங்களை இழந்துவிட்டோம் என்றும், அதோடு காடுகளையும் மூன்று மடங்கு வேகத்தில் இழந்து வருகிறோம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இயற்கை கழிவு நீர்தொட்டியை இழக்கிறார்கள்
ஈர நிலங்கள் என்பது மிக முக்கியம். கொல்கத்தா போன்ற நகரங்களின் கழிவு நீரை கிழக்கு கொல்கத்தாவில் உள்ள ஈர நிலங்கள் மூலம் தான் வடிக்கட்டப்பட்டன. ஆனால் இந்த ஈர நிலங்கள் சுருங்கும் போது இயற்கை கழிவு நீர் தொட்டியை இழப்பதாக கருதப்படுகிறது. போதுமான கழிவு நீர் சுத்திகரிப்பு இல்லாத சமயத்தில் தான் கழிவு நீர்கள் நேரிடையாக சென்று ஆற்றில் செல்கிறது. உதாரணத்திற்கு கங்கை ஆற்றையே கூறலாம். கழுவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படதாதால், இங்கு கழிவு நீரும் ஆற்று நீரும் ஒன்றாக கலந்து ஆற்றில் செல்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications